கற்றது தமிழ் மாரி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கற்றது தமிழ் மாரி |
இடம் | : செஞ்சி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 11-Aug-2017 |
பார்த்தவர்கள் | : 162 |
புள்ளி | : 14 |
உன் ஆடைக்குள்
ஒளிந்திருக்கும்
வாசத்தை
என்
மூக்கினால் மட்டுமே
நுகர்ந்து விட
முயல்கிறேன்
முண்டியடித்து
முந்திக்கொள்கிறது
என்
கண்களும்..
பாதி இரவுகளில்
விழித்துக் கொள்கிறது
பழைய மிருகங்கள்
நேற்றைய பொழுதின்
எச்சம் இன்னும்
கொஞ்சம் இருக்கிறது
உறங்கி விடாமல்
என்னை உறங்க விடாமல்
அவரவர் தேவைக்கு
அவரவரே தீர்மானித்துக் கொண்டார்கள்
நான் யார் என்பதையும்
எதுவரை என்பதையும்
இறுக்கிய கரங்கள்
கொஞ்சம் இளகிக் கொள்கிறது
என் இருப்பு போதுமென்று..
நீ முகம்
பார்க்கும்
கண்ணாடியெல்லாம்
உன் முகத்தையே
பார்க்கின்றன!
நீ
கை வீசி நடக்கும்
தெருவெல்லாம்
உன் மீதே
கண் வீசிக் கிடக்கின்றன!
நீ
விளையாடும் மைதானங்கள்
எல்லாம்
உன்னையே வேடிக்கையாய்
பார்க்கின்றன!
நீ
விலை கேட்கும்
பொருள்கள் எல்லாம்
உன்னையே
விலைக்கு
வாங்கப் பார்க்கின்றன!
நீ
களையெடுக்கும்
வயல்களெல்லாம்
உன்னையே அறுவடை
செய்ய நினைக்கின்றன!
நீ
காத்திருக்கும்
ரயில் நிலையங்களே
உன் காவலுக்கு
நிற்கின்றன!
நீ
பூப்பறிக்கும்
சோலையெல்லாம்
உன் புன்னகையை
பறிக்கின்றன!
நீ
பயணம் செய்யும்
பேருந்துகள் எல்லாம்
உன்னோடே
பயணிக்கப் பார்க்கின்றன!
நீ
அண்ணமிடும்
பறவைகள் எல்லாம்
உன்னையே
அன்னப்
காலையில்
உன்
கனவுகளிலும்
கவிதைகளிலும்
கண் விழிப்பது
கடவுளுக்கும்
கிடைக்காத
வரமடி!
உன்
கன்னங்கள்
எப்போதும்
எனக்கு
காட்சிப்
பொருளாகவே
இருக்கிறதே
கொஞ்ச(சு)ம்
கருணை
காட்டக் கூடாதா!
நீள்வட்டப் பாதையில்
கோள்கள்
சுற்றி வருவதைப் போல
நானும்
உன்னையே
சுற்றி வருகிறேன்
நெருங்கவும் முடியாமல்
உன்னை
விட்டு
விலகவும் முடியாமல்
உன்
குறுஞ்செய்தியோ
சிறு அழைப்போ
வந்து விடாதா
என்று அலைபேசியை
பார்த்து பார்த்து
முடிந்துபோன என்
பிறந்த நாளின்
நீண்ட தவிப்பின்
இறுதி நொடியில்
இறந்து போயிருந்தது
என் மனசு ....
ஓரே நாளில்
இத்தனை முறை
எப்படி பூக்கிறது
புன்னகைக்கிறது
உண் கண்கள்
உன் கண்கள் பூக்களை
உண்ணும் வண்டுகளா
இல்லை வண்டுகளை
உண்ணும் பூக்களா என்று
புரியாது தவிக்கிறது இயற்கை
சிமிழ் விளக்கினும் சிறப்பு
மிக்கது உன் கண்கள்
பகலிலும் இரவிலும்
உதிக்கும் இரட்டை
கதிரவன் உன்கண்கள்
யாரிடம் போர்செய்து
கொண்டு இருக்கிறது
உன் கண்கள் இப்படி
பார்வையால்
பளபளக்கும்
கண்ணாடிக்கும்
பொறாமைதான்
உன் கன்னங்களின் மீது
உன் கண்களும்
உன் இதழ்களும்
போட்டி போட்டு
பேச்சுபோட்டியில்
பேசாமலே எல்லா
தங்க பதக்கத்தையும்
வென்றுவிடுமடி
கண்ணாடியின் மீது
கண்ணடிக்கிறது என
என் அம்மாவாகிய அப்பாவிற்கு…
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கு...
முக்காலத்திலும் நீங்கள் துணையெனக்கு...
கருவில் சுமந்த தாயை கண்டது நினைவில் இல்லை...
உங்கள் கைபிடித்து நடைபயின்றது மட்டுமே என் வாழ்வின் ஆரம்பம்....
பள்ளி பருவம் தொட்டு…
உங்களின் பாசம் உணர்ந்த நாள்தொட்டு …
பார்க்கவில்லை ஒருவரை உங்களின்
பாசத்திற்கு ஈடான மற்றறொருவரை ....
பச்சோந்தி பாசம் காட்டி
பாதியில் விட்டுச்செல்லும் பலவகையான உறவுகள் ...
பலியிடப்படுவது என்னவோ பாசம் வைக்கும் உண்மை மனம்...
பணம் என்ற ஒற்றை வார்த்தையில்
மனதினை ஓடவிட்டு செல்லும் உறவுகளிடம்
பாசத்தினை எதிர்பார்த்தால்
பரிசாய் கிடைப்பது என்னவோ
ஆசைக்குள் விஷம்
ஆசைக்குள் விஷம் வைத்து
என்னை அழ வைத்தது யாரோ?
அன்பிற்குள் பகை வைத்து
உறவை பிரித்து வைத்தது யாரோ?
அழகழகாய் கண்ட கனவை
கலைத்துவிட்டது யாரோ!
கலைந்தபின்னும் புதுக்கனவை
காணவைப்பது யாரோ!
பாசமெனும் நதியினிலே
நான் மூழ்கித் திளைத்தேன்
பல பேர் கரையேற
படகாக உழைத்தேன்!
காலமெனும் காற்றினிலே
கரை ஒதுங்கிப் போனேன்
கரையொதுங்கிய பின்னாலே
தனிமரமாய் ஆனேன்!
நேசம் வளர்த்த நெஞ்சத்தில்
வெறுப்பை வளர்த்தது யாரோ
வேஷம் போட்ட உறவுகளை
விளங்கிக் கொண்டதாலோ!
விளையாட்டாய் செய்த பிழை
விதியாகிப் போனதம்மா
விதியாடிய விளையாட்டில்
வாழ்க்கை வீணாகிப்போனதம்மா!
அடையாளம் அ