ஜெபகீர்த்தனா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெபகீர்த்தனா
இடம்:  இலங்கை (ஈழத்தமிழ் )
பிறந்த தேதி :  31-Jan-1998
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Jul-2014
பார்த்தவர்கள்:  3691
புள்ளி:  509

என் படைப்புகள்
ஜெபகீர்த்தனா செய்திகள்
ஜெபகீர்த்தனா - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Jun-2017 9:33 am

தந்தை....! அப்பா...! தந்தை.....!
-----------------------------------

அம்மாவை .......
இழந்து நான் வேதனைபடுவதை.....
காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்.....
அப்பா படும் வேதனையை தான்.....
தங்க முடியவில்லை.........!

^^^

பிள்ளை தான் படும்வேதனையை.......
அனுபவிக்க கூடாது என்பதற்காய்.....
தன் தொழிலையே மறைப்பவர்.....
தந்தை.....!

^^^

தந்தையின் தியாகம்.......
தந்தை இறந்தபின் தான்.......
முழுமையாக தெரிகிறது......
தந்தையாய் இருக்கும் போது.....
ரொம்ப வலிக்கிறது......
தந்தைகாய் செய்ததென்ன...?

^^^

கவிப்புயல் இனியவன்

மேலும்

ஆம் ஆம் நன்றி நன்றி 16-Jun-2017 5:23 pm
ஆம் ஆம் நன்றி நன்றி 16-Jun-2017 5:22 pm
உண்மைதான்...... 16-Jun-2017 11:28 am
உண்மைதான்..தந்தையின் தியாகம் வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாதது 16-Jun-2017 11:22 am
ஜெபகீர்த்தனா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Jun-2017 7:34 pm

தமிழகம்...

குடிப்பதற்கு குடிநீர் இல்லை
அடுப்பெரிக்க காய்ந்த விறகில்லை...

ஆயிரம் அடி
பூமிக்கடியில் எரிவாயு திட்டம்...

மணல் கொள்ளையன்
முதன்மை மந்திரி...

உலகம் சுற்றும் கிழவன்
பிரதான மந்திரி...

ஒருவேளை உணவிற்காக நான்
வைத்திருந்தது கையகலம் நிலம்...

ராட்சத குழாய்கள்
என் நிலத்தில் இறங்கியது...

பொறுப்பில்லாத தலைவனை
தேர்ந்தெடுத்தது என் தவறுதான்...

என் உரிமையை
கேட்க போனேன்...

காட்டு மிராண்டிகள் காக்கி உடுப்பில்
கைதுசெய்து அடித்தனர்...

தன் இனம் காக்க
குரல்கொடுத்தான் சகோதரன்...

குண்டர்களை சுதந்திரமாக
நாட்டில் சுற்றவிட்டு...

குண்டர் சட்டமா

மேலும்

நிச்சயம் தோழரே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 12-Jun-2017 7:01 pm
நாம்தான் மாறவேண்டும் தோழரே. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 12-Jun-2017 7:01 pm
உண்மைதான் அண்ணா. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 12-Jun-2017 7:00 pm
மாறும் காலங்கள் மாறப் போகும் தலைவர்கள் விவசாயத்தை காக்கும் இளைஞர்கள் இருக்கும் வரை விவசாயி வாழ வைப்பான் விவசாயத்தை குரல் கொடுப்போம் விவசாயத்துக்கு கை கொடுப்போம் விவசாயிகளுக்கு 08-Jun-2017 10:15 am
ஜெபகீர்த்தனா - முதல்பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2017 7:07 pm

அழகே...

மூன்றாம் பிறையையும் முழு
அமாவாசையையும் நீ மறந்துவிட்டாய்...

உன் நினைவுகள்தான் முழுமதியாய்
எனக்கு சில இரவுகளில்...

மரணம்வரை என்னுடன்
நீ வருவேன் என்றாய்...

ஏனோ புயல்
திசைமாறி சென்றது...

உன் நினைவுகள் என்னில்
மறையும் நாளில் நான் எங்கோ...

உன் நினைவுகள் என்னை
தொடரும் மரணம்வரை...

