ஸ்பரிசன் - சுயவிவரம்

(Profile)தமிழ் பித்தன்
இயற்பெயர்:  ஸ்பரிசன்
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-Feb-2018
பார்த்தவர்கள்:  2254
புள்ளி:  1384

என்னைப் பற்றி...

நிறைய இருக்கு...அப்பறமா பேசலாம்.

என் படைப்புகள்
ஸ்பரிசன் செய்திகள்

தூய பாலில் வெண்ணை ஒளிந்திருப்பது
போல நமது இதயத்தில் உறையும்
ஆத்மாவில் இறைவன், பாலைக் கடைந்தால்
வெண்ணை திரண்டுவரும். அதுபோல்
பக்தியால் நம் மனத்தைக் கடைந்திட
இறைவன் நம் அகக் கண்ணில்

மேலும்

ஸ்பரிசன் - கவின் சாரலன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 4:38 pm

வாடியிருந்த மலருக்கு
நீரூற்றினாள்
மலர் இதழ் விரித்து
மெலிதாய் சிரித்தது
பறித்துச் சூடிக்கொண்டால்
மகிழ்வேன் நன்றி சொல்வேன் என்றது !

மேலும்

ஆம் மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 11-Jun-2021 7:58 pm
பூத்த பெண் போல பூவுக்கும் உணர்வு இல்லையா ஐயா 11-Jun-2021 6:25 pm
ஸ்பரிசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 9:28 pm

நேரிசை வெண்பா

தாம்ரபர ணிப்புனலாற் சர்வசுரம் பித்துவிழித்
தூம்பிரமுட் காய்ச்சல் சுவாசநோய் - தேம்பிமிகக்
கக்குகய மென்புருக்கி கைகால் எரிவுடனே
மிக்குறுதா கங்களும்விள் போம்

- பதார்த்த குண சிந்தாமணி

இந்நீரைப் பருகினால் பலவிதமான சுரநோய்கள், பித்த தோடம், கண்புகைச்சல், உட்சுரம், சுவாசநோய், சயம், எலும்புருக்கி, கைகால் எரிவு, அதிதாகம் இவற்றைப் போக்கும்.

மேலும்

டாக்டர் அவர்களுக்கு வணக்கம் தமிர பரமி ஆறு ஒடிமிடத்து மண்ணில் தாஸ்மிரச் சத்துக்கள் உள்ளன.ஆற்றின் தண்ணீர் அந்த தாமிர மண்ணின் மருத்துவ குணங்களை கலந்து மக்களுக்கு கொடுக்கிறது இதைத் தெரிந்த diyhyhstksli இந்த ஆற்றிர்கு தாமிர பரணி என்று பெயர் வத்துள்ளர்கள் என்றி மக்கள் இன்று இப்பாடலின் மூலம் தெரிந்து கொள்வார்கள் நன்றி. 11-Jun-2021 10:33 pm
ஸ்பரிசன் - Dr.V.K.Kanniappan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jun-2021 9:46 pm

நேரிசை வெண்பா

காவிரிநீ ராற்பொருமல் காசசுவா சஞ்சோபை
நீவுதொண்டைக் கட்டிளைப்பு நீரேற்றம் - பூவுலகின்
மன்னுதிரக் கட்டியொடு வாயுலரல் என்பவைபோம்
பின்னுடற்குக் காந்தியுமாம் பேசு

- பதார்த்த குண சிந்தாமணி

வயிற்றுப்பல், இருமல், இரைப்பு, வீக்கம், கபக்கட்டு, ஆயாசம், நீர்ப்பிடிப்பு, இரத்த குன்மம், நாவறட்சி போன்றன காவேரி நீர் உண்பதால் நீங்குமென்பர்.

மேலும்

டாக்டர் அவர்களுக்கு வணக்கம் காவிரி நீரின் மருத்துவ குணங்களை அற்புதமாக கண்டெடுத்த தேரைய சித்தரின் உண்மை உங்கள் வாயிலாக மக்கள் எத்தனைபேர் இன்று அறிந்து கொள்கிறார்கள் நன்றி 11-Jun-2021 10:25 pm
ஸ்பரிசன் - ஸ்பரிசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2021 6:39 pm

நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்...

நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ...

என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்...

வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி....

நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்...

குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.

நம்பிக்கைதான்...

சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.


===================________====

மேலும்

தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றிகள். புரியாத ஒன்றுதான் உங்கள் அனுபவத்தின் மொழி இல்லாத பகுதிகள். காலப்போக்கில் அர்த்தம் திரளும். 08-Jun-2021 6:02 pm
குளிரில் கூடு கட்டி மீன்களின் கனவில் பூக்களை விதைத்து ஆகாயத்தை நெய்கிறேன். இங்கு காணப்படும் கவிதைகளிலிருந்து வித்தியாசமான வரிகள் புரிந்தும் புரியாமலும் ஒரு வாசிப்பு அனுபவம் 07-Jun-2021 6:41 pm
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2021 6:39 pm

நான் என்னை
நம்புவதற்கு சில சமயம்...

நீண்டதூரம் நடக்கவோ
எனக்குள் ஏதேனும் பாடவோ
மெள்ள சிரிக்கவோ
முன்முடியை ஒதுக்கவோ
செடியொன்று நடவோ...

என்னை நான்
நம்புவதற்கு சில சமயம்...

வான நுனியில் மிதந்து
இசைத்துளியில் சிதறி
பூக்களில் ஈரமாய் துளிர்த்து
கண்ணோரம் மிதக்கும்
காற்றுக்குள் ஒளியென படர்ந்து
மோனலிஸாவின் மூச்சில்
மின்னலை ஊன்றியபடி....

நீண்டதோர் மறதியில்
என்னை ரகசியமாய்
நம்புகிறேன் என்பதால்தான்...

குளிரில் கூடு கட்டி
மீன்களின் கனவில்
பூக்களை விதைத்து
ஆகாயத்தை நெய்கிறேன்.

நம்பிக்கைதான்...

சாளரம் மூடி அதன்
சாளரம் திறக்கும் சாவி.


===================________====

மேலும்

தங்கள் வாசிப்புக்கு மிக்க நன்றிகள். புரியாத ஒன்றுதான் உங்கள் அனுபவத்தின் மொழி இல்லாத பகுதிகள். காலப்போக்கில் அர்த்தம் திரளும். 08-Jun-2021 6:02 pm
குளிரில் கூடு கட்டி மீன்களின் கனவில் பூக்களை விதைத்து ஆகாயத்தை நெய்கிறேன். இங்கு காணப்படும் கவிதைகளிலிருந்து வித்தியாசமான வரிகள் புரிந்தும் புரியாமலும் ஒரு வாசிப்பு அனுபவம் 07-Jun-2021 6:41 pm
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2021 1:28 pm

தனக்குத்தானே பேசிக்கொள்ளும்
ஊஞ்சல் மூர்த்தியை நாம் பார்க்க செல்லலாம் என்று ரங்கராஜ் இன்று என்னை கூட்டிக்கொண்டு அவர் வீட்டுக்கு போனான்.

இந்த விஷயத்தில் எனக்கு நிறைய சங்கடம் இருக்கிறது. அவரை எனக்கு முன்பின் தெரியாதே. தனக்குத்தானே பேசும் ஒரு நபரின் அந்தரங்கத்தில் நாம் இப்போது நுழைவானேன் என்று மெல்ல போவதற்கு தயங்கினேன்.

நீ நினைப்பது போல் அவர் அப்படி ஒன்றும் கிடையாது. அவர் பேசும் போது நாம் காது கொடுத்து கேட்டால் விஷயம் முடிந்து விடுமே என்றான்.

ஆனாலும்.... என்று இழுத்தேன்.

இதோபார்... நாட்டில் எத்தனை பேர் எத்தனை விதமாக எழுதுகிறார்கள் அதையெல்லாம் நாம் மெய்யுருக படிக்கவில்லையா... அதை விட

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2021 9:37 am

புல்லும் பனியேந் திடபுள் ளினமார்ப்ப
அல்லகன்று வைகறை வானில் சிவந்திட
மெல்விரலால் மென்தென்றல் போல்பூவை நீதொட
மெல்ல விரியும் மலர் !

