பிந்துஜா ராஜா - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிந்துஜா ராஜா |
இடம் | : முத்து நகர் |
பிறந்த தேதி | : 31-May-1996 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2021 |
பார்த்தவர்கள் | : 50 |
புள்ளி | : 12 |
உறவென்று
நம்பினேன்
உடலோடு
விளையாடினான்...
நயவஞ்சகன்...
அண்ணாவென
நெருங்கினேன்
ஆசைக்கு இணங்கு
என அணைக்கிறான்...
கயவன்...
காதலென
சென்றேன்
காமமே வென்றது
அங்கும்...
காமுகன்...
பள்ளி பாடம்
பயில சென்றேன்
பள்ளியறை
பாடம் நடத்துகிறான்...
மனிதம் மரித்த மிருகம்...
காகிதமாக கசக்கி
எறிந்த பின்னும்
தடுமாறி எழுந்தவளை
குற்றம் சொல்லும்
சமூகம் இருக்கும் வரை...
சட்டங்கள்
இருந்தென்ன
பயன்...
உடல் விட்டு
உயிர் நின்று
புதையுண்ட
பின்னேனும்
விட்டு வைப்பரோ
பிணம் உண்ணும்
கழுகுகள்...
யாரை குற்றம்
சொல்வது?..
காமமே வாழ்வென
எண்ணம் கொண்ட
வஞ்சகர்களையா?
விலைகொடுத்து
தாய் மாமன் சீர்செய்ய
தாயவள் அணிந்து
அழகு பார்க்க...
வண்ண வளையல்களின்
உரசல் சத்தம்.....
உலகம் காணா உயிரின்
தாலாட்டு சங்கீதமாக எழ
துள்ளி விளையாடுகிறது
பூமியில் பாதம்
பதிக்கும் முன்னே.....
அந்தி மாலை சந்திப்பில்
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை தேடி
கரம் நீட்டி உன் கரம் பிடித்து
தொடர்கிறேன் என்
வாழ்க்கை பயணத்தை
உன் குறுநகையில் வீழ்ந்தபோதும்
குன்றாத காதலால் மலர்கிறேன்
குறைவாகவே நீ பேசினாலும்
குறையாத நேசத்தை தருகிறாய்
நீயில்லா தனிமையில்
உன் நினைவுகளைளே
சுற்றி வருகிறது உன்னில்
சரணடைந்த என் இதயம் 💓
அந்தி மாலை சந்திப்பில்
உன்னிடம் தொலைத்த
என் இதயத்தை தேடி
கரம் நீட்டி உன் கரம் பிடித்து
தொடர்கிறேன் என்
வாழ்க்கை பயணத்தை
உன் குறுநகையில் வீழ்ந்தபோதும்
குன்றாத காதலால் மலர்கிறேன்
குறைவாகவே நீ பேசினாலும்
குறையாத நேசத்தை தருகிறாய்
நீயில்லா தனிமையில்
உன் நினைவுகளைளே
சுற்றி வருகிறது உன்னில்
சரணடைந்த என் இதயம் 💓
நினைக்கவே கூடாது என
நினைக்கும் போதெல்லாம்
நினைவில் நிழலாடுகிறான்
மறக்க வேண்டும் என
நினைப்பதால் மறையாமல்
என்னுள்ளே வாழ்கிறான்
இமைகள் மூடிய பின்னும்
இம்சைகள் செய்கிறான்
இறக்கமின்றி இன்னும்
யானும் ஓர் பிறவி இப்புவியில்
**********************************
கயவர்கள் நசுக்கும்
பிஞ்சு மலர்களை
காக்க இயலா மனிதர்களில்
யானும் ஓர் பிறவியே
காதல் விடுத்து
காமம் மட்டுமே
காதலாய் கொண்ட
கயவர்களை கண்டும்
காணாது செல்லும்
யானும் ஓர் பிறவியே
மூடர் கூட்டம் நாட்டை ஆள
எதிர்த்து கேள்வி கேட்க
தைரியமில்லா கோழையான
யானும் ஓர் பிறவியே
தவறுகளை தட்டி கேட்க
இயலா. அற்ப பதர்களில்
யானும் ஓர் பிறவியே
போராடியும் கிடைக்கா
தேவைகளை எண்ணி
வருந்தியதோடு நின்று
நாளும் மீண்டும் அதே
வாழ்வை தொடரும்
யானும் ஓர் பிறவியே