என்னிடம் சொல்லாமலே என்னை
தொடர்கிறது என் நிழலும்...

நான் தனிமையில் என்றும்
இருக்க போவதில்லை...

உன் நினைவுகளும் என் நிழலும்
என்னுடன் இருக்கும்வரை.....

மேலும்

நினைவும் பிரிவதில்லை நிழலும் பிரிவதில்லை. வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 12-Jun-2017 6:57 pm
நினைவுகள்தானே நிரந்தர சுகம் காதலில். வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 12-Jun-2017 6:56 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 12-Jun-2017 6:55 pm
**************உன் நினைவுகளும் என் நிழலும் என்னுடன் இருக்கும்வரை.....*********** வரிகளில் உங்களின் ஆழமான அழகான காதல் புதைந்து கிடைப்பதில் தெரிகிறது ஓராயிரம் வலிகளின் சங்கமம் 09-Jun-2017 6:28 am
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2016 8:16 pm

உன் தொலைபேசி ...
அழைப்பு என்னை .....
சந்தேகிக்கவைக்கிறது ....???

என்னை .....
மறந்து விடு என்று ..
சொல்லியபின் மௌனமானாய் ...
அப்படிஎன்றால் நீ அழுகிறாய் ....!!!

உலகில் எந்த காதலர்கள் ..
அழாமல் காதலை மறுத்தார்கள் ...???
உன் தொலைபேசியில் ....
இருந்து வரும் கண்ணீர் ...
இதயத்தையே நனைக்கிறது ..!!!

&
வலிக்கும் இதயத்தின் கவிதை
கவிப்புயல் இனியவன்

மேலும்

ஆமாம் நன்றி நன்றி 12-Nov-2016 9:25 am
காதல் ஒரு அழகான உணர்வு கண்ணீரும் சுமைகளும் அங்கே சுகமாகத்தான் மனதோரம் தங்கிக் கொள்கிறது 10-Nov-2016 11:07 am
ஆமாம் நன்றி நன்றி 09-Nov-2016 9:04 pm
உண்மையான காதலை சொல்லும் போதும் அதை ஏற்கும் போதும் ...நெஞ்சில் சுகமான உணர்வாய் விழிகள் நனைப்பது எத்தனை சுகம் என்று தெரியவில்லை ...காதலை அழுது மறுப்பவர்களுக்கு .... 09-Nov-2016 8:23 pm
கிரிஜா தி அளித்த படைப்பில் (public) Sureshraja J மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Nov-2016 12:49 pm

வரமாய் வந்து
வாழ்க்கை முழுதும் நின்றவள் நீ

தோழி என்று ஆயிரம் பேர்
இருந்தாலும் நினைவுக்கு வருவது
உன் முகம் தான் ...

என்னை எனக்கு
அறிமுகம் செய்தவள் நீ ...

ஆழமான அன்பின்
சுகமும்...

அது இல்லையேல்
சோகமும் ....
உணர்த்தியவள் நீ ....

பொய்க்கோபம்
கொள்வதில் உனக்கு நிகர் யாருமில்லை...

ஒரு நிமிடம் பேசாமல்
இருந்ததில்லை...

ஒரு நிமிடம் பேச
ஒரு மணி நேரம் காத்திருப்பாய்
அந்த மரத்தடியில்....

காதலை விட இனிமையானது
நட்பு உணர்த்தியவள் நீ ...

என் இன்ப துன்பங்களில்
என் பக்கம் நின்றவள் நீ...

வாழ்க்கையின் இரகசியம்
நட்பு ...

அதிலே தான் எத்தனை
இன்பம் ....

கருவறை தோழி அல

மேலும்

கருவறை தோழி அல்ல நீ கல்லறை வரை தோழி நீ அருமையான வரிகள் 13-Nov-2016 6:57 pm
ஆமாம் தோழரே...கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் தோழரே 10-Nov-2016 2:36 pm
உண்மை தான் தோழரே...கருத்தளித்தமைக்கு மிக்க நன்றிகள் தோழரே.... 10-Nov-2016 2:35 pm
நடப்பு என்றென்றும் இனிமைதான் ... 09-Nov-2016 8:17 pm
ஜெபகீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Nov-2016 8:15 pm

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

முன்பெல்லாம்
உனை நினைக்கும் போது
கவிதைகளாய் வந்துவிடுகிறாய்
இன்றெல்லாம்
உனை நினைக்கும் போது
கண்ணீராய் வந்துவிடுகிறாய்
என்றென்றும்
என் கவிதைகளுக்கு
கண்ணீராய் உயிர் கொடுப்பது
உன் நினைவுகள் தானடா

&&&&&&&&&&&&&&&&&&&&&

மேலும்

நட்பின் உருகத்தையும் இறுக்கத்தையும் உணர்த்திய வரிகள் வாழ்த்துக்கள் தோழி 05-Mar-2017 6:03 pm
WAAAAAAAAAAAW சூப்பர் 31-Jan-2017 3:53 pm
கண்ணீரை விட உற்ற நண்பன் மண்ணிலில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 10-Nov-2016 11:04 am
ஜெபகீர்த்தனா - ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Apr-2016 3:45 pm

உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன. மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும், சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன. பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன;உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. ஒரு வெற்றிடமே விரிகிறது. மிகவும் தொலைவில் தூரதேசத்தில் இருப்பதாக உணர்ந்து கொள்கிறோம்.

சில சமயம் நம் மனதிற்கு பிடித்தவர்களின் ஒரு நிமிட சந்தேக பேச்சால் நம் ஆயுள் சந்தோஷத்தையே இழக்கிறோம்..இதற்கு காரணம் நம்மீது தவறா? அவர்களின் சந்தேக மனப்பான்மையா?புரிதல் குறைபடா?

மேலும்

ம்ம் ..இன்று பலர் மனம் விட்டு பேசுவதே குறைவு ..எனது கண்ணோட்டத்தில் ....நான் கூட மனம் விட்டு பேசுறேல சில தருணங்களில் ..மனம் விட்டு பேசாவிடில் சந்தேகம் எனும் கொடிய மிருகம் நம்ம சுத்தி கொண்டே தான் இருக்கும் .ஒரு பிரச்சனைக்கான காரணத்தை ..தீர விசாரிக்காமலோ அல்லது வெளிப்படையா கேட்க்காமலோ ..நாமாகவே தப்பாக அதை வடிவமைக்கிறம் .... எப்ப நாம் வெளிப்படையா பேசுறமோ அப்பொழுதே.....அழகான புரிதல்,அதீத அன்பு ,எது சரி ,எது தப்பு என்று செம்மைஜா புரியும் ...... மனம் விட்டு பேசினால் மரண வலி கூட ம(ற)றைந்து போயிடும் .... 04-Nov-2016 11:58 pm
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சித்தோழி...!! 12-Apr-2016 10:14 am
ம்ம்...தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி நண்பரே....இந்த சந்தேகம் என்ற ஒற்றை வார்த்தையால் பல மாற்றங்கள் வந்துள்ளது....பலரது வாழ்க்கையே புரட்டிபோட்டுள்ளது.....கருத்தில் மகிழ்ச்சி...!! 12-Apr-2016 10:13 am
nice சந்தேகம் 11-Apr-2016 3:57 pm
ஜெபகீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2016 7:01 pm

வர்ணங்கள் இல்லா
என் கவிதைகளுக்கு
*பச்ச பொய்கள் என *
வர்ணம் தீட்டியவன் நீயடா !

மேலும்

பொய்கள் இல்லை அவைகள் உணர்வுகள் 14-Sep-2016 9:44 pm
Shyamala Rajasekar அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-Aug-2016 11:22 pm

பாமலரும் சோலையிது பாவலரின் சோலை
***பலனேதும் கருதாமல் பயிற்றுவிக்கும் சோலை !
நாமகளும் நடனமிடும் நனிசிறந்த சோலை
***நற்றமிழால் பூரித்து நன்மைசெயும் சோலை !
தாமறிந்த தமிழமுதைத் தந்திடுமிச் சோலை
***தன்னலமே யில்லாத தலைமைகொண்ட சோலை !
மாமணியாய் முகநூலில் மலர்ந்ததிந்தச் சோலை
***மாவரத ராசனிவர் வளர்த்திட்ட சோலை !

