கவியாழினி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  கவியாழினி
இடம்:  Colombo
பிறந்த தேதி :  05-Mar-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  26-Dec-2012
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  35

என்னைப் பற்றி...

Student

என் படைப்புகள்
கவியாழினி செய்திகள்
கவியாழினி - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
கவியாழினி - தமிழ் ப்ரியா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2017 12:17 pm

கொடிகளில் அவிழ்ந்த மலர்கள் எல்லாம் இறைவன் பாதம் சேர்வதில்லை,
மரங்கள் உதிர்த்தக் கனிகள் எல்லாம் மண்ணில் விதையாகி முளைப்பதில்லை,
ஊற்றுகள் சுரக்கும் நீர் எல்லாம்
கடலிலே சென்றுக் கலப்பதில்லை,
கடவுளின் படைப்புகள் அனைத்தும்
வாழ்வில் இன்பம் காண்பதில்லை,

நிலையினை மறக்கும் வாழ்வின் சோகம்
விதியினை வென்ற சரித்திரம் இல்லை,
புதுமையை தேடும் விழிகள் என்றும்
இன்புற்று வாழ்வதும் இல்லை,
ஒரு முறை மலர்ந்து உதிர்ந்த பூக்கள்
மீண்டும் செடியில் சேர்வது இல்லை,
வாழ்வினை முழுமையாக வாழ்ந்து சலித்த
மனிதனும் பூமியில் இல்லை,

பிறர் கொண்ட இன்பம் நம்மைச் சேர்வதில்லை,
பிறரின் துன்பம் நமை விடுவத

மேலும்

உண்மைதான் சகோதரரே, இருப்பதை விட்டு பறப்பதற்கு அலைவது மனித இயல்பு.. வாழ்வின் புரிதலுக்கு இங்கு இடமின்றி போய்விடுகிறது... 20-May-2017 9:49 am
உண்மைதான்..வாழ்க்கையின் அர்த்தங்களை புரிந்து கொள்ளாமல் பலர் அதனது அழகியலை ரசிக்கத் தவறி விடுகின்றனர் 15-May-2017 4:43 pm
நன்றி ஐயா, கருத்தில் மனம் மகிழ்ந்தேன்... தங்களின் வார்த்தைகளும் வாழ்த்துக்களுமே மேலும் எழுத எமை ஊக்கப்படுத்தும்.... நன்றி, தமிழ்ப்ரியா... 15-May-2017 1:52 pm
இயற்கையின் விதியை அழகாகப் இயம்பி விட்டீர் தமிழ். வாழ்த்துகிறேன். தொடரட்டும் தங்கள் கவிப்பயணம். 15-May-2017 12:36 am
கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2017 10:22 am

மனிதத்தின் கொடிய விஷம்
விதி ஒன்றுண்டெனில் அதில் விலக்காய் பலர்
களங்கமிலா நட்பில் கறையாய் சிலர்
நூறு கயவர்கள் தன் உடல் கிழித்த போதும் சீறிப்பாய்ந்தவன் தன் உயிர்த் தோழனின் ஒற்றை வீச்சில் மரணித்தான்
சிதைந்தது அவன் தேகமல்ல பிளந்தது அவன் இதயம்
ஏழு ஆண்டு நட்பு இறுதி வரை - விஞ்ஞானத்தின் பிதற்றல்
நரிகளும் ஓநாய்களும் இருதயத்தில் குடிகொள்ளும் மனித இனமடா!
மாமன்னராம் சீசர் சிதையுண்டான் துரோகமதால்
ப்ரூடஸ்கள் நம்மிடையே வாழும் வரை நானும் துரோகத்தால் சிதைக்கப்பட்டவளே!!....

மேலும்

ஆழமான கருத்துக்கள்.... முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழியே.... 09-May-2017 11:27 am
கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Apr-2017 11:15 pm

ஆழ்மன மொழி யாருக்குப் புரியும்.
வெற்றிடமான மன வெளியில்.....
விறைத்து நிற்கும் உணர்வுகள்....
ஏற்க மறுக்கும் உண்மையின் இரைச்சல்கள்..
எங்கே ஓடத்தவிக்கின்றேன்..
தனிமையின் நிழல் தேடி....
அத்தனிமையில் நான் மட்டும்....போதும்.....
வலி கொடுக்கும் உன் நினைவுகளை மறந்து விட்டு......
இனி என் வாழ்வில் இரவுகள் மட்டும் போதும் நிலவுகள் தேவையில்லை...
கருமையாய் வரும் பகல்களை மட்டும் அனுமதிப்பேன்....
கடும் ரணமாற்றும் ஒளஷதங்கள் தேடினேன்....என் உயிர் வலி தீர்க்க ..
தேடித் தீர்ந்தது என் தேடல்....
புன்னகைக்கும் முகமூடி வேண்டும்...மாட்டிக்கொள்ள...
என் புன்னகை எனைச் சேரும் வரை...

மேலும்

கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2017 9:29 pm

தொலை தூரப் பாதையாய் வாழ்க்கை
எதைத் தொலைத்தோம் ....
தேடலே முழுநேரத் தேவையாக ....
விழிப்புக்கும் உறக்கத்திற்கும்
இடைப்பட்ட கால போராட்டம்....
வெல்வோமா வீழ்வோமா ...
விடை புரியா வேதனை...
வாழ்ந்துபார் எனப் பகரும் தன்னம்பிக்கை.......
வீழ்ச்சிகளால் எழுந்தவரே.... வென்றதாய் கூறும் சரித்திரம்....
சிந்தனையும் பலகோணங்களில் பரிணமிக்க.....
புதிரான எதிர்காலம் நோக்கி
பார்த்தபடி நானும்....

மேலும்

கவியாழினி - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Apr-2017 3:30 pm

கண்களை இறுக்கி மூடிக்கொண்டேன்....என் கனாக்களில் உன்னைச் சிறைப்பிடிக்க.....

மேலும்

கவியாழினி - கவியாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Apr-2017 10:52 pm

மொட்டவிழ்ந்த பூவில்
முதற் பனித்துளி வீழ்ந்திட்ட
சிலிர்ப்பாய் உன்
பெண்மையின் வெட்கம்
நீ நாணும் அழகில்
சொக்கி நின்றது நான் மட்டுமா....
இல்லை மொழிகளுமா..?
ஆயிரம் இலக்கியம் படித்தபோதும்
வாயடைத்து நின்றேன்..
வார்த்தைகள் இன்றி....

மேலும்

வெட்கம் இரசிப்பதற்கு மட்டுமல்ல... போற்றுவதற்குரியதும்தான்...! 18-Apr-2017 9:04 pm
நன்றி... 18-Apr-2017 11:20 am
நல்ல கற்பனை வாழ்த்துக்கள் 18-Apr-2017 10:30 am
கவியாழினி - வேல்பாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Apr-2017 6:47 pm

நெல் விளைந்த பூமியய்யா இது
நீரில்லாமல் வாடுதய்யா
வாழ வைத்த மண்ணும் இப்போ
வறண்டு போய் இருக்குதய்யா

சொட்டுத் தண்ணீர் இல்லாமல்
பச்சைப் பயிரு அழுவுதய்யா
சோகம் எல்லாம் சேர்ந்து வந்து
எங்கள் வாழ்க்கையையே ஆட்டுதய்யா

ஏரி குளம் வத்திப் போச்சு
பாதி சொந்தம் செத்துப் போச்சு
எங்கள் சோகக்கதையைக் கேட்பதற்கு
யாரும் இங்கு இல்லையய்யா

உலகப்பசியைத் தீர்த்து வைத்தோம் இப்போ
எங்கப்பசியை யார் அறிவார்?
தண்ணீர் இல்லாமல் தவிக்கிறோம் எங்கக்
கண்ணீரைத் துடைக்க யார் வருவார்?

மழையே நீ வாருமைய்யா
எங்கள் சோகம் தீர்க்க வாருமைய்யா
பட்டினியால் கிடந்து தவிக்கும் மக்கள்
பசித் தீர்க்க வாருமைய்யா

ஆக்கம்:

மேலும்

உண்மை நண்பரே! 22-Apr-2017 9:20 pm
நன்றி சகோதரி 19-Apr-2017 12:18 am
தரமான கவிதை... இன்னும் நாட்டை பற்றி எழுதுங்கள்.. 18-Apr-2017 9:02 pm
நன்றி நண்பரே 16-Apr-2017 12:50 pm
கவியாழினி - கவியாழினி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2017 10:48 pm

செய்கூலி சேதாரம்
தேவையில்லை. ..
நீயும் அணியலாம்
நானும் அணியலாம்
யாரும் அணியலாம். .....

மேலும்

நன்றி .... :) 12-Apr-2017 9:09 am
அழகிய வரிகள் மேலும் தொடருங்கள் வாழ்த்துக்கள்! 12-Apr-2017 12:15 am
கவியாழினி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-Aug-2016 11:39 pm

உள்ளப் புயலுக்கு இடையேயும் புன்னகைக்கும் உதடுகள்
தெரிந்தே தொலைத்ததை தேடும் விழிகள்
கனமான ஏக்கப் பெருமூச்சு
தவிக்கவைக்கும் எண்ணக் குவியல்கள்
செய்வதறியாமல் திகைக்கும் வயது
அனைத்தினதும் பிரதிபலிப்பாய்
இமை மூட மறுக்கும் நிலையில் கிறுக்கல்களாய் என் தினப்பதிவேட்டிடம் ஒரு ரகசிய சம்பாஷணை
நிரந்தர அமாவாசையில் சிக்கிய நிலவாய்
கருமைக்குள் மறைந்திட்ட ஓவியமாய்
இங்கு நான் நிறம் தொலைத்து காணாமல் போனேன் ................

மேலும்

நன்றி சகோதரி :) 17-Nov-2016 8:20 pm
கிறுக்கல்களில் காதலின் தவிப்பை கூறும் அழகான வரிகள்....... 12-Aug-2016 7:49 pm
நன்றி :) 12-Aug-2016 6:53 pm
மிக மிக அருமையான வரிகள் mam ...! நெஞ்சுக்குள் அழகானதொரு காதல் கவிதையை படித்த திருப்தி ...! காதலின் ஒட்டு மொத்த தவிப்பையும் பிரதிபலிக்கும் வார்த்தைகள் ...! அருமை...! நன்றி ..! 12-Aug-2016 1:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

அதிவீரதமிழன்

அதிவீரதமிழன்

திருநெல்வேலி
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
sarabass

sarabass

trichy
user photo

anusha nadaraja

colombo

இவரை பின்தொடர்பவர்கள் (17)

sarabass

sarabass

trichy
user photo

anusha nadaraja

colombo
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே