வேல் முனியசாமி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வேல் முனியசாமி
இடம்:  தூத்துக்குடி
பிறந்த தேதி :  10-Mar-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jun-2019
பார்த்தவர்கள்:  1466
புள்ளி:  91

என்னைப் பற்றி...

"தமிழெனும் பெருங்கடலில் மூழ்கி முத்தெடுக்க விழையும் சிற்றெறும்புகளில் நானும் ஒருவன்"

என் படைப்புகள்
வேல் முனியசாமி செய்திகள்
வேல் முனியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Dec-2023 4:58 pm

நீண்ட நெடுந்தூரம்...
மரங்கள் நிறைந்த சாலையோரம்...
இடையிடையே மழைச்சாரல்...
எங்கோ ஒரு மூலையில்...
ஒற்றைத் தேநீர்க்கடை...
ஆவி பறக்க ஆனந்த அருந்துதல்...
மீண்டும் பயணம்...
வழியெங்கும் சின்னதும் பெரியதுமாய்...
முகடுகளும் மலைகளும்...
துள்ளி விளையாடும் அருவிகள்...
கதை பேசிக்கொண்டு நடைபோடும் நீரோடைகள்...
இப்படி ரசனைமிக்க...
பயணங்கள் ஒருபோதும் முடிவதில்லை...

வேல் முனியசாமி.

மேலும்

வேல் முனியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2023 8:27 am

நாட்கள் செல்லச் செல்ல,
காய்ந்து உதிர்ந்துவிடும்,
இலைகளோ! பூக்களோ!அல்ல,
அவளின் அன்பும் காதலும்..!
தாய் தந்த,
பாசமும் மொழியும் போல,
என்றும் உதிராமல் என்னோடு வாழும்..!

வேல் முனியசாமி.

மேலும்

வேல் முனியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2023 2:37 pm

வண்ணவண்ணமாய்..!
அங்கொன்றும் இங்கொன்றும்
பசியைத் தீர்த்துக்கொள்கிறார்கள்..!
ஒரே வண்ண பசும் புல்லை உண்டு - ஆடுகள்..!

- வேல் முனியசாமி

மேலும்

வேல் முனியசாமி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2023 4:59 pm

அப்போதெல்லாம், தினந்தோறும்
நினைத்ததில்லை, தவித்ததில்லை...... மழலைப்பருவம் தாண்டி கண்கள் தேடியதில்லை இப்போது, எல்லாம் இருக்கிறது......
ஆனால், அம்மா நீ இல்லை.....!!!

வேல் முனியசாமி.

மேலும்

வேல் முனியசாமி - வேல் முனியசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2021 10:53 am

கொன்று பிழைப்பதில்
அப்படியொரு ஆனந்தம்
இந்த கூலிப்படைக்காரனுக்கு.....

தினந்தோறும்
வயது வித்தியாசம் பார்க்காமல்
தாறுமாறாய் வெட்டுகிறான்.....
..... கசாப்புக் கடைக்காரன்.....


-வேல் முனியசாமி

மேலும்

நன்றி நண்பரே! 19-Jul-2021 12:08 pm
அருமை 27-Jun-2021 6:22 pm
வேல் முனியசாமி - இராபூவரசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Nov-2019 1:04 pm

மனதில் ஒருவரால் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது என்றால் அதற்கு காரணம் என்ன? ( அனால் அவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்)

மேலும்

என்ன காரணம் என சுய முயற்சி செய்தால் குழப்பம் நீங்கி விடும். 17-Jan-2020 12:52 am
அதுதான் உண்மையான நட்பு 18-Nov-2019 7:16 pm
அக்கறையின்கண் ஏற்பட்ட சந்தேகம் 15-Nov-2019 11:25 am
உங்களுக்கு பிடிக்காத விஷயத்தை அவர் செய்திருக்க கூடும், அதனால் கூட குழப்பம் ஏற்பட்டு இருக்கலாம். அவர் உங்களுக்கு நெருங்கிய நண்பரெனில், அவர் உங்களுக்கு செய்த நல்ல விஷயங்களை நினைவு கூறுங்கள். குழப்பம் தெளிந்து விடும். 06-Nov-2019 4:31 pm
வேல் முனியசாமி - வேல் முனியசாமி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Nov-2019 7:21 pm

கொக்கரித்துக் கொள்கிறானோ!
மறுபிறப்பில் மாறுகொள்ளும் மானிடனாய்....
சிந்தனையில் மாறுகொண்டானோ! ஏளன எல்லையில் தோல்வியுற்றவனாய்....
மனைவியின் மடியைவிட்டு மகவு ஒன்று கதறிக்கொண்டதோ! அறைகள் முழுதும் பாசக் குரல் கேட்டவனாய்....
கண்களில் நீர் தழும்ப ஆனந்தக் களிப்பில் அள்ளிக்கொண்டானோ!
அன்னையின் அன்பு மீண்டும் கிடைத்துவிட்டதென்று....
பெருமகிழ்ச்சியில் திளைத்துவிட்டானோ!
பித்தனாய் பிதற்றுகின்றான் பிள்ளை வந்து பிறக்கையிலே....!!

வேல் முனியசாமி...

மேலும்

நன்றி நண்பரே 10-Nov-2019 6:46 pm
அருமை 10-Nov-2019 1:16 pm
வேல் முனியசாமி - தீப்சந்தினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Sep-2019 9:05 am

திருமணமான ஆணுக்கு எப்படி தன் மனைவியை தவிர்த்து இன்னோர் பெண் மீது காதல் வருகிறது? அவளை எப்படி இரண்டாந்தாரமாக திருமணம் செய்து கொள்கிறான். இதை சமூகம் சாதாரண விசயமாக பார்க்கிறதா?