மேலும்

நேர் நிறை அல்ல நேர் நிரை . இது தூய இன்னிசை வெண்பா . வெண்பா இலக்கண அமைதிக்கு உட்பட்டே வடிவமைக்கப் பட்டிருக்கிறது . அப்பால் அல்ல . இது மலர் எனும் ஈற்றசை வாய்ப்பாட்டிக்குரியது காசு = நேர் நேர் ஆயினும் சு குற்றியலுகரமாதலால் ஓரசைச் சீராகவே கொள்ளவேண்டும் வெண்பாவின் ஈற்றடி ஈற்றுச் சீர் ஓரசைச் சீரிலே முடிய வேண்டும் என்பது வெண்பா விதி வெண்பா எழுதுவதற்குதான் யாப்பிலக்கண அறிவு தேவை . படிப்பதற்கு அந்த இலக்கணம் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை . அவ்வையின் வெண்பாக்கள் படிப்பறியா பாமரனுக்கும் மனப்பாடம் அன்றும் இன்றும் மெல்ல விரியும் மலர் =நேர் நேர் தேமா முன் நிரை விரியும் =நிரை நேர் -புளிமா முன் நிரை =மலர் - நிரை ----மா முன் நிரையசை வரவேண்டும் ; விதி . மிக்க நன்றி கவிப்பிரிய ஸ்பரிசன் 13-May-2021 9:36 am
மெல்ல விரியும் மலர்... நேர்நிறை? காசு? என்னவோ சொல்வார்கள் மறந்து விட்டது. இலக்கண குறிப்புக்கு அப்பால் ஓர் ராஜாங்கம் நிகழ்த்தி கொண்டிருக்கிறது பாடல் 12-May-2021 11:14 pm
அல்லவிழ்ந்த காலையில் கீழ்வானம் சிவக்க ----என்ன அருமையான சொல்லாடல் ! அதனால்தான் மூலத்தையும் விஞ்சிவிடுகிறீர்கள் என்று சொன்னேன் . என் கற்பனைக்கு புதிய பரிமாணத்தில் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 12-May-2021 8:40 am
அருமையான பதிவு ஐயா புல்லினிற் பனிமேவ புள்ளினம் பரபரக்க அல்லவிழ்ந்த காலையில் கீழ்வானம் சிவக்க மெல்லவே உன்விரல்கள் தென்றலெனப் பூவைத்தொட மலரோ மெல்ல விரிந்ததே! 11-May-2021 10:08 pm
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2021 10:10 am

கார்முகில் கூந்தல் காற்றிலாட
பார்வையில் எழில்விழி கயலாட
போர்புரி விற்புருவம் கணைதொடுக்க
வார்முலை சங்கத்தமிழ் ஓவியமே !

----ஒரேஎதுகை முச்ச்சொல்லால் நாலடியால் ஆன
வஞ்சி விருத்தம்


கார்முகில் கூந்தல்
பார்வையில் கயலெழில்
போர்புரி விற்புருவம்
வார்முலை ஓவியம்நீ

----ஒரேஎதுகை இரு சொல்லால் நாலடியால் ஆன
வஞ்சித் துறை

கார்முகில் கூந்தல்மென் காற்றினி லாடிட
பார்வையில் பூவிழிகள் மீனென துள்ளிட
போர்புரி விற்புருவம் காமன் கணைதொடுக்க
வார்முலைப் பேரெழி லே !

கார்முகில் கூந்தல்மென் காற்றினி லாடிட
பார்வையில் பூவிழிகள் மீனாக - நேர்வந்தாய்
போர்புரி விற்புருவம் காமன் கணைதொடுக்க
வார்மு

மேலும்

இ ஃ து ஸ்பரிசனின் கருத்துத்தானா ? வேறு புலமைத் தமிழ் வழியில் முயன்றிருக்கிறீர்கள் நன்றாகத்தான் இருக்கிறது. ஆயினும் COMMENT SEEMS UNSPARISANIC DUE TO LACK OF SPARISANIC TOUCH . மிக்க நன்றி கவிப்பிரிய ஸ்பரிசன் 13-May-2021 9:08 am
ரவி வர்மன் எழுதிய ஓவியமா இஃது கவின் மனச்சாரலின் காவியமா அன்றில் புவி குளிர தீந்தமிழ்ப்பாவை மொழியில் அவிழ்ந்திடும் நாணப் புயலிதுவோ?. ஓரளவு நன்றாக இருக்கிறதா அன்பரே 12-May-2021 11:12 pm
அழகாகச் செய்யுங்கள் உங்களுக்கு முழு உரிமை உண்டு. சில சமயம் மூலத்தையும் விஞ்சி எழுதுகிறீர்கள் மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 11-May-2021 10:07 pm
அருமை ஐயா கார்கொண்ட கூந்தல் தென்ற லோடாட பார்க்கும் விழிகளுள் கயலினம் நீந்த புருவமது வில்லாகி பூங்கணை களேந்தும் வார்முலைப் பேரழகி நீயன்றோ! ( எனது கற்பனை யில் சிறிது ஓட்டிப் பார்த்தேன். தங்களது பதிவு களில் மட்டுமே உரிமை எடுத்துக் கொள்கிறேன் அதிகப்பிரசங்கித் தனமாக நினைப்பின் மன்னிக்கவும்) 11-May-2021 8:19 pm
கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) sankaran ayya மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-May-2021 10:27 am

போதி மரத்தடியில் புத்தன் அமர்ந்தான்
ஞானம் பிறந்தது
போதி மரத்தடியில் நானும் அமர்ந்தேன்
நீயும் வந்தாய் அருகில் அமர்ந்தாய்
மென்மலர்விழிகளால் என்னை ஸ்பரிசித்தாய்
புன்னகை புத்தகம் திறந்து போதியில் போதித்தாய்
கவிதை எழுத இலக்கிய ஞானம் பிறந்தது !

மேலும்

மகிழ்ச்சி தொட்டாய் என்றுதான் எழுதுவதாக இருந்தேன் உங்களுக்காகத்தான் ஸ்பரிசித்தாய் என்று எழுதினேன் மிக்க நன்றி கவிப்பிரிய ஸ்பரிசன் 13-May-2021 8:58 am
கவிதைக்கும் கவின் என்று பேர்.....🤗🤗🤗 12-May-2021 11:06 pm
அருமை அருமை சிறப்பான கருத்து மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய சக்கரை வாசன் 11-May-2021 10:03 pm
அருமை ஐயா துன்பத்திற்கு காரணம் ஆசை என்று அமர்ந்தான் கௌதமன் போதிமரத் தடியில் இன்பத்திற்கு காரணம் கயல்விழி என்றே அமர்ந்தான் கவிஞன் காதல்மர த்தடியில் ஞானம் பிறந்தது இலக்கிய வழியே கவிதை மலர்ந்தது கவின் கைவழி 11-May-2021 8:00 pm
ஸ்பரிசன் - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Apr-2021 12:11 pm

ஐயா மகராசரே....
ஒரே விளம்பரமா இருக்கு. போகட்டும்.
ஆனா page retrieve ஆக ரொம்ப நேரம் ஆகுது.... என்னமாச்சும் செய்யுங்க...
ஒரு ஆண்டிராய்டு அப்ளிகேசன் கண்டுபிடுச்சு காலத்துக்கு ஏத்த வருவீங்களா.... தர்மபிரபு...

மேலும்

விளம்பரம் இல்லாமல் தளத்தை இலவசமாக நடத்துவது எப்படி ஸ்வாமி ? கூகிளில் எதையாது வாங்கு பொருளை தேடினால் விமானக் கம்பெனிக்காரனிலிருந்து தட்டுமுட்டு சாமான் வரை அமேசான் வான்வெளி ப்ரொடக்ட்ஸ் எல்லாம் நம்மைச் சுற்றிச் சுற்றி வந்து கெரோ செய்யும் .வாரியலை மட்டும் வலையில் தேடக்கூடாது. நம்மை துரத்தித் துரத்தி அடிக்கும் . டெஸ்க் டாப் பிசியில் எழுதுங்கள் சௌகரியமானது பயணங்களின் போது ஹோட்டல் காரன் தரும் இலவச WIFI ல் பதிவுசெய்திருக்கிறேன் குட்டி ஆண்ட்ராய்டு ல் . ஆனால் வேஷடை தரும் . 15-Apr-2021 9:40 am
ஸ்பரிசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2021 12:01 pm

(ஓர் அறிவிப்பு...

இந்த கதை என் சொந்த படைப்பு அல்ல. இலியிச் எழுதியதாக நம்பப்படும் ஒரு நாவலின் நடுவில் இடைச்செருகலாக வந்து இருக்கும் சிறுகதை இது என்று நம்பத்தகுந்த எனது இலக்கிய நண்பர்கள் மூலம் இப்போது தெரிய வருகிறது.
ஒருவேளை பதிப்புரிமை தொந்தரவு எழுப்பப்பட்டால் நான் இந்த கதையை நீக்கி விடுவேன். இந்த கதைக்கு நானே என் மனம் போன போக்கில் ஒரு தலைப்பு வைத்தேன். உங்களுக்கு பிடித்த தலைப்பை நீங்களும் வைத்து கொள்ளலாம்.)

இனி கதை.

==================

இருக்கட்டும்.

அதனாலென்ன?

என்னை இன்று எப்படியேனும் கொல்ல வேண்டும் என்ற ஆத்திரம் உங்களுக்கு. இப்படி நீங்கள் ஒன்றுகூடி

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (254)

Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்
Hemadevi Mani

Hemadevi Mani

malaysia
user photo

சக்திவேல் சிவன்

சிங்கப்பூர்

இவர் பின்தொடர்பவர்கள் (544)

இவரை பின்தொடர்பவர்கள் (255)

BABUSHOBHA

BABUSHOBHA

அவிநாசி,திருப்பூர்
மேலே