Amuthasanthi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Amuthasanthi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Oct-2020
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  1

என் படைப்புகள்
Amuthasanthi செய்திகள்
Amuthasanthi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2020 10:07 pm

கேலி, ஏளனம், அவதூறு என
எதை கையாளப் போகிறீர்கள்?
சாட்டைகளை தேர்ந்தெடுங்கள்
என் சாதனையின் வேகம் கூட்ட
சுற்றுவதை நான் தீர்மானிக்கிறேன்

சொல்லில் வெளிப்படும் கத்திகள்
தன் கூர்மையை பரிசோதிக்கட்டும்
மோதி உடைந்து விழுந்த பின்
தன் வலிமையை பறை சாற்றட்டும்

நீருக்குள் அழுத்தி புதைத்த பந்து
உடன் நீந்தி வெளிவருவது போல்
அழுத்தத்தின் துணை கொண்டு
வேகமாய் வெளி வருவேன்- ஆக
சாட்டைகளை தயார்படுத்துங்கள்

வீசும் கணைகளை கைதட்டலாக
மாற்றும் சக்தி என்னிடம் உண்டு
சாட்டைகள் கிழிந்து சாவதை
நான் தரிசிக்க வேண்டும்- ஆக
சாட்டைகளை காட்சிப்படுத்துங்கள்
- அ.அமுதசாந்தி

மேலும்

கருத்துகள்

மேலே