இதையே ஒரு பெண் செய்தால் அதனை இச்சமூகம் எப்படி பார்க்கும்?

மேலும்

கற்பு என்பது இருபாலுக்கும் சமம் என்பது அனைவரும் ஏனோ ஏற்பதில்லை... ஒரு பெண் எது செய்தாலும் அது சமூகத்தில் ஒரு பூதக்கண்ணாடி மூலமாகவே பார்க்கப்படுகிறது... சமூகம் என்பது வேற்று கிரக மனிதர்கள் அல்ல... நாம் அனைவரும் சேர்ந்ததே சமூகம்... ஒரு வீட்டில் ஒரு ஆண் தனது மனைவிக்கு செய்யும் துரோகம் ஏற்றுக்கொள்ளப்படும் பொது சமூகம் அதை பின்பற்ற தொடங்குகிறது... சமூகம் மாற நாம் மாறுவோம்.... கற்பு அனைவர்க்கும் சமம் என்பதை நாம் கற்போம், பின்னே சமூகத்திற்கு கற்பிப்போம்.... 13-Oct-2019 9:51 pm
எல்லா மாற்றத்தையும் ஏற்றுக்கொண்டே வருகிறோம் இம்மறுமலர்ச்சியையும் பேதமின்றி ஏற்றுக்கொள்வோம் 30-Sep-2019 2:06 pm
சில ஆண்கள் மற்ற பெண்கள் மீது காட்டும் இரக்கம் அந்த பெண்ணை அவர் மீது காதல் கொள்ள செய்யலாம்... அவரும் அந்த அன்பு புதிதானதாக எண்ணி திசை மாறலாம்...... ஆனால் அந்த திசைமாறல் தவறு...... அது அவன் தன் மனைவிக்கு செய்யும் துரோகம்...... திசைமாறிய பாதை வாழ்வில் வெற்றியை ஒருபோதும் தரா..... இதை இன்றைய சமூகம் சாதாரண மாகவே பார்க்கிறது...... ஏனென்றால் சட்டமே பச்சை கொடி காட்டுகிறது...... ஆண் பெண் வேறுபாடு என்பது இதில் விலக்கல்ல..... விரும்பினால் யார் யாருடனும் வாழலாம்..... நான் சொல்லவில்லை...... நாசமா போன சட்டம்....... சொல்லுது. தமிழ் பண்பாட்டுடன் பார்க்கும் இது தவறானது மாக்கள் (மனிதம் இல்லாதவர்) பார்வையில் பெண் இந்த தவறை செய்தால் இழிவாகவும்.... ஆண் செய்தால் வீரமாகவும் கருதப்படுகிறது 28-Sep-2019 10:23 pm
வணக்கம் தோழர்களே ....... நிச்சயம் பெண்ணுக்கு கற்பு என்ற ஒன்று உங்கள் கட்டமைப்பில் உள்ளது என்றால் அது ஆணுக்கும் பொருந்தும் அது எப்படி பெண்ணுக்கு மட்டும் தான் அது உள்ளது என்று சொல்ல இயலும் ஆசா பாசங்கள் , வெறுப்பு விருப்பு , என்பதெல்லாம் எல்லோருக்கும் இயல்பு தானே பிறகு கற்பு மட்டும் பெண்ணுக்கு சொந்தம் என்று எப்படி சொல்ல முடியும் கற்பு என்ற வார்த்தையே பெண்ணை அடிமை பண்ண அல்லவா உருவாக்க பட்டது . ஆண் என்ற பாலினம் போல பெண் என்பதும் ஒரு பாலினம் தானே தவிர அவள் ஒன்றும் பூஜிக்கும் பொருள் அல்ல பெண்ணை பெண்ணாக சம உயிராக பார்த்தாலே இந்த கற்பு என்ற வார்த்தையை யாரும் பயன் படுத்த மாட்டார்கள் , இறுதியாக ஒன்று பிறர் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கிறோமோ அது நமக்கும் பொருந்தும் ஆகவே கற்பு என்ற ஒன்று இருக்கும் என்றால் அது ஆணுக்கும் பொருந்தும்........ 24-Sep-2019 1:26 pm
வேல் முனியசாமி - வேல் முனியசாமி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Jun-2019 1:42 pm

வலசை போகும் பறவைகள் போல ஆகிவிட்டேன் எங்கெங்கெல்லாம் உன் எண்ணம் எழுகிறதோ! அங்கெல்லாம் செல்கிறது என் மனது......

மேலும்

ஐயா கவிஞர் அளவுக்கு இன்னும் பண்படவில்லை தங்கள் வாக்கு பளித்தால் நலம் 01-Jul-2019 9:54 am
நன்றி கவிஞரே. 01-Jul-2019 9:02 am
இடம் விட்டு இடம் பெயர்தல் 29-Jun-2019 6:45 pm
வலசை என்றால் என்ன? 29-Jun-2019 6:02 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

Deepan

Deepan

சென்னை
user photo

வீரா

சேலம்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
மலர்91

மலர்91

தமிழகம்
ஷிபாதௌபீஃக்

ஷிபாதௌபீஃக்

பொள்ளாச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (7)

மலர்91

மலர்91

தமிழகம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே