கோபிநாத் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோபிநாத்
இடம்:  வேளச்சேரி
பிறந்த தேதி :  02-Sep-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Aug-2018
பார்த்தவர்கள்:  17
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிஞன்

என் படைப்புகள்
கோபிநாத் செய்திகள்
கோபிநாத் - கோபிநாத் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Aug-2018 12:31 pm

தோழிக்கு!

அன்னையின் மடி
அவளின் தோள்
வித்தியாசம் பெரியதாய்
காட்டியதில்லை...

என்னை காயப்படுத்தியதில்லை
என் காயங்களுக்கு
மருந்தாகியிருக்கிறாள்..

தோல்வியில் என்னை
பலரும் வேடிக்கை
பார்க்க, இன்று
என் வெற்றியை
வேடிக்கை பார்க்க
செய்தவள்..!

குழந்தையின் முதல்
நடைபழகு எத்தனை
அழகோ.. அத்தனை
அழகு அவள்
கைகோர்த்து நடப்பது..!

எப்படி வந்தாள்
அவள் நம்வாழ்வில்.?

வாழ்நாளின் ஓர் பொக்கிஷம்
பள்ளி நினைவுகள்...
அவை வாழ்நாள் முழுவதும்
நினைவுகளாக அல்லாமல்
நிஜங்களில்
இனிக்கிறதென்றால்
காரணம் அவள்...
என்-உடன்..!

பள்ளியில் ஆசிரியர்
கேட்கும் கேள்விகளுக்கு
விடை தெரியாது
விழிக்கையில் ஓர்
அசரீரி என் பின்னால்
ஒலிக்கும்...
குழந்தைகள் ரகசியங்களை சொல்வது போல மெல்லியதாய்
அவள் குரல்.

அது இன்றுவரை
நான் வாழ்வின் விடை
தெரியாமல் நிற்கும்
போதெல்லாம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது...
நவீனத்திற்கு ஏற்றார் போல தொலைபேசி வழியாக...

குழந்தை பருவத்தை
கடந்து இளமை
பருவத்தில் கிடைத்த
நட்பெனும் முத்து...
மீண்டும் குழந்தை
பருவத்திற்கே
கைவிரல் பிடித்து
கடத்தி சென்றவள்..!

நண்பர்கள் அனைவரின்
கண்களிலும் தன் வருகையின்
ஏக்கத்தை ஏற்படுத்தியவள்..!

என் வாழ்வில் மகிழ்ச்சியான
தருணங்கள் யாவும்
அவள் வழங்கியதாகவே
இருக்கும்...

துயரங்கள் பல அவள்
கண்ட போதிலும்
ஆறுதல் எதிரப்பார்ப்பதில்லை...
ஆனால் இன்றுவரை
என் துயரங்களுக்கு
ஆறுதல் அவள் மட்டுமே..!

தன்னுள் பல சோகங்கள்
இருப்பினும் எங்களுடன்
சேர்ந்து சிரித்துப்பேசி
புன்னகை அள்ளித்தெளித்து
கொண்டிருப்பாள்..

ஏனெனில் 

வண்டியில் பூட்டிய இரண்டு மாடுகளில்
ஒரு மாடு சோர்வடைந்தால் கூட
மகிழ்ச்சி எனும் சக்கரம்
சுழலாது என்பதை நன்கு
அறிந்தவள்..!

மொட்டுக்கள் அவள் மௌனம்
பூக்கள் அவள் சிரிப்பு
மனம் வாடியதை மட்டும்
தேகத்தில் காட்டிட மாட்டாள்..

அவளுடன் கைகோர்த்து
பள்ளி சென்ற காலங்கள்
வசந்தகாலங்களே...
பயணித்த சாலைகள்
மரங்களை 
கடக்கையில் அவள் 
நினைவுகள் உணர்த்தி
பூக்களை உதிர்க்கும்...

யதார்த்தமான பேச்சு
காயப்படுத்தாத வார்த்தைகள்
பெரிதாய் பாதிக்காத கோபம்
எல்லாம் அவளின் சிறப்புகள்...

அழகாய் இருக்கிறோம்
என்ற திமிரே இல்லாமல்
இருப்பது அவள் அழகு..

கவர்ச்சியான பேச்சு
வசீகரிக்கும் முகம்
மனம் வீசிடும் புன்னகை
மயக்கிடும் கண்கள்
ரசிக்க வைக்கும் நடத்தை
நட்பின் இலக்கணம்
இப்படி சொற்களில்
பஞ்சம் ஏற்படும் அளவிற்கு
வர்ணிக்க பேரதிசயம்
அவள்..!

அவளுடனான தினசரி
பேருந்து பயணம்
பள்ளி இன்னும் சற்று
தொலைவில் இருந்திருக்கலாமே 
என்ற ஏக்கத்தைய
உண்டாக்கும் அளவிற்கு
சுவாரஸ்யமான பேச்சு..

வெறுமை என்பதற்கான
அர்த்தங்கள் அவள்
பள்ளி விடுப்பு எடுக்கும்
நாட்களில் அறிந்து கொள்ளலாம்...

என்னுடைய அந்த காலம்
என்பதை அவள் காலம்
என்று சொல்லும் அளவிற்கு
அந்தக் காலம் பற்றிய
நினைவுகளில்
அவள் மட்டுமே
நிறைந்திருப்பாள்...

அன்பில் தாய்மை
விரல்பிடித்து வழிநடத்துவதில்
தந்தை... அவள்!

கடற்கரையில் துள்ளி
விளையாடிய பொழுதுகள்
அவள் பாதம் தழுவிட
மாட்டோமா என்று ஏங்கி
எட்டி பார்த்த கடல் அலைகள்
இன்றும் நினைவில்...

அன்று மட்டும் ஏனோ
மாலை மங்கிய வெளிச்சத்தில்
கடல் பிரமிப்பாய் காட்சியளித்தது..

பல காதலர்களின் இச்சைகளை
கண்டு கண்மூடிய கடல்
அன்று அவள்
துள்ளி குதித்து விளையாடியதை
சூரியனை நிறுத்தி பிடித்து
வெளிச்சத்தில்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது..!

எதிர்காலத்தை பற்றி
கவலை ஏதும் இல்லாது
பறவைகளை போல்
நாங்கள்
சுற்றித்திருந்த காலமது...

அவளுடன் என் நட்பு
நினைவுகளிலேயே இத்தனை
அழகாக இருக்கையில்
நிஜங்கள் எத்தனை
வண்ணமயமாக இருந்திருக்கும்
நினைக்கையிலே
சிலிர்த்துவிடும்...

மிகப்பெரிய பிரிவை
சந்திக்க போகிறோம்
என்றறியாமல்
மகிழ்ச்சியாக இறுதித்தேர்வை
முடித்தோம்..

அவளின் பிரிவு என் வாழ்வின்
இலையுதிர் காலங்கள்..
கூட்டில் வசித்த
பறவைகள் ஆளுக்கொரு
திசை நோக்கி சிறகடித்தன...

புதிய நட்புகளுடன்
அவரவர் கல்லூரி வாழ்க்கை 
நோக்கி பயணம்...

கடவுள் எங்கள்
நட்பை கண்டு நெகிழந்தானோ
என்னவோ பிரிவுகள்
நிரந்தரமாகிடாமல் கைப்பேசி
எனும் தொழில்நுட்பத்தை
எளியவர் கைககளிலும் 
கொண்டு சேர்த்தான்...

அருகில் இருக்கையில்
முகம் கண்டு நம் நலம் 
அறிந்தவள் 
அன்றிலிருந்து குறுந்தகவல்களில்
நலம் விசாரிக்கலானாள்...

புதிய நட்புகள் பல
கிடைத்தும் அவள் இடத்தை
எவராலும் நிரப்பிட
இயலாதவாறு எத்தனை
சாதனைகளை என்னுள்
படைத்துவிட்டு சென்றிருக்கிறாள்
அவள்!

சந்திப்புகள் குறைய
தொடங்கி அவள்
நினைவுகள் அதிகரித்தன...

கல்லூரி வாழ்க்கை
அவளின்றி
கடினமாக நகர்ந்து
முடிந்தன...

சூழ்நிலையில் மிகப்பெரியதொரு
ஏமாற்றம்! மீண்டும்
நினைவுகளை மட்டும் கையில்
தினித்தது...
அவளுடன் உன்னுடனான நட்பு
கவலைகளற்று நாட்கள் கழித்தாகிற்று
இனி கவலை தனிமை
அவமானங்கள் துயர்
கண்டு வா
காலம் உன்னுடன் அவள்
நட்பை சேர்க்கும்
என்றது...

அவள் இல்லாது
இலையுதிர் காலங்களே
நம்வாழ்வின் நிரந்திரமென
நினைத்திருந்தேன்...

நாட்கள் யுகங்களென
கடந்தன...
காற்று வீசுவது கூட
இரைச்சலாகவே இருந்தது
அவள் குரல் கேட்காமல்...

வாழ்க்கை என்னவென்று
கற்றுக் கொடுத்திருக்கிறாளே..
தனிமையிலும் வாழப்பழகு
என்று.. ஒத்திகைக்காக
புறப்பட்டுவிட்டாளோ...

தனிமையின் ஒத்திகைகள்
வேணாமடி அதை 
நான் மரணிக்கையில்
அறிந்து கொள்கிறேன்...
என்றெல்லாம்
புலம்பியிருக்கிறேன்...

ஒருத்தியின் பிரிவு
இத்தனை துயரத்தை
தந்திருப்பின் என்
அத்தனை உறவுகளுக்கு
மத்தியில் எப்படி
மிளிர்ந்நிருப்பாள் அவள்..

அவளுடன் மகிழ்ச்சியாய்
சிறகடித்து பறந்த
காலங்கள் போய்
சிறகொடிந்த பறவைகளாய்
ஆளுக்கொரு திசையில்
ஏதோ ஒரு வாழ்க்கையை
வாழப்பழகி கொண்டிருந்தோம்...

வருடங்கள் பல ஓடினாலும்
நினைவுகள் பின்னோக்கி
அவள் நான் நட்புவளர்த்த
காலத்திற்கே இழுத்தன...

அவளால் அற்புதங்கள் பல
கண்டிருக்கிறேன்...

ஆனால் அறிவியல்
அற்புதத்தில் 
கண்டேன் என் அதிசயத்தை..
முகநூல் வழியே
என்னுயிர் தோழியின்
முகம்...

அழகியவள் பேரழகியாக
மாறி போயிருந்தாள்...
இத்தனை வருடத்தில் இடையில்
தேவலோகம் சென்று
வந்திருப்பாள் போல...

அத்தனைநாள் திட்டித்தீர்த்த
இறைவனை நன்றிகள்
தெரிவித்து வணங்கினேன்...

பல வருடம் நான்
இழந்த மகிழ்ச்சியெல்லாம்
திரும்ப கிடைத்தது போல்
ஓர் உணர்வு...

வந்தது அவளின் முதல்
குறுந்தகவல்...
நிறைய பேச தொடங்கினோம்...

நேரில் சந்தித்தது
பிரிந்துபோன என்
இழந்த கடந்த காலங்களை
அருகே கொண்டு
வந்து நிருத்தியிருந்தாள்
நட்புக்கெல்லாம்
இளவரசி...

எவ்வளவு மாற்றங்கள்
அவளிடம்.. அன்பு
மட்டும் அப்படியே..

வருங்காலங்கள் யாவும் இனி
வசந்தகாலங்களாகவே
இனிக்கும் என அவள்
கண்கள் உறுதியளித்தன...

விதிகளை எழுதிக்
கொண்டிருந்த இறைவன்
எழுது கோலை கீழே
வைத்துவிட்டு...
எங்கள் நட்பை
ரசித்துக்கொண்டே
சிரித்திருந்தான்...
அவன் எழுதிய வரிகளில்
ரசித்த வரிகளாகியிருக்கும்...
மீண்டும்
தன் எழுதுகோலை
கையில் எடுத்தான்...

நினைவுகள்
தொடரும்...

- அவள் தோழன்

மேலும்

கோபிநாத் - எண்ணம் (public)
09-Aug-2018 12:34 pm

தோழிக்கு!

அன்னையின் மடி
அவளின் தோள்
வித்தியாசம் பெரியதாய்
காட்டியதில்லை...

என்னை காயப்படுத்தியதில்லை
என் காயங்களுக்கு
மருந்தாகியிருக்கிறாள்..

தோல்வியில் என்னை
பலரும் வேடிக்கை
பார்க்க, இன்று
என் வெற்றியை
வேடிக்கை பார்க்க
செய்தவள்..!

குழந்தையின் முதல்
நடைபழகு எத்தனை
அழகோ.. அத்தனை
அழகு அவள்
கைகோர்த்து நடப்பது..!

எப்படி வந்தாள்
அவள் நம்வாழ்வில்.?

வாழ்நாளின் ஓர் பொக்கிஷம்
பள்ளி நினைவுகள்...
அவை வாழ்நாள் முழுவதும்
நினைவுகளாக அல்லாமல்
நிஜங்களில்
இனிக்கிறதென்றால்
காரணம் அவள்...
என்-உடன்..!

பள்ளியில் ஆசிரியர்
கேட்கும் கேள்விகளுக்கு
விடை தெரியாது
விழிக்கையில் ஓர்
அசரீரி என் பின்னால்
ஒலிக்கும்...
குழந்தைகள் ரகசியங்களை சொல்வது போல மெல்லியதாய்
அவள் குரல்.

அது இன்றுவரை
நான் வாழ்வின் விடை
தெரியாமல் நிற்கும்
போதெல்லாம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது...
நவீனத்திற்கு ஏற்றார் போல தொலைபேசி வழியாக...

குழந்தை பருவத்தை
கடந்து இளமை
பருவத்தில் கிடைத்த
நட்பெனும் முத்து...
மீண்டும் குழந்தை
பருவத்திற்கே
கைவிரல் பிடித்து
கடத்தி சென்றவள்..!

நண்பர்கள் அனைவரின்
கண்களிலும் தன் வருகையின்
ஏக்கத்தை ஏற்படுத்தியவள்..!

என் வாழ்வில் மகிழ்ச்சியான
தருணங்கள் யாவும்
அவள் வழங்கியதாகவே
இருக்கும்...

துயரங்கள் பல அவள்
கண்ட போதிலும்
ஆறுதல் எதிரப்பார்ப்பதில்லை...
ஆனால் இன்றுவரை
என் துயரங்களுக்கு
ஆறுதல் அவள் மட்டுமே..!

தன்னுள் பல சோகங்கள்
இருப்பினும் எங்களுடன்
சேர்ந்து சிரித்துப்பேசி
புன்னகை அள்ளித்தெளித்து
கொண்டிருப்பாள்..

ஏனெனில் 

வண்டியில் பூட்டிய இரண்டு மாடுகளில்
ஒரு மாடு சோர்வடைந்தால் கூட
மகிழ்ச்சி எனும் சக்கரம்
சுழலாது என்பதை நன்கு
அறிந்தவள்..!

மொட்டுக்கள் அவள் மௌனம்
பூக்கள் அவள் சிரிப்பு
மனம் வாடியதை மட்டும்
தேகத்தில் காட்டிட மாட்டாள்..

அவளுடன் கைகோர்த்து
பள்ளி சென்ற காலங்கள்
வசந்தகாலங்களே...
பயணித்த சாலைகள்
மரங்களை 
கடக்கையில் அவள் 
நினைவுகள் உணர்த்தி
பூக்களை உதிர்க்கும்...

யதார்த்தமான பேச்சு
காயப்படுத்தாத வார்த்தைகள்
பெரிதாய் பாதிக்காத கோபம்
எல்லாம் அவளின் சிறப்புகள்...

அழகாய் இருக்கிறோம்
என்ற திமிரே இல்லாமல்
இருப்பது அவள் அழகு..

கவர்ச்சியான பேச்சு
வசீகரிக்கும் முகம்
மனம் வீசிடும் புன்னகை
மயக்கிடும் கண்கள்
ரசிக்க வைக்கும் நடத்தை
நட்பின் இலக்கணம்
இப்படி சொற்களில்
பஞ்சம் ஏற்படும் அளவிற்கு
வர்ணிக்க பேரதிசயம்
அவள்..!

அவளுடனான தினசரி
பேருந்து பயணம்
பள்ளி இன்னும் சற்று
தொலைவில் இருந்திருக்கலாமே 
என்ற ஏக்கத்தைய
உண்டாக்கும் அளவிற்கு
சுவாரஸ்யமான பேச்சு..

வெறுமை என்பதற்கான
அர்த்தங்கள் அவள்
பள்ளி விடுப்பு எடுக்கும்
நாட்களில் அறிந்து கொள்ளலாம்...

என்னுடைய அந்த காலம்
என்பதை அவள் காலம்
என்று சொல்லும் அளவிற்கு
அந்தக் காலம் பற்றிய
நினைவுகளில்
அவள் மட்டுமே
நிறைந்திருப்பாள்...

அன்பில் தாய்மை
விரல்பிடித்து வழிநடத்துவதில்
தந்தை... அவள்!

கடற்கரையில் துள்ளி
விளையாடிய பொழுதுகள்
அவள் பாதம் தழுவிட
மாட்டோமா என்று ஏங்கி
எட்டி பார்த்த கடல் அலைகள்
இன்றும் நினைவில்...

அன்று மட்டும் ஏனோ
மாலை மங்கிய வெளிச்சத்தில்
கடல் பிரமிப்பாய் காட்சியளித்தது..

பல காதலர்களின் இச்சைகளை
கண்டு கண்மூடிய கடல்
அன்று அவள்
துள்ளி குதித்து விளையாடியதை
சூரியனை நிறுத்தி பிடித்து
வெளிச்சத்தில்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது..!

எதிர்காலத்தை பற்றி
கவலை ஏதும் இல்லாது
பறவைகளை போல்
நாங்கள்
சுற்றித்திருந்த காலமது...

அவளுடன் என் நட்பு
நினைவுகளிலேயே இத்தனை
அழகாக இருக்கையில்
நிஜங்கள் எத்தனை
வண்ணமயமாக இருந்திருக்கும்
நினைக்கையிலே
சிலிர்த்துவிடும்...

மிகப்பெரிய பிரிவை
சந்திக்க போகிறோம்
என்றறியாமல்
மகிழ்ச்சியாக இறுதித்தேர்வை
முடித்தோம்..

அவளின் பிரிவு என் வாழ்வின்
இலையுதிர் காலங்கள்..
கூட்டில் வசித்த
பறவைகள் ஆளுக்கொரு
திசை நோக்கி சிறகடித்தன...

புதிய நட்புகளுடன்
அவரவர் கல்லூரி வாழ்க்கை 
நோக்கி பயணம்...

கடவுள் எங்கள்
நட்பை கண்டு நெகிழந்தானோ
என்னவோ பிரிவுகள்
நிரந்தரமாகிடாமல் கைப்பேசி
எனும் தொழில்நுட்பத்தை
எளியவர் கைககளிலும் 
கொண்டு சேர்த்தான்...

அருகில் இருக்கையில்
முகம் கண்டு நம் நலம் 
அறிந்தவள் 
அன்றிலிருந்து குறுந்தகவல்களில்
நலம் விசாரிக்கலானாள்...

புதிய நட்புகள் பல
கிடைத்தும் அவள் இடத்தை
எவராலும் நிரப்பிட
இயலாதவாறு எத்தனை
சாதனைகளை என்னுள்
படைத்துவிட்டு சென்றிருக்கிறாள்
அவள்!

சந்திப்புகள் குறைய
தொடங்கி அவள்
நினைவுகள் அதிகரித்தன...

கல்லூரி வாழ்க்கை
அவளின்றி
கடினமாக நகர்ந்து
முடிந்தன...

சூழ்நிலையில் மிகப்பெரியதொரு
ஏமாற்றம்! மீண்டும்
நினைவுகளை மட்டும் கையில்
தினித்தது...
அவளுடன் உன்னுடனான நட்பு
கவலைகளற்று நாட்கள் கழித்தாகிற்று
இனி கவலை தனிமை
அவமானங்கள் துயர்
கண்டு வா
காலம் உன்னுடன் அவள்
நட்பை சேர்க்கும்
என்றது...

அவள் இல்லாது
இலையுதிர் காலங்களே
நம்வாழ்வின் நிரந்திரமென
நினைத்திருந்தேன்...

நாட்கள் யுகங்களென
கடந்தன...
காற்று வீசுவது கூட
இரைச்சலாகவே இருந்தது
அவள் குரல் கேட்காமல்...

வாழ்க்கை என்னவென்று
கற்றுக் கொடுத்திருக்கிறாளே..
தனிமையிலும் வாழப்பழகு
என்று.. ஒத்திகைக்காக
புறப்பட்டுவிட்டாளோ...

தனிமையின் ஒத்திகைகள்
வேணாமடி அதை 
நான் மரணிக்கையில்
அறிந்து கொள்கிறேன்...
என்றெல்லாம்
புலம்பியிருக்கிறேன்...

ஒருத்தியின் பிரிவு
இத்தனை துயரத்தை
தந்திருப்பின் என்
அத்தனை உறவுகளுக்கு
மத்தியில் எப்படி
மிளிர்ந்நிருப்பாள் அவள்..

அவளுடன் மகிழ்ச்சியாய்
சிறகடித்து பறந்த
காலங்கள் போய்
சிறகொடிந்த பறவைகளாய்
ஆளுக்கொரு திசையில்
ஏதோ ஒரு வாழ்க்கையை
வாழப்பழகி கொண்டிருந்தோம்...

வருடங்கள் பல ஓடினாலும்
நினைவுகள் பின்னோக்கி
அவள் நான் நட்புவளர்த்த
காலத்திற்கே இழுத்தன...

அவளால் அற்புதங்கள் பல
கண்டிருக்கிறேன்...

ஆனால் அறிவியல்
அற்புதத்தில் 
கண்டேன் என் அதிசயத்தை..
முகநூல் வழியே
என்னுயிர் தோழியின்
முகம்...

அழகியவள் பேரழகியாக
மாறி போயிருந்தாள்...
இத்தனை வருடத்தில் இடையில்
தேவலோகம் சென்று
வந்திருப்பாள் போல...

அத்தனைநாள் திட்டித்தீர்த்த
இறைவனை நன்றிகள்
தெரிவித்து வணங்கினேன்...

பல வருடம் நான்
இழந்த மகிழ்ச்சியெல்லாம்
திரும்ப கிடைத்தது போல்
ஓர் உணர்வு...

வந்தது அவளின் முதல்
குறுந்தகவல்...
நிறைய பேச தொடங்கினோம்...

நேரில் சந்தித்தது
பிரிந்துபோன என்
இழந்த கடந்த காலங்களை
அருகே கொண்டு
வந்து நிருத்தியிருந்தாள்
நட்புக்கெல்லாம்
இளவரசி...

எவ்வளவு மாற்றங்கள்
அவளிடம்.. அன்பு
மட்டும் அப்படியே..

வருங்காலங்கள் யாவும் இனி
வசந்தகாலங்களாகவே
இனிக்கும் என அவள்
கண்கள் உறுதியளித்தன...

விதிகளை எழுதிக்
கொண்டிருந்த இறைவன்
எழுது கோலை கீழே
வைத்துவிட்டு...
எங்கள் நட்பை
ரசித்துக்கொண்டே
சிரித்திருந்தான்...
அவன் எழுதிய வரிகளில்
ரசித்த வரிகளாகியிருக்கும்...
மீண்டும்
தன் எழுதுகோலை
கையில் எடுத்தான்...

நினைவுகள்
தொடரும்...

- அவள் தோழன்

மேலும்

கோபிநாத் - எண்ணம் (public)
09-Aug-2018 12:31 pm

தோழிக்கு!

அன்னையின் மடி
அவளின் தோள்
வித்தியாசம் பெரியதாய்
காட்டியதில்லை...

என்னை காயப்படுத்தியதில்லை
என் காயங்களுக்கு
மருந்தாகியிருக்கிறாள்..

தோல்வியில் என்னை
பலரும் வேடிக்கை
பார்க்க, இன்று
என் வெற்றியை
வேடிக்கை பார்க்க
செய்தவள்..!

குழந்தையின் முதல்
நடைபழகு எத்தனை
அழகோ.. அத்தனை
அழகு அவள்
கைகோர்த்து நடப்பது..!

எப்படி வந்தாள்
அவள் நம்வாழ்வில்.?

வாழ்நாளின் ஓர் பொக்கிஷம்
பள்ளி நினைவுகள்...
அவை வாழ்நாள் முழுவதும்
நினைவுகளாக அல்லாமல்
நிஜங்களில்
இனிக்கிறதென்றால்
காரணம் அவள்...
என்-உடன்..!

பள்ளியில் ஆசிரியர்
கேட்கும் கேள்விகளுக்கு
விடை தெரியாது
விழிக்கையில் ஓர்
அசரீரி என் பின்னால்
ஒலிக்கும்...
குழந்தைகள் ரகசியங்களை சொல்வது போல மெல்லியதாய்
அவள் குரல்.

அது இன்றுவரை
நான் வாழ்வின் விடை
தெரியாமல் நிற்கும்
போதெல்லாம் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது...
நவீனத்திற்கு ஏற்றார் போல தொலைபேசி வழியாக...

குழந்தை பருவத்தை
கடந்து இளமை
பருவத்தில் கிடைத்த
நட்பெனும் முத்து...
மீண்டும் குழந்தை
பருவத்திற்கே
கைவிரல் பிடித்து
கடத்தி சென்றவள்..!

நண்பர்கள் அனைவரின்
கண்களிலும் தன் வருகையின்
ஏக்கத்தை ஏற்படுத்தியவள்..!

என் வாழ்வில் மகிழ்ச்சியான
தருணங்கள் யாவும்
அவள் வழங்கியதாகவே
இருக்கும்...

துயரங்கள் பல அவள்
கண்ட போதிலும்
ஆறுதல் எதிரப்பார்ப்பதில்லை...
ஆனால் இன்றுவரை
என் துயரங்களுக்கு
ஆறுதல் அவள் மட்டுமே..!

தன்னுள் பல சோகங்கள்
இருப்பினும் எங்களுடன்
சேர்ந்து சிரித்துப்பேசி
புன்னகை அள்ளித்தெளித்து
கொண்டிருப்பாள்..

ஏனெனில் 

வண்டியில் பூட்டிய இரண்டு மாடுகளில்
ஒரு மாடு சோர்வடைந்தால் கூட
மகிழ்ச்சி எனும் சக்கரம்
சுழலாது என்பதை நன்கு
அறிந்தவள்..!

மொட்டுக்கள் அவள் மௌனம்
பூக்கள் அவள் சிரிப்பு
மனம் வாடியதை மட்டும்
தேகத்தில் காட்டிட மாட்டாள்..

அவளுடன் கைகோர்த்து
பள்ளி சென்ற காலங்கள்
வசந்தகாலங்களே...
பயணித்த சாலைகள்
மரங்களை 
கடக்கையில் அவள் 
நினைவுகள் உணர்த்தி
பூக்களை உதிர்க்கும்...

யதார்த்தமான பேச்சு
காயப்படுத்தாத வார்த்தைகள்
பெரிதாய் பாதிக்காத கோபம்
எல்லாம் அவளின் சிறப்புகள்...

அழகாய் இருக்கிறோம்
என்ற திமிரே இல்லாமல்
இருப்பது அவள் அழகு..

கவர்ச்சியான பேச்சு
வசீகரிக்கும் முகம்
மனம் வீசிடும் புன்னகை
மயக்கிடும் கண்கள்
ரசிக்க வைக்கும் நடத்தை
நட்பின் இலக்கணம்
இப்படி சொற்களில்
பஞ்சம் ஏற்படும் அளவிற்கு
வர்ணிக்க பேரதிசயம்
அவள்..!

அவளுடனான தினசரி
பேருந்து பயணம்
பள்ளி இன்னும் சற்று
தொலைவில் இருந்திருக்கலாமே 
என்ற ஏக்கத்தைய
உண்டாக்கும் அளவிற்கு
சுவாரஸ்யமான பேச்சு..

வெறுமை என்பதற்கான
அர்த்தங்கள் அவள்
பள்ளி விடுப்பு எடுக்கும்
நாட்களில் அறிந்து கொள்ளலாம்...

என்னுடைய அந்த காலம்
என்பதை அவள் காலம்
என்று சொல்லும் அளவிற்கு
அந்தக் காலம் பற்றிய
நினைவுகளில்
அவள் மட்டுமே
நிறைந்திருப்பாள்...

அன்பில் தாய்மை
விரல்பிடித்து வழிநடத்துவதில்
தந்தை... அவள்!

கடற்கரையில் துள்ளி
விளையாடிய பொழுதுகள்
அவள் பாதம் தழுவிட
மாட்டோமா என்று ஏங்கி
எட்டி பார்த்த கடல் அலைகள்
இன்றும் நினைவில்...

அன்று மட்டும் ஏனோ
மாலை மங்கிய வெளிச்சத்தில்
கடல் பிரமிப்பாய் காட்சியளித்தது..

பல காதலர்களின் இச்சைகளை
கண்டு கண்மூடிய கடல்
அன்று அவள்
துள்ளி குதித்து விளையாடியதை
சூரியனை நிறுத்தி பிடித்து
வெளிச்சத்தில்
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது..!

எதிர்காலத்தை பற்றி
கவலை ஏதும் இல்லாது
பறவைகளை போல்
நாங்கள்
சுற்றித்திருந்த காலமது...

அவளுடன் என் நட்பு
நினைவுகளிலேயே இத்தனை
அழகாக இருக்கையில்
நிஜங்கள் எத்தனை
வண்ணமயமாக இருந்திருக்கும்
நினைக்கையிலே
சிலிர்த்துவிடும்...

மிகப்பெரிய பிரிவை
சந்திக்க போகிறோம்
என்றறியாமல்
மகிழ்ச்சியாக இறுதித்தேர்வை
முடித்தோம்..

அவளின் பிரிவு என் வாழ்வின்
இலையுதிர் காலங்கள்..
கூட்டில் வசித்த
பறவைகள் ஆளுக்கொரு
திசை நோக்கி சிறகடித்தன...

புதிய நட்புகளுடன்
அவரவர் கல்லூரி வாழ்க்கை 
நோக்கி பயணம்...

கடவுள் எங்கள்
நட்பை கண்டு நெகிழந்தானோ
என்னவோ பிரிவுகள்
நிரந்தரமாகிடாமல் கைப்பேசி
எனும் தொழில்நுட்பத்தை
எளியவர் கைககளிலும் 
கொண்டு சேர்த்தான்...

அருகில் இருக்கையில்
முகம் கண்டு நம் நலம் 
அறிந்தவள் 
அன்றிலிருந்து குறுந்தகவல்களில்
நலம் விசாரிக்கலானாள்...

புதிய நட்புகள் பல
கிடைத்தும் அவள் இடத்தை
எவராலும் நிரப்பிட
இயலாதவாறு எத்தனை
சாதனைகளை என்னுள்
படைத்துவிட்டு சென்றிருக்கிறாள்
அவள்!

சந்திப்புகள் குறைய
தொடங்கி அவள்
நினைவுகள் அதிகரித்தன...

கல்லூரி வாழ்க்கை
அவளின்றி
கடினமாக நகர்ந்து
முடிந்தன...

சூழ்நிலையில் மிகப்பெரியதொரு
ஏமாற்றம்! மீண்டும்
நினைவுகளை மட்டும் கையில்
தினித்தது...
அவளுடன் உன்னுடனான நட்பு
கவலைகளற்று நாட்கள் கழித்தாகிற்று
இனி கவலை தனிமை
அவமானங்கள் துயர்
கண்டு வா
காலம் உன்னுடன் அவள்
நட்பை சேர்க்கும்
என்றது...

அவள் இல்லாது
இலையுதிர் காலங்களே
நம்வாழ்வின் நிரந்திரமென
நினைத்திருந்தேன்...

நாட்கள் யுகங்களென
கடந்தன...
காற்று வீசுவது கூட
இரைச்சலாகவே இருந்தது
அவள் குரல் கேட்காமல்...

வாழ்க்கை என்னவென்று
கற்றுக் கொடுத்திருக்கிறாளே..
தனிமையிலும் வாழப்பழகு
என்று.. ஒத்திகைக்காக
புறப்பட்டுவிட்டாளோ...

தனிமையின் ஒத்திகைகள்
வேணாமடி அதை 
நான் மரணிக்கையில்
அறிந்து கொள்கிறேன்...
என்றெல்லாம்
புலம்பியிருக்கிறேன்...

ஒருத்தியின் பிரிவு
இத்தனை துயரத்தை
தந்திருப்பின் என்
அத்தனை உறவுகளுக்கு
மத்தியில் எப்படி
மிளிர்ந்நிருப்பாள் அவள்..

அவளுடன் மகிழ்ச்சியாய்
சிறகடித்து பறந்த
காலங்கள் போய்
சிறகொடிந்த பறவைகளாய்
ஆளுக்கொரு திசையில்
ஏதோ ஒரு வாழ்க்கையை
வாழப்பழகி கொண்டிருந்தோம்...

வருடங்கள் பல ஓடினாலும்
நினைவுகள் பின்னோக்கி
அவள் நான் நட்புவளர்த்த
காலத்திற்கே இழுத்தன...

அவளால் அற்புதங்கள் பல
கண்டிருக்கிறேன்...

ஆனால் அறிவியல்
அற்புதத்தில் 
கண்டேன் என் அதிசயத்தை..
முகநூல் வழியே
என்னுயிர் தோழியின்
முகம்...

அழகியவள் பேரழகியாக
மாறி போயிருந்தாள்...
இத்தனை வருடத்தில் இடையில்
தேவலோகம் சென்று
வந்திருப்பாள் போல...

அத்தனைநாள் திட்டித்தீர்த்த
இறைவனை நன்றிகள்
தெரிவித்து வணங்கினேன்...

பல வருடம் நான்
இழந்த மகிழ்ச்சியெல்லாம்
திரும்ப கிடைத்தது போல்
ஓர் உணர்வு...

வந்தது அவளின் முதல்
குறுந்தகவல்...
நிறைய பேச தொடங்கினோம்...

நேரில் சந்தித்தது
பிரிந்துபோன என்
இழந்த கடந்த காலங்களை
அருகே கொண்டு
வந்து நிருத்தியிருந்தாள்
நட்புக்கெல்லாம்
இளவரசி...

எவ்வளவு மாற்றங்கள்
அவளிடம்.. அன்பு
மட்டும் அப்படியே..

வருங்காலங்கள் யாவும் இனி
வசந்தகாலங்களாகவே
இனிக்கும் என அவள்
கண்கள் உறுதியளித்தன...

விதிகளை எழுதிக்
கொண்டிருந்த இறைவன்
எழுது கோலை கீழே
வைத்துவிட்டு...
எங்கள் நட்பை
ரசித்துக்கொண்டே
சிரித்திருந்தான்...
அவன் எழுதிய வரிகளில்
ரசித்த வரிகளாகியிருக்கும்...
மீண்டும்
தன் எழுதுகோலை
கையில் எடுத்தான்...

நினைவுகள்
தொடரும்...

- அவள் தோழன்

மேலும்

கருத்துகள்

மேலே