செல்லம் ரகு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  செல்லம் ரகு
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Feb-2015
பார்த்தவர்கள்:  26
புள்ளி:  11

என்னைப் பற்றி...

கவிதை என் ஜீவிதம்..... தொழில் என் ஜீவனம். !

என் படைப்புகள்
செல்லம் ரகு செய்திகள்
செல்லம் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Mar-2018 8:38 pm

நான் எதிலும்
தோற்பதே இல்லை !
ஒன்று வெற்றி கொள்கிறேன்
இல்லை கற்றுக்
கொள்கிறேன்.

நான் எதற்கும்
சினம் கொள்வதில்லை !
ஒன்று போர் புரிகிறேன்
அன்றி பொருமையில்
சக்தி கொள்கிறேன் !

நான் எதற்கும்
பேராசை கொள்வதில்லை !
ஒன்று எனை
வந்தடைய முயல்கிறேன்
அன்றி வந்தடையும் வரை
காத்திருக்கிறேன் !

இப்படித்தான்...
எனக்குச் சாதனைகளும்
சாசுவதம் ஆகின்றன.
ஒன்று சிகரங்களை
தொட்டு நிற்கிறேன் !
அன்றித் தொடும் முயற்சியில்
தொடர்ந்து நிற்கிறேன் !

ஐ விரல்கள் கூடும் போது
வேங்கையாய்
சிலிர்த்து நிற்கிறேன்
விரலனைத்தும் விரியுமெனில்
அசைவுகளில் நட்புக்
கொடிபிடிக்கிறேன் !

நம் கரங்களுக்

மேலும்

வாழ்க்கை ஓர் அழகான பயணம் அதற்கான பாதையை தெரிவு செய்வதில் தான் ஆயுள்நாட்கள் போராட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Mar-2018 5:26 pm
செல்லம் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 5:26 pm

வெற்றியோ -
தோல்வியோ -
இளமையின் தவமாவது
காதல்...!

வெறுமையாய்ச் சந்தித்தோம்
நீ - என்னுள் நிறம்பினாய் ...!
நான் உன்னுள் நிறம்பினேன்...!
நம்மிருவர் இதயம் முழுதும்
ததும்பி வழிந்தது காதல்..!

இமைகளை பறித்துக்கொண்டு
உறக்கம் தருகிறாய் ...உடன்
கனவுகளில் நிதம் ஒரு
கவிதை சொல்கிறாய் .....!

மனதில் காதல் சிறகுகளை
ஓட்டவைக்கிறாய்... சிறகுகள்
இரவலா .. ? - இல்லை
பறக்க உன் பரிசுகளா...?

விழி திறந்திருக்கும்
பொழுதுகளை விட
விழிக்காதிருக்கும்
பொழுதுகளில் தான்
முழுமையாக
காண முடிகிறது உன்னை !

அருகருகே அமர்ந்து
கௌரவப் போர்வைக்குள்
காதலை மறைத்து
ஏதேதோ பேசி - நேரத்தை

மேலும்

செல்லம் ரகு - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Mar-2015 12:29 am

பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.

மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.

படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.

காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.

சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.

மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?

போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.

நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரிய

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Jun-2015 6:07 pm
அருமை 30-Apr-2015 1:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 29-Apr-2015 2:00 pm
மிக மிக அருமையான கவிதை 29-Apr-2015 1:57 pm
செல்லம் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Apr-2015 4:10 pm

உன் இதழில் பதித்த ஈரத்தை
துடைத்து விடலாம்.
கரம் பிடித்த கரையைக் கூடக்
கழுவி விடலாம்.

மனம் நிறைந்த மகிழ்வையும்
பின் வரும் காலங்களில் -
தினம் வழியும் விழிநீர் வழி
மறந்து விடலாம்.

செவி குளிரப் பேசியதைக் கூட
இனி நமக்கு
பொருத்தமில்லையெனப்
புதைத்து விடலாம்.

விழிகளில் நிறைந்த உன்
உருவையும் -
உணர்வில் கலந்த உயிரையும்
உயிரில் மிதக்கும் சுவாசத்தையும்

மனமுருகிச் செய்த வாக்குறுதிகளையும்
சேதாரமின்றி பிரித்துச்
சலவை செய்வது
சாத்தியபடுமோ சகியே ....

--- " செல்லம்" ரகு ....
திருப்பூர்.

மேலும்

நிச்சயமாய் சாத்தியபடாது தான் தோழரே, ஆனால் அந்த நினைவுகளை துன்பமாக இல்லாமல் இனிமையானதாய் மாற்ற முடியும்... 06-Apr-2015 4:17 pm
செல்லம் ரகு - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Mar-2015 10:53 am

ஒரே ஒரு நினைவுத் துளிபட்டு
கனவுகளில் முழுதாய்
நனைந்திட இயலுமெனில் ....

ஒரே ஒரு செயற்புயலில் துரும்பாய்
மனமிளகி விண்முட்டிப் பறக்க
முடியுமெனில் .....

ஓரிரு மணித்துளிகள் என் வாழ்வை
ஓராயிரம் கனவுகளுக்குள்
அமிழ்த்துமெனில் .....

முகம் மலர்ந்து - அகம் திறந்து
ஜெகம் துறந்து - உயிர் மறந்து
நான் - நீயாகுமந்த
ஒரே ஒரு கணத்தில்
ஒரு யுகமாற்றம் நிகழுமெனில் .....

அதற்கு முழு முதற்காரணம்
உன் முதல் முத்தம் தவிர
அன்பே வேறேது...

------ " செல்லம் " ரகு

மேலும்

நல்லகவிதை நண்பா!!! 23-Mar-2015 1:31 pm
நன்று 23-Mar-2015 11:40 am
செல்லம் ரகு - செல்லம் ரகு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Mar-2015 4:13 pm

ஊர் தோறும்
தெருக்கள் தோறும்
வீதிகள் தோறும்
இன்னும் -
சாதி, குலம், மதம்
இனமென சகட்டுமேனிக்கு
சாமிகளின் இல்லங்கள்.

காற்று வெளியெங்கும்
நிறைந்து வழிகின்றன.
சுயநலத்தின் சுருங்கிய
வேண்டுதல்கள்.

ஆசைகள் நிறைவேறாத
அலுப்பிலும் - சலுப்பிலும்
வலுக்கின்றன - அவநம்பிக்கையின்
அறைகூவல்கள்.

உரிமைப் பிரச்சனையில்
உயர்கின்றன - இறையின்பால்
தராத வரங்களுக்கு
தரமில்லா நிந்தனைகள்.

மழைவேண்டி - மகா யாகம்
இலை தழைக்க -
இன்னொரு யாகம் - என்ன
விலை கொடுத்தேனும் நீர்
விளைய நிதமொரு
யாகங்களென உரத்த குரலில்
யாசிப்பின் உச்சங்கள்.

துளி விழும் - தடயம்
துளியும் இல்லை.
பழி கூடிடும

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே