Anjana - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Anjana |
இடம் | : Jaffna, Sri Lanka |
பிறந்த தேதி | : 21-Oct-1986 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 193 |
புள்ளி | : 11 |
தொப்புள் கொடி அறுத்த அவள் உறவும்
தொப்புள் கொடி அறுத்து வந்த உன் உறவுமே
என்னுள் ஒரு உள்ளுணர்வு உறவை உணர்கிறேன்
அம்மா என்றழைத்த உன் உறவும்
அம்மா என்றழைத்த என் உறவும்
இன்று நான் உனக்கு ஒரு சமர்ப்பணம்
அம்மா என்றழைத்த என் உறவு
நான் அம்மா என்றுணர்ந்த உணர்வை
உணர்கிறேன் எனக்குள் என் அம்மாவை!.
மொழியின் கர்ப்பம்!!!
என் தமிழென்னும் கற்ப பையில்
கவி என்னும் சிசுவும் வளர!!!
ஆணா பெண்ணா கேட்கிறார்கள்...
சிலர் ஸ்கேன் செய்தும் பார்க்கிறார்கள்!!
வலிகள் அதிகம்...அதனால்
வார்த்தைகள் தடிக்கும்-சில நேரம்
பரவசம் அதிகம்...அதனால்
பனித்துளி பரவும்!!!
வெகுஜன பார்வையில் நான் மலடு!!
நான் மட்டும் அறிவேன் எந்தன் சுவடு!!
வலித்திடும் போது ஆறுதல் வேண்டாம்
சிறு அரவனை போதும் உள்ளம் மகிழ!!
உணர்வுகள்- அது ஊமையாக!!
உவமைகள்- அது நீங்கலாக!!
நலமாய் பெற்றெடுப்பேன்-என்
கவியென்னும் குழந்தையை!!!
கரு: பன்முகம் காட்டும் பெண்முகம். ஒரு ஆயுளில் பல பரிணாமம் கொள்ளும் பெண்ணினப் பெருமை
முன் ஒருத்தி அழகணிந்து
என்னெதிரே நின்றாள் - என்
பின் ஒருத்தி தலைகுனிந்து
நடைபயின்று வந்தாள்
கண் ஒருத்தி கவிழத்தான்
கட்டிலிலே கனிந்தாள்
பண் ஒருத்தி பாடித்தான்
அழுகுரலை தணித்தாள்
தன் ஒருத்தி எண்ணாமல்
ஆணின்பணி புரிந்தால்
என் ஒருத்தி இடர்போழுது
தோழியாக இருந்தாள்
விண் ஒருத்தி தீண்டும் வண்ணம்
குலமகளாய் உயர்ந்தாள்
மண் ஒருத்தி சேரும்வரை
மாற்றத்தையே மணந்தாள்
மாற்றத்தையே மணந்தாள்!!!
மனிதா உன்
அழகு வலிமை
அறிவு அந்தஸ்து
கொண்டு ஆணவம்
கொள்ளாதே
உன்னுடன் இருக்க
பிடிக்காது உன்னுடல்
விட்டுச் சென்ற
எச்சத்தின் மிச்சம்தான்
உன்னுருவம் என்பதை
மறந்துவிடாதே...
நிசப்தம்
எனக்குள்ளே
ஒரு நிசப்தப் போராட்டம்
என்னை அறியாமல்
எனக்குள் நானாக!
தனிமையில்
சிந்திக்கையில்!
வேதனைகள் என் மனதை !
வாட்டுகையில் !
சொல்லவந்ததை சொல்லமுடியாமல்
தவிக்கையில் !
வேதனைகளோடு
நானும் நிசப்தமாகிறேன்.
தடுமாறிய பயணம்
விதி வரைந்த பாதை இது
வழி தடுமாறியதே!
வழி தடுமாறிய வேளையிலே
விதி முடிந்ததுவே!
பயணங்கள் முடிவதில்லை
பாதைகள் மாறியதால்!
மாற்றங்கள் நிகழ்கிறதே
தடுமாறிய பயணங்களால்!!!
என் காதல் அழியலாம்
அன்னையாய் வாழும் அண்ணிக்காக !!
எங்கோ தொலைந்த அன்னை அன்பை
இந்த விழிகள் வழியே பார்த்தேன் !!
இரவில் எந்நேரம் வந்தாலும்
உணவிட்டு மகிழும் விதத்தை
என்னவென்று சொல்வேன் - அச்சமயம்
நான் சொல்வதோ போதுமென்று
வரும் வார்த்தையோ இன்னும் கொஞ்சமென்று !!
என்றும் உழைத்தாலும்
நற்பெயர் யாதுமில்லை - அதற்காக
கண்ணீர் சிந்தாமல்
புன்னகை மட்டும் பரிசாய் தரும் அழகு !!
இன்னல்களை கூட என்னிடம்
பகிர்ந்து கொண்ட இதயம்
என்னை உருக வைத்தது !!
நான் செல்லும் போது பணம் தராமல்
அந்த கரங்கள் இருந்ததில்லை .
நான் வேண்டாம் என சொல்லி
இதயம் உடைவதை நான் விரும்பவில்லை
நண்பர்கள் (69)

ஆரோ
விழுப்புரம்,(சென்னை)

வீ முத்துப்பாண்டி
மதுரை

தமிழன் சாரதி
திருவண்ணாமலை

பார்த்திப மணி
கோவை

சேகர்
Pollachi / Denmark
இவர் பின்தொடர்பவர்கள் (69)

ஆய்க்குடியின் செல்வன்
ஆய்க்குடி - தென்காசி

சேகர்
Pollachi / Denmark
