Venkatachalam Dharmarajan - சுயவிவரம்
(Profile)
தமிழ் பித்தன்
இயற்பெயர் | : Venkatachalam Dharmarajan |
இடம் | : தென்காசி (நெல்லை மாவட்டம்) |
பிறந்த தேதி | : 18-Feb-1948 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Oct-2013 |
பார்த்தவர்கள் | : 1651 |
புள்ளி | : 1554 |
ஆங்கில எழுத்துக்களை வைத்து "வேர்ட் பிளஸ்" என்ற ஒரு விளையாட்டு படைத்திருக்கிறேன். ஃபன் ஸ்கூல் நிறுவனம் இதை ஏற்று விற்பனை செய்து வருகின்றனர்.
#மன்னாதிமன்னர்
பாகம் .. ஐந்து
பேரானந்தம் பொற்கிழி பரிசு பெற்றுவிட்டால், அதையெல்லாம் அமைச்சரின் சம்பளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துவிடலாம் என்பதுதான் மன்னரின் திட்டம்என்பதைக் கேட்டதும், அதிர்ச்சியில் அமைச்சர், தான் அவையில் அமர்ந்திருப்பதை மறந்து, மன்னாஆஆஆஆ என்று உரக்கக்கத்திவிட்டார். மன்னரும் அவையோரும் ஒருநொடி நடுங்கிவிட்டனர்.
அமைச்சரே, என்ன நடந்தது. ஏன் குச்சலிட்டீர். அவையில் அமர்ந்திருக்கும்போதே உறங்கிவிட்டீரா, பயங்கர பகற்கனவு ஏதேனும்கண்டீரா. நானும் ஒருநொடி நடுங்கிவிட்டேன். அவையோரும் அவ்வாறே நடுங்கிவிட்டனர். உமது உடலும் உள்ளமும் நலம்தானே என்று வினவ, தன்னை நன்கு சுதாகரித்துக்கொண்ட
#மன்னாதிமன்னர்
பாகம் .. நான்கு
இளைஞன் மன்னரை நோக்கி ..
தங்களின் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன். மன்னரை மட்டுமல்ல வேறெவரைப்போற்றி பாடுவதென்றாலும், முதற்பாட்டு இறைவன் அல்லது இறைவியைப் போற்றியே பாடுவதாக இருக்கும். பத்து வெண்பாக்களில் முதல்வெண்பா என் அன்னை கலைவாணி சரஸ்வதி மீதிருக்கும். பாடிமுடித்தபின் அமைச்சர் நான் பத்துப்பாட்டு பாடவில்லை, ஒன்பது தான் பாடினேன் எனக்கூறி பரிசு கிடையாது என்று சொல்லலாமல்லவா. எனவே, பத்தல்ல பதினொன்று வெண்பாக்கள் பாட அனுமதியளிக்கவேண்டுகிறேன், மன்னா.
மன்னர் அமைச்சரை நோக்கி, இவன் சொல்வது சரிதான் எனத்தோன்றுகிறது. இவன் அம்பிகாபதி திரைப்படம் பார்த்திருப்பானென
#மன்னாதிமன்னர்
பாகம் .. மூன்று
அமைச்சர் இளைஞனை நோக்கி ..
இளைஞனே, நாட்டின் நிதிநிலை தற்போது சரியில்லை என்று நீ அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால், ஒவ்வொரு வெண்பாவிற்கும் ஒவ்வொரு பொற்கிழி கொடுக்க இயலாது.
பிழை ஏதுமின்றி மன்னரைப் போற்றி ஒரே மூச்சில் பத்து வெண்பாக்கள் பாடிவிட்டால் நிச்சயமாக ஒரு பொற்கிழி கிட்டும் உனக்கு. பத்து வெண்பாக்களில் ஏதேனும் ஒரு வெண்பாவில் தளை இருக்கிறது என்று மன்னர் கண்டுபிடித்துவிட்டால், பொற்கிழி கிடைக்கும் வாய்ப்பை நீ இழந்துவிடநேரிடும். எனவே, நன்றாக யோசித்து பதில்சொல் என்றார்.
அமைச்சரின் புத்திசாலித்தனத்தை மனதிற்குள் மெச்சிய, மன்னர், அமைச்சரை நோக்கி, அமைச்சர
#மன்னாதிமன்னர்
பாகம் .. இரண்டு
காவலன் இளைஞனை அழைத்து வருகிறான்.
திருவிளையாடல் திரைப்படத்தில் தருமி அவையில் அமர்ந்திருக்கும் அனைவரையும் மன்னா, மன்னா என்று கும்பிட்டது போலல்லாமல், நேராக அரியணை மீதமர்ந்திருக்கும் மன்னர் முன்நின்று வணங்குகிறான். மன்னரும் தன்வலது கையை உயர்த்தி வாழ்த்திவிட்டு, உன் பெயர் என்ன சொல் என்றதும், அந்த இளைஞன் ..
மன்னா, என் பெயர் .. பேரானந்தம்.
உன்பேர் ஆனந்தம் தானே.
இல்லை மன்னா. என்பேர் ஆனந்தம் இல்லை. பேரானந்தம் தான்.
பேரானந்தமா. இப்படி ஒரு பெயர் நான் கேள்விப்பட்டதே இல்லையே. மன்னர் அமைச்சரை நோக்கி, அமைச்சரே, இப்படி ஒரு பெயர் நீங்கள் கேள்விப்பட்டிருக்கி
ஒரு விகற்ப நேரிசை வெண்பா ..
உலகைத் திருத்த யெவரால் முடியும்
உலகோர் நினைக்க முடியும் - பலரால்
உலகைத் திருத்தவுனை மாற்றிக்கொள் லோர்நாள்
உலகேமா றும்தனி யாய்
07-01-2017
கீழே உள்ள இரு திருக்குறள்களில் எது எழுத்து பிழை அற்றது.
"சீரும்" அல்லது "சீறும்"
திருக்குறள் 499
சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
சிறைநலனும் சீறும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது
நன்றி
காயத்ரி
வர்ஷன் பெயர் அர்த்தம் வேண்டும்
பல விகற்ப இன்னிசை வெண்பா ..
கண்விழித்து காலையிலே கைபேசி பார்க்கையிலே
புன்னகைக்கும் அன்போடு நீயிடும்கு றுஞ்செய்தி
இன்றதனைக் காணோமே நோகுதடி என்னுள்ளம்
இன்றெனக் கில்லையோ "இச்"
02-10-2016