அப்துல் கரீம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அப்துல் கரீம்
இடம்:  Madurai
பிறந்த தேதி :  26-Feb-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Nov-2021
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  0

என்னைப் பற்றி...

இறை படைப்பில் நானும் ஒருவன்,

என் படைப்புகள்
அப்துல் கரீம் செய்திகள்

ஆதியின் வெடிப்பே  பிரபஞ்சத்தைப் படைத்த சிறப்பே 


இருளை போர்த்திய உடுப்பே  ஒளியாய் நின்ற சிறப்பே 


நரன் நாசியின் துடிப்பே  ஆவியாய் நின்ற சிறப்பே 


பலவகை பிரபஞ்ச படைப்பே  ஏகமாய் நின்ற சிறப்பே


ஆதி அந்தமற்ற இருப்பே நீ எங்கும் இருப்பது சிறப்பே 


அனைற்றையும் அழிக்கும் அழிப்பே நீ காத்து நிற்பது சிறப்பே


அறிவாய் நின்ற பொருளே நீ  அழிவில்லாதது  சிறப்பே ___


அடியாருக்கு அகப்படும் பொருளே என்னை இரட்சிக்க வந்திடு அனுதினமே


எங்கும் நிறைந்த பரமே உன்னை தலைவணங்கி  நிற்பது என் சிரமே 


உன்னிடம் கேட்பேன் வரமே அதை தருவது உந்தன் குணமே


            ------ அப்துல் கரீம்🥢








மேலும்

அப்துல் கரீம் - அருள் ஜீவா அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Oct-2019 5:21 pm

தேர்தல் ஆணையம், வாக்கு இயந்திரத்தின் மீது நம்பிக்கை உள்ளதா?

மேலும்

இல்லை 08-Feb-2023 3:37 pm
இல்லை 11-May-2022 12:56 pm
இருக்கிறது 11-Feb-2022 1:57 pm
இல்லை 06-Feb-2022 4:09 am

சிஷ்யன் = குருவே உங்களிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?


குரு = கேளு மைந்தா


சிஷ்யன் = படைப்பு கடவுள் யார்?  விஷ்ணு நாபியில் தோன்றிய  நான்கு முகம் கொண்ட பிரம்ம தேவன் என்கிறார்களே, அதுவும் அல்லாமல் பிரம்ம தேவனுக்கு கோவில் இல்லை என்று சொல்கிறார்கள் எதனால்?  என் சந்தேகம் தீர  இதன் உண்மையை தன்மையை விளக்குங்கள்

குரு = மைந்தா, விஷ்ணு என்பது நம்முடைய மனம் ஆகும், அந்த மனதில் இருந்து தோன்றிய அகங்காரம் பிரம்மாவாகும், ஆங்காரம் வழிபடக்கூடிய வணங்கத் தக்கது அல்ல என்று பொருள்படவே பிரம்மனுக்கு கோயில் இல்லை என்று சொல்லக் காரணம்,


சிஷ்யன் = குருவே அப்போது அந்த நான்கு முகங்கள் எதை குறிக்கிறது


குரு = மைந்தா முகம் என்றால் வழி என்று பொருள், விஷ்ணுவாகிய மனதில் இருந்து தோன்றிய பிரம்மா ஆகிய அகங்காரம் நான்கு வழிகளில் வெளிப்படுகிறது,  அவை மனம், சித்தம்,  புத்தி,  அகங்காரம் ஆகும். இந்த நான்கு வழிகளைத் தான் நான்கு முகங்களாக பிரம்மாவிற்கு குறிப்பிடப்படுகிறது,


சிஷ்யன் = இந்த நான்கின் விளக்கம் என்ன குருவே?


குரு  =   ஒரு விதையை மண்ணில் போட்டவுடன் மனம் சித்தம் என்று சொல்லக்கூடிய இரண்டு நிலைகளாக  பிளக்கிறது, மூன்றாவதாக ஒரு இலை விடும்போதுதான் அது இந்த இனத்தைச் சேர்ந்தது என தெரிய வருகிறது, இதே புத்தி என்று சொல்லப்படுகிறது, இதைத்தான் நாம் சிறுவர்களை பார்த்து முளைத்து மூன்று இலை விடவில்லை அதற்குள் இவ்வளவு பேசுகிறானே என்று சொல்கிறோம், அதாவது புத்தி வளர்ச்சி அடைவதற்குள் என்று பொருள்,  அந்த மூன்றாவது இலை என்பது  புத்தியை குறிக்கும், நான்காம் நிலை அகங்காரம் ஆகும்,


சிஷ்யன் = குருவே அகங்காரம் என்பது கர்வமும், திமுறும் தானே


குரு  =  இல்லை மைந்தா, குழந்தை பசித்தால் அழவும், பால் கொடுத்தால் குடிக்கவும் தயாராக இருக்கிறது இப்போது மனம் சித்தம் இரண்டு மட்டும் உள்ளது, இந்த பாலை யார் தருகிறார்கள்? அவர்களுக்கும் நமக்கும் என்ன உறவு? அருகில் இருப்பவர்கள் யார்? என்று எந்த விவரமும் அறியாது, காரணம்  புத்தி இன்னும் வரவில்லை, பின் சிறிது காலத்தில் இவளிடம் இருந்து தான் பால் வருகிறது என்றும், இவள் நமக்கு உறவு என்றும் அறியும் பொருட்டே புத்தி வளர்ச்சி அடைகிறது,  இவ்வாறு ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து அறிந்து தனது புத்தியை வளர்த்துக் கொள்கிறது. இந்நிலையில் தன்னை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திப் பார்க்கும் எண்ணம் அதற்கு இல்லை, எப்போது அந்த குழந்தை தனக்கான உணவை தானே உண்ணுகிறதோ அப்போது நான் என்று செல்லக்கூடிய அகங்காரம்  வளருகிறது, தன்னை மற்றவரிடமிருந்து வேறுபடுத்தி அறியும் தன்மைக்கே அகங்காரம் என்று பெயர்,


அகங்காரமாய் இருக்கக்கூடிய பிரம்மா இந்த நான்கு முகங்களை வைத்துக் கொண்டு உலகத்தில் சிருஷ்டி செய்கிறார் என்று சொல்லப்பட காரணம்,


அகங்காரம் வரும் வரைக்கும் குழந்தையாக இருக்கும் பின் அக்குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு தன்னை தாயாகவும் அந்த பொம்மையை தமக்கு பிள்ளையாக பாவித்து தம்மை எவ்விதம் செய்தார்களோ அவ்விதமே அந்த பொம்மையிடம் செய்து சிருஷ்டிக்க தொடங்கும்,


ஆக சிருஷ்டிக்க  செய்யக்கூடிய நிலை அகங்காரத்திற்கே ஆகும், அந்த அகங்காரமே பிரம்மா எனப்பட்டது, அகங்காரமாய் இருக்கக்கூடிய பிரம்மாவின் உற்பத்தியானது மனமாய் இருக்கக்கூடிய மகாவிஷ்ணுவிடம் இருந்துதான், அந்த மனமாய் இருக்கக்கூடிய மகாவிஷ்ணு ஜீவனாகிய சிவத்தில் ஒடுங்க கூடியவர் என்பதை தெரிந்து கொள்,  மைந்தா


சிஷ்யன் = தெளிவடைந்தேன் குருவே, நமது ஜீவனே சிவன் என்றும்,  மனமே மகாவிஷ்ணு என்றும்,  நம்மை வேறுபடுத்திப் பார்க்க கூடிய அகங்காரம் பிரம்மா என்றும் தங்கள் அருளால் தெரிந்துகொண்டேன் குருவே


                 அப்துல் கரீம் "ponnu" 🥢

மேலும்

கருத்துகள்

மேலே