கணபதி சுப்பிரமணியன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கணபதி சுப்பிரமணியன்
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  09-Sep-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2014
பார்த்தவர்கள்:  305
புள்ளி:  45

என்னைப் பற்றி...

காதலை காதலிப்பவன்....
கவிதைகளில் கத்துக்குட்டி....
நகைச்சுவைகளில் அதிக நாட்டம் கொண்டவன்....
அப்புறம்... சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல !!!

என் படைப்புகள்
கணபதி சுப்பிரமணியன் செய்திகள்
கணபதி சுப்பிரமணியன் - கணபதி சுப்பிரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Oct-2015 2:09 pm

#nylon_பூவே ☔

என்றோ பரணில் தொலைந்த
உன்னை தேடிப் பிடித்து....
மெல்ல உந்தன் இதழ் தட்டி !
செல்லம் கொஞ்ச இடை தட்டி !

பனியில் அயர்ந்தது போதுமடி - இது
பணியில் அமரும் நேரமடி !
இனியும் துவண்டு உறங்கினால் - என்னை
வருணன் நனைக்க நேருமடி !

மழை இசைக்கும் தாளத்தை
பிழை இன்றி கேட்டு
பா விரைந்து எழுதவே #குடை
பூ விரிந்து எழுகவே !!!

பருவ மழை.......!

மேலும்

நன்றி நட்பே ! 30-Oct-2015 4:46 pm
அழகிய படைப்பு... சிறப்பு.. ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 29-Oct-2015 2:32 am
கணபதி சுப்பிரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Aug-2015 12:27 pm

உன் விழியே போதுமடி
.....கயிறுகள் வேண்டாம்
என்னை கட்டி இழுக்க !!

உன் இதழே போதுமடி
.....குறல்கள் வேண்டாம்
நான் மனதில் இறுத்த !!

உன் சிகையே போதுமடி
.....இருள்கள் வேண்டாம்
என்னை மிரட்டி வைக்க !!

உன் நடையே போதுமடி
.....மதுக்கள் வேண்டாம்
நான் மயங்கி கிடக்க !!

உன் ஸ்பரிசமே போதுமடி
.....தாலாட்டு வேண்டாம்
என்னை உறங்க வைக்க !!

உன் வெட்கமே போதுமடி
.....தெய்வங்கள் வேண்டாம்
நான் தொழுது இருக்க !!

உன் துணையே போதுமடி
.....தமிழ்கூட வேண்டாம்
என்னை வாழ வைக்க !!

என் இக்கவிதையே போதுமடி
.....மௌனங்கள் வேண்டாம்
என்னை நீ வந்து அணைக்க !!!

மேலும்

கணபதி சுப்பிரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Dec-2014 6:27 pm

வருடம் நம் மனம்...
வருடும் அந்த கவிதையின்...
முதல்வரியாய் ஜனவரியில் !!
படிக்க துடங்கி மெதுவாய் வளரும்
டிசம்பர் பூவாய் விரிந்து மலரும் !!!

மிஞ்சிய ஏமாற்றம்..,
எஞ்சிய அதிருப்தி..,
கொஞ்சிய அவமானம் ..,

இவையுடன்,
கொஞ்சம் ஆசை...,
கொஞ்சம் எதிர்பார்ப்பு..,
கொஞ்சம் நம்பிக்கை...,
கொஞ்சம் ரெசல்யுசன்...,

என
கையளவு நம்பிக்கையுடன்
நெஞ்சளவு தைரியத்துடன்

வலதுகால் முன்வைத்து
பலம்தோல் தட்டிவரும்
இளம்குளிர் தென்றலாம்
"வளம்மிக்க என் நண்பர்களுக்கு"

2015 ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !!!

மேலும்

கணபதி சுப்பிரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2014 10:50 am

நீர்க்குமிழி மெல்ல
....மெல்ல மூழ்குகிறது !
சிந்து பைரவி
....கண்ணீர் வெள்ளமாகிறது !
அபூர்வ ராகங்கள்
....எல்லாம் மௌனமாகிறது !
நினைத்தாலே இனிக்கும்
....இனி கனவுகளாகிறது !
வறுமையின் நிறம்
....கன்னங்களில் சிவக்கிறது !
தண்ணீர் தண்ணீர்
....கானல் நீராகிறது !
புன்னகைக்க மன்னன்
....மனம் மறுக்கிறது !
எதிர்நீச்சல் தெரியாது
....சினிமா தத்தளிக்கிறது !
பொய் நீ-இல்லை
....என்பதே மெய்யாகிறது !

படைப்புகளில் மட்டுமல்ல
படைப்பாளியாகவும் வானமே எல்லை என்றாகிவிட்டாய் !!

சொர்க்கத்தில் புதுப்புது அர்த்தங்களை சேர்க்கப் புறப்பட்டுவிட்டாயோ ?!?

இயக்குநர் சிகரமே !
காலம் உள்ளவரை..
உன் படைப்

மேலும்

உங்களுடன் சேர்ந்து அஞ்சலி செலுத்துகிறேன் அந்த சிகரத்திற்கு! 24-Dec-2014 11:12 am
கணபதி சுப்பிரமணியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Nov-2014 12:16 pm

பிறந்தநாள்....,
எனக்கு என்றால் அது மகிழ்ச்சி..!
அண்ணைக்கு என்றால் அது பாசம்..!
அய்யனுக்கு என்றால் அது அன்பு..!
மனைவிக்கு என்றால் அது பிரியம்..!
பிள்ளைக்கு என்றால் அது சுகம்..!
தலைவனுக்கு என்றால் அது பெருமை !!

ஐந்துகரனை சிலையில் கண்டோம்..!
பிரபாகரனை சிலோனில் கண்டோம் !!

பணத்திற்காக பாடுபடும் பூமியில்..! தன்
இனத்திற்காக பாடுபட்ட சாமி நீ !!

தமிழை போற்றி பூசினோம்..! நாங்கள்
தமிழரை கயவர்கள் புசிக்கவிட்டோம் !!

பிரபாகரன்-நீ பார்த்தாலும் பார்த்தாய்..!
துப்பாக்கியில் தோட்டாக்களை கோர்த்தாய்..!
புலிகளை ஒன்றாய் சேர்த்தாய்..!
பலநாள் போராடி வேர்த்தாய்..!
இனமனதில் பாலை வார்த்தாய்..!

மேலும்

கணபதி சுப்பிரமணியன் - கணபதி சுப்பிரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Oct-2014 7:48 pm

மறந்தும் மறந்துவிடக்கூடாது என
எக்கணமும் நினைத்தேன்...
மறந்தாக வேண்டும் என்பதற்காக
எக்கணமும் நினைக்கிறேன் !!


கனவுகளில் உன் நினைவுகளை
தைத்து வாழ்ந்தவன்..
நினைவில் கூட உன் கனவுகளை மட்டுமே
வைத்து வாழ்கிறேன் !!


என் கண்களை திருடிவிட்டாய்
காதலித்தேன் பார்வையற்று..
கண்ணீரையும் திருடிவிட்டாய்
அழுகிறேன் கண்ணில் வேர்வையற்று !!


அன்று அருகினில்
நீயெல்லாம் என் கவிதையானாய்...
இன்று தொலைவினில்
என் கவிதைகளெல்லாம் நீயாகிறாய் !!


நீ இல்லாததொரு நிகழ்காலம்..
அதில் என்ன வருங்காலம்..
எனக்கு என்ன எதிர்காலம்... இனி
என்றும் அது உயிரற்ற இறந்தகாலம் !!


பிரிவின் துயரம்...புரியவைக்

மேலும்

மிக்க நன்றி கருத்திற்கு ! 15-Oct-2014 2:31 pm
நன்றி நண்பரே !! 15-Oct-2014 2:30 pm
நல்லா இருக்கு !! நீயெல்லாம் எனுமிடத்தில் நினைவெல்லாம் நீ - என்றிருந்திடின் ?? வாழ்த்துக்கள் !!! 12-Oct-2014 10:44 am
அருமை நண்பரே....! 12-Oct-2014 10:34 am
கணபதி சுப்பிரமணியன் - நா கூர் கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Oct-2014 1:57 am

உன் மௌனம்
களைந்த பேச்சு...
நீ கொட்டித் தீர்த்த
அடைமழை...

பாவை நீ
பூட்டி வைத்த
பார்வைகள் அனைத்தும்...

என் தாய் மண்ணின்
இருளைப் போக்கும்
மின்சாரமடி...

சுண்டு விரலால்
ஈர்க்கும் காந்தமடி...
சுருண்டு விழுவேன்
உனை பார்த்த நொடி...

என் கவிதைகளுக்கு
நீ சந்தமடி...
என் கற்பனைக்கு
மட்டும் சொந்தமடி....!

மேலும்

ஹா ஹா ஹா மிக்க மகிழ்ச்சி நண்பரே..... வருகை தந்து ரசித்தமைக்கும் ஊக்கமான கருத்துப்பதிவிற்கும் நன்றிகள் பல....! 31-Oct-2014 7:52 am
சுண்டு விரலால் ஈர்க்கும் காந்தமடி... சுருண்டு விழுவேன் உனை பார்த்த நொடி -------------------------------------- அருமை அருமை!! கற்பனை அழகு ... காதலில் கலக்குறீங்க தோழா! 31-Oct-2014 12:45 am
வருகை தந்து காதலை ரசித்தமைக்கு நன்றி நட்பே....! 19-Oct-2014 8:28 pm
அருமையான காதல் படைப்பு.... அருமை........ 19-Oct-2014 7:30 pm
கணபதி சுப்பிரமணியன் - கணபதி சுப்பிரமணியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2014 8:01 pm

நீ ஏறெடுத்து பார்த்ததென்றோ ஒருமுறை....
என் தனிமைக்கு அன்றிலிருந்து விடுமுறை....

இந்த காதல் வருவதற்கு ஏதுடி விதிமுறை....
அதை சொல்வதற்கு தான் பற்பல செய்முறை....

மென்மையே ஏன் இந்த இதய - வன்முறை....
என் உயிரை கழற்றி மாட்டுகிறாய் பன்முறை....

ஈகோ மலரே மணங்கள் மட்டும் எதிர்மறை....
எழுதிவிடு நம் பிரிவிற்கெல்லாம் ஒரு முடிவுரை....

முடித்துவிடு என்னுள் நீ புரியும் அடக்குமுறை....
இணைந்து செல்வோம் கடந்து பல வரையறை.....

விருட்சமென தழைத்தோங்க நம் தலைமுறை....
ஈர விழி கொண்டு காத்திருப்பேன் நீ வரும்வரை...!!

மேலும்

கருத்துக்கு நன்றி... 22-Sep-2014 12:35 pm
அருமை .. 20-Sep-2014 5:39 pm

கண்களிரண்டைப் பார் - கவிதை கொட்டும் !!
பழகிப் பார் - தைரியம் கிட்டும் !!
சொல்லிப் பார் - காதல் எட்டும் !!
நெருங்கிப் பார் - மோகம் சொட்டும் !!
சண்டையிட்டுப் பார் - ஊடல் முட்டும் !!

மொத்தத்தில்,
காதலித்துப் பார் - கவலைகள் கதவை தட்டும் !!!

மேலும்

நன்றி தோழரே !! 30-Jul-2014 12:39 pm
காதலித்துப் பார் -சொர்க்கம் உன் மனக்கதவை தட்டும் !!! கடுகளவும் கற்பனையோ கட்டுக்கதையோ இன்றி கடலளவு அனுபவ ரீதியிலான உண்மை !! வாழ்த்துக்கள் & நன்றி வாய்ப்பு வழங்கியமைக்கு !!! 29-Jul-2014 10:47 pm
நன்றி 29-Jul-2014 9:53 pm
முழுக்க முழுக்க கற்பனையே.....ஹா ஹா 29-Jul-2014 9:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே