nalina - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  nalina
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-Jan-2012
பார்த்தவர்கள்:  400
புள்ளி:  28

என் படைப்புகள்
nalina செய்திகள்
nalina - கீத்ஸ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Nov-2015 3:34 pm

தோழர்களுக்கு வணக்கம்,

300கும் மேற்பட்ட கவிதைகளை பரிசீலிப்பதில் சற்று தாமதம் ஆகிறது ஆகையால் கவிதை போட்டி முடிவுகள் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி அன்று அறிவிக்கப்படும்


இப்படிக்கு
எழுத்து குழுமம்

மேலும்

தேவையற்ற கருத்துக்கள் ஏன் தோழரே? உங்கள் கருத்தில் எழுத்தின் மேல் உங்களுக்கு உள்ள காட்டம் நன்றாக தெரிகிறது. 01-Dec-2015 11:23 am
இதை தாங்கள் மின்னஞ்சலில் அனுப்பி இருக்கலாம். எழுத்து வலைதளத்தை நேசிக்கும் தோழர்கள் யாரும் இந்த அறிவிப்பை தவறாக எண்ணி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் எழுத்து எந்த ஒரு விஷயத்திலும் முறைப்படிதான் நடக்கும் என்று. மேலும், எண்ணம் திருத்தப்பட்டுள்ளது. 01-Dec-2015 11:13 am
பதில் ஒன்று: மழைக்குப் பரீட்சையே தள்ளிவைத்து விட்டார்கள்; இதைத் தள்ளி வைத்தால் என்னய்யா ...? கொஞ்சம் பொறுக்க மாட்டீர்களா ....? பதில் இரண்டு: இதை உங்கள் அசிரத்தையாக எடுத்துக் கொள்ளலாமா...? ஆமாம்.... எந்த 'நபருக்கோ' மூவாயிரம் கொடுப்பதற்கு இப்போதே என்ன அவசரம்...? பதில் மூன்று: பத்தாம் தேதிதான் பணம் கைக்கு வருதா ...? பதில் நான்கு: தள்ளிப் போகும் காரணத்தை முதலில் சொல்வதுதான் கலந்துகொண்ட கவிஞர்களை / நபர்களை மதிக்கும் செயல். பதில் ஐந்து: நானாயிருந்தால், இப்படி அறிவித்திருப்பேன்: கவிதைப் போட்டியில் ஆசையாசையாய்க் கலந்துகொண்ட அனைத்துக் கவிஞர்களுக்கும் வணக்கம். யாருக்குப் பரிசு கிடைக்கப் போகிறதோ என்பதை அறிய ஆர்வத்துடன் காத்துக் கிடக்கும் மற்றைய கவிஞர்களுக்கும் வணக்கம்.. ..................................................... காரணத்தால், முடிவு தேதியைத் தள்ளி வைத்திருக்கிறோம். என்றும் உங்கள் ஆதரவைப் பெற்று உங்கள் நல்லிதயத்தில் இடம் பெற்றிருக்கும் .......................................... 30-Nov-2015 7:18 pm
கொதித்து வந்த உலை அப்படியே ஆழ்ந்து அடங்கிப் போய் விட்டது . இனிப் பதினொன்றில் அறிவித்தால் என்ன, அடுத்த வருசம் அறிவித்தால் என்ன, அறிவிக்காமலேயே போனால்தான் என்ன ...? . 30-Nov-2015 4:08 pm
nalina - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Sep-2015 5:02 pm

பால்வண்ணம் பிள்ளை கலெக்டர் ஆபீஸ் குமாஸ்தா. வாழ்க்கையே தஸ்தாவேஜிக் கட்டுகளாகவும், அதன் இயக்கமே அதட்டலும், பயமுமாகவும், அதன் முற்றுப்புள்ளியே தற்பொழுது 35 ரூபாயாகவும் - அவருக்கு இருந்து வந்தது. அவருக்குப் பயமும், அதனால் ஏற்படும் பணிவும் வாழ்க்கையின் சாரம். அதட்டல் அதன் விதிவிலக்கு.

பிராணிநூல், மிருகங்களுக்கு, முக்கியமாக முயலுக்கு நான்கு கால்கள் என்று கூறமாம். ஆனால் பால்வண்ணம் பிள்ளையைப் பொறுத்தவரை அந்த அபூர்வப் பிராணிக்கு மூன்று கால்கள்தான். சித்த உறுதி, கொள்கையை விடாமை, இம்மாதிரியான குணங்கள் எல்லாம் படைவீரனிடமும், சத்தியாக்கிரகிகளிடமும் இருந்தால் பெருங் குணங்களாகக் கருதப்படும். அது போயு

மேலும்

nalina - எண்ணம் (public)
16-Sep-2015 4:53 pm

ஐந்து பெரிதா ?  ஆறு பெரிதா ?  -  வைரமுத்து 


“சீ மிருகமே!”
என்று மனிதனைத் திட்டாதே

மனிதனே  
எந்த விலங்கும்
இரைப்பைக்கு மேலே
இன்னொரு வயிறு வளர்ப்பதில்லை 
எங்கேனும் தொப்பைக் கிளியோ
தொப்பை முயலோ
பார்த்ததுண்டா ?

**

எந்த விலங்குக்கும்
சர்க்கரை வியாதியில்லை
தெரியுமோ?

**

இன்னொன்று :
பறவைக்கு வேர்ப்பதில்லை

**

எந்த பறவையும்
கூடுகட்டி
வாடகைக்கு விடுவதில்லை

**

எந்த விலங்கும்
தேவையற்ற
நிலம் திருடுவதில்லை

**

கவனி மனிதனே 
கூட்டு வாழ்க்கை
இன்னும் குலையாதிருப்பது
காட்டுக்குள்தான்

**

அறிந்தால்
ஆச்சரியம் கொள்வாய்
உடம்பை
உடம்புக்குள் புதைக்கும்
தொழு நோய்
விலங்குகளுக்கில்லை

**

மனிதா
இதை மனங்கொள் 
கர்ப்பவாசனை கண்டு கொண்டால்
காளை பசுவைச் சேர்வதில்லை

**

ஒருவனுக்கொருத்தி
உனக்கு வார்த்தை
புறாவுக்கு வாழ்க்கை 
எந்த புறாவும்
தன் ஜோடியன்றி
பிறஜோடி தொடுவதில்லை

**

பூகம்பம்
வருகுது எனில்
அலைபாயும் விலங்குகள் 
அடிவயிற்றில் சிறகடிக்கும் பறவைகள் 

இப்போது சொல்
அறிவில்
ஆறு பெரிதா ?
ஐந்து பெரிதா ?

**

மரணம் நிஜம்
மரணம்
வாழ்வின் பரிசு 
மாண்டால்
மானின் தோல் ஆசனம்
மயிலின் தோஅகை விசிறி 
யானையின் பல் அலங்காரம்
ஒட்டகத்தின் எலும்பு ஆபாரணம்

**

நீ மாண்டால் … 
சிலரை நெருப்பே நிராகரிக்கும்
என்பதால்தானே
புதைக்கவே பழகினோம்

**

“சீ மிருகமே !”
என்று மனிதனைத் திட்டாதே மனிதனே

**

கொஞ்சம் பொறு
காட்டுக்குள் என்ன சத்தம் … 
ஏதோ ஒரு மிருகம்
இன்னொரு மிருகத்தை ஏசுகிறது

” சீ மனிதனே !”

**

 -கவிஞர் வைரமுத்து

மேலும்

nalina - எண்ணம் (public)
16-Sep-2015 4:30 pm

பஞ்ச பாத்திரம் (எ) பஞ்ச பத்திரம்

 துளசி, அருகு, வேம்பு, வன்னி, வில்வம், இந்த ஐந்தும் பஞ்ச பத்திரம் ஆகும்.
இந்த ஐந்தும் மூலிகைகளில் மிகச்சிறந்தவை. தேய்வீகமானவை. பூஜைக்கு
சிறந்தவை. இவைகளை அர்ப்பனித்து தீர்த்தம் விடும் பாத்திரத்திற்கு பஞ்ச
பத்திரம் எனப்பெயர். இதுவே நாளடைவில் பஞ்ச பாத்திரம் என்று
அழைக்கப்படுகிறது.

மேலும்

nalina - எண்ணம் (public)
16-Sep-2015 4:08 pm

அயல் நாடு (Ayal Naadu) ஆத்திசூடி

 அயல் நாட்டுக்கு போகாத

டு மெய்க விடுவாயங்க

ந்திய நாட்டுலயே வேல பாரு

சியா இருக்கும்

ண்மையாதான் சொலுறேன்

ற விட்டு போகாத

ப்படா ஊருக்கு வருவேன்னு நெனப்ப

ண்டா வந்தோம்னு நெனப்ப

யோ விடுங்கடானு சொல்லுவ

ப்பாரி வெச்சு அழுவ

லமிட்டு கத்துவ

ஒளவளவுதான் சொல்லிபுட்டேன்

அஃகடானு இங்கயே இரு.



மேலும்

nalina - திருமூர்த்தி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
01-Sep-2015 7:56 pm

என் நெஞ்சைக் கிழித்த பதிவு...


மரங்கள் இல்லையேல்
மண்ணின் மடிக்குள்ளே
ஏதப்பா ஏரி?

மரங்கள் இல்லையேல்
காற்றை எங்கே போய் சலவை செய்வது?
********************************************************************

மேலும்

கவிப்பேரரசு வைரமுத்துவின் வைர வரிகள் அய்யா... எண்ணத்தில் பகிர்ந்தேன்... அந்தப் படம் நான் முகநூலில் பார்த்து அதிர்ச்சி அடைந்தது... 24-Sep-2015 4:15 pm
இவை எவரின் வரிகள் ??? 02-Sep-2015 9:14 pm
ம்ம்ம்ம் 02-Sep-2015 6:31 pm
நன்றி..... 02-Sep-2015 6:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

பால்வண்ணம்

பால்வண்ணம்

இராஜபாலயம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மலர்91

மலர்91

தமிழகம்
jothi

jothi

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (6)

மலர்91

மலர்91

தமிழகம்
jothi

jothi

Madurai
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (6)

Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே