Faiz81 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Faiz81
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  13-Dec-2016
பார்த்தவர்கள்:  34
புள்ளி:  2

என் படைப்புகள்
Faiz81 செய்திகள்
Faiz81 - எண்ணம் (public)
13-Apr-2018 9:20 pm

#JusticeforAsifa

பேதை பெண்ணவள்,
பச்சிளம் மொட்டவள் !
பூக்கும் முன் பறித்தெறிந்தது யாரோ?
பறித்த விரல்களை முற்கள் கிழித்தெறிய வேண்டாமா?
முற்கள் வேடிக்கையையே வாடிக்கையாய் கொண்டதால் தான்,
மலர வேண்டிய மொட்டுக்கள் மலராமல் மடிகின்றன,
 இனி ஒரு விதி செய்வோம் மலர்களை கொய்பவர்களின் தலைகளை கொய்வோம்!!!

மேலும்

Faiz81 - Faiz81 அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2018 6:39 am

பெண்னே.......
தாயாகி சேயாகி தாரமும் ஆகி,
நீயே முழுதும் ஆகிறாய்!!
அன்பாகி அறிவாகி ஆற்றலாகி,
நீயே அனைத்தும் ஆகிறாய்!!
பாலூட்டி  சீராட்டி தாலாட்டி,
நீயே ஆளாக்கினாய் ,
உலகை அழகாக்கினாய்!!!!

#மகளிர்தினநல்வாழ்த்துக்கள்

மேலும்

Faiz81 - எண்ணம் (public)
08-Mar-2018 6:39 am

பெண்னே.......
தாயாகி சேயாகி தாரமும் ஆகி,
நீயே முழுதும் ஆகிறாய்!!
அன்பாகி அறிவாகி ஆற்றலாகி,
நீயே அனைத்தும் ஆகிறாய்!!
பாலூட்டி  சீராட்டி தாலாட்டி,
நீயே ஆளாக்கினாய் ,
உலகை அழகாக்கினாய்!!!!

#மகளிர்தினநல்வாழ்த்துக்கள்

மேலும்

Faiz81 - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Nov-2017 1:45 pm

மனிதா!!!
நான் ஓடும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து உனதாக்கினாய்-நீ
அதனால்
நீ செல்லும் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுகிறேன்- நான்
மனிதா!!!
நான் வாழும் ஏரிகளிலும் குளங்களிலும் ஓடைகளிலும் உன் வீட்டை கட்டினாய்-நீ
அதனால்
உன் வீட்டினுள் வருகிறேன்-நான்
மனிதா!!!
இன்று எனக்கு பயந்து ஒழிய இடம் தேடுகிறாய்-நீ
வடிந்து ஓட வழின்றி வீதியில் தங்கிவிட்டேன்-நான்

நீ செய்தது தவறா???
நான் செய்வது தவறா???

-இப்படிக்கு மழை வெள்ளம்..........

மேலும்

வெள்ளம் நிறையும் பள்ளங்களை விட ஆழமான குழியில் கொள்ளையர்கள் ஒளிந்து வாழ்கின்றனர். இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Nov-2017 10:32 pm
Faiz81 - எண்ணம் (public)
08-Sep-2017 3:02 pm

தலைப்பு:புதிய இந்தியா

 பிறந்தது புதிய இந்தியா! 

இந்த புதிய இந்தியாவில் சுதந்திர காற்றை ஸ்வசிக்கின்றோம் என்கின்றனர் பலர்,
 ஆனால் ஏனோ சுவாசிக்க காற்றில்லாமல் மடிந்தனவே பல பச்சிளம் மொட்டுக்கள் இது தான் புதிய இந்தியாவா???!!!

மாடுகளின் உயிரை மதிக்க தெரிந்த புதிய இந்தியாவிற்கு,
ஏனோ மனிதர்களின் உயிரை மதிக்க தெரியவில்லையே
இது தான் புதிய இந்தியாவா???!!!

 சிறுக சிறுக சிட்டுக்குருவியை போல் சேமித்த காசெல்லாம், பருந்தென பறந்து வந்த இரெண்டாயிரம் ரூபாய் நோட்டிற்கு இரையானது ஏனோ?
இது தான் புதிய இந்தியாவா???!!!

 அன்று இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்!,
அனால் இன்று விவசாயியின் முதுகெலும்பை முறிக்கின்றது இந்த இந்தியா!!
இது தான் புதிய இந்தியாவா???!!!

குடிசை தொழிலுக்கு இமயம் அளவு வரி,
 ஆனால் பீட்ஸாக்கும் பர்கருக்கும் சிறிய குன்றளவை விட குறைவு வரி
இது தான் புதிய இந்தியாவா???!!!

 பெண் விடுதலை வேண்டுமென்றானே பாரதி அன்று!
ஆனால் அந்த பெண்களுக்கு  பாதுக்காப்பே இல்லையே இந்த நாட்டில் இன்று !!
இது தான் புதிய இந்தியாவா???!!!

 பிறந்தது புதிய இந்தியா !!!!!
புத்துயிரை அளிக்க வேண்டிய இந்த புதிய இந்தியா பலரின் உயிரை குடித்து வளருகிறது என்பது தான் கசப்பான உண்மை..... 

வளரட்டும் இந்தியா!!! உயரட்டும் நம் வாழ்க்கை தரம்!!!. மக்களின் வாழ்வை உயர்த்தும் இந்தியவே புதிய இந்தியா!!!. 
அப்படி ஒரு இந்தியா இன்னும் பிறக்கவில்லை.

-Faiz

மேலும்

புதுமை பாரதம் மலர அப்துல் கலாம் மீண்டும் பிறந்து நம் பாரதம் உலகம் வியக்கும் வண்ணம் மலர வாழ்த்துக்கள் 09-Sep-2017 4:35 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (2)

இவர் பின்தொடர்பவர்கள் (2)

இவரை பின்தொடர்பவர்கள் (2)

மேலே