பாட்டியற்றப் பழக்கியதும் பைந்தமிழின் சோலை
***பட்டமுடன் பாராட்டும் பகிர்ந்தளிக்கும் சோலை !
நாட்டமுடன் வருவோர்க்கு நலம்பயக்கும் சோலை
***நாற்கவியும் பொலிவுடனே நடமாடுஞ் சோலை !
கூட்டுறவால் தமிழ்ப்பாக்கள் கொள்ளைகொள்ளும் சோலை
***குறைகளைந்து கொடிநாட்டிக் கொள்கைவெல்லும் சோலை !
ஏட்டி

மேலும்

நற்றமிழ் தோட்டத்தில் முளைத்த பைந்தமிழ் வேரின் இலக்கியம் 30-Aug-2016 7:56 am
கவிஜி அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
30-Jul-2016 9:21 pm

நீ எழுதும்
என் கவிதையும்
நான் எழுதும்
உன் கவிதையும்
இடம் மாறி பொருள்
தேடும் நாளில்
நாம் பிரிந்தே கிடக்கிறோம்...
எந்தவொரு பாதைகளின்
முடிதலாய்
ஓங்கி ஒலிக்கும்
குரலாய் பெரும்பாலும்
உம் மௌனங்களே
விதைக்கின்றன மிகப்
பெரிய சத்தத்தை......
நின்ற இடத்தில்
இன்னொரு விரல்
முளைக்க வாதிடும்
பத்தியாய்
சொற்றொடர் நீளும் உன்
காகிதத்தில் விழி இழந்த
பறவைகளாய்
என் கிறுக்கல்கள்....
நீ வானம் சமைத்த
அன்று
நான் வண்ணம் வாங்கப்
போயிருந்தேனோ
என்னவோ....
இனி வானமும் சேர்ந்து
வாங்குவேன் என்பதே
என் நிஜத்தின் பார்வை...
வந்து போன
நாட்களும்
வராமலே போன நாட்களும்
பேசிக் கொள

மேலும்

உண்மைதான்..ஒரு நிலையில் காதல் உருவாகினாலும் காலங்கள் அதனை வதை செய்து சுமையும் சுகமும் கொடுத்து புதியதோர் கோணத்தில் வாழ்க்கையின் பாதையை அமைத்துக் கொள்கிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 31-Jul-2016 9:34 am
ஜெபகீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Aug-2016 2:04 pm

சில தருணங்கள்
காயங்கள் புரிகிறது
அதற்கான காரணங்கள் புரிவதில்லை

உன் நினைவுகளும் கூட ...

மேலும்

உண்மை ... 22-May-2017 5:47 pm
உண்மை ...உண்மை 20-May-2017 7:30 pm
உண்மை ... 20-May-2017 7:12 pm
ஜெபகீர்த்தனா - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Dec-2015 8:58 pm

இதயத்தை ஏதோ ஒன்று
இழுக்குது கொஞ்சம் இன்று
இதுவரை இதுபோல நானும் இல்லையே

உன் விழிகள் தான் உன்னாயுதம் -எனைக்
காணாத போதும் கொல்கின்றாயே
என் கயல் விழியும் உன் விரல் நுனியும் -நமைத்
தொடுகின்ற வேளை என் கனவுகளே

உன் அருகினிலே நானும் வருகிறேன்
வரும்போதெல்லாம் எனை வெறுக்கின்றாய்-நீ
வெறுப்பதால் கொஞ்சம் தவிக்கிறேன் - தவிப்பதால்
மீண்டும் உனையே நினைக்கிறேன்

ஒரு முறை நீ பார்த்த பார்வைகள் எல்லாம்
இறைவனின் வரங்களாய் வேண்டுகிறேனே

மேலும்

அருமையான padaippu 27-Dec-2015 10:29 pm
மிகவும் அருமை...... 26-Dec-2015 11:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (736)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (740)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
krishnan hari

krishnan hari

chennai

இவரை பின்தொடர்பவர்கள் (744)

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே