தனபால் ச மா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தனபால் ச மா
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி :  03-Nov-1981
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Feb-2015
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  4

என் படைப்புகள்
தனபால் ச மா செய்திகள்
தனபால் ச மா - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Feb-2016 1:30 pm

மிகக் கவனமாய்
கூர்தீட்டப்பட்ட ஆயுதமொன்று
தயாராய் காத்திருக்கிறது
யார்மீதோ எப்போதோ
பாய்வதற்கு ...

நிஜத்தைவிட வெகு அழகாய்ப்
புனையப்பட்ட பொய்யொன்று
புறப்படுகிறது ஏதோ ஒரு
குடும்பத்தைச் சாய்ப்பதற்கு ...

ஜாதிகளால் நெய்யப்பட்ட
அழுக்கு படிந்த ஆடையொன்று
வாங்கப்படுகிறது காதலர்களின் மீது போர்த்துவதற்கு ...

நன்கொடை வாங்கி
அடுக்கடுக்காய் கட்டப்படுகிறது
கல்லூரிகள் அப்பாவிகளின்
உயிர்களை பலிவாங்குவதற்கு...

கரை வேட்டிகளால்
சிரத்தையோடு செதுக்கப்படுகிறது
வாக்குறுதிகள்
மக்களை ஏமாற்றுவதற்கு ...!!!
--------------------------------

மேலும்

அனைத்தும் நாகரீக உலகில் நேரும் கொடுமைகளின் முகங்கள் 18-Feb-2016 2:01 pm
தனபால் ச மா - எண்ணம் (public)
23-Apr-2015 10:47 am

கைத்தட்டல் ஓசையில்
கவனம் ஈர்க்கிறார்கள் ...
ஒப்பனைகள் நிறைந்த முகத்தோடும்
ஒப்பனைகளற்ற முகத்தோடும்
முன்னேறுகிறார்கள்
ஒவ்வொரு பெட்டியாய் ...
ஆங்கிலமும் தமிழும் கலந்த
மொழியில் ராகமாய்
"பேசுகிறார்கள் ..."
முகம்சுளித்து முறைக்கும் கயவர்களுக்கு
வீசிவிட்டுச் செல்கிறார்கள் அழுக்கு படிந்த
கெட்ட வார்த்தைகளை ...
கை நீட்டியபடி யாசகம் கேட்கிறோம் என்று எண்ணாமல்
இந்த சமூகம் தங்கள் நிலைக்கு தர வேண்டிய தட்சணையாய் "வசூலிக்கிறார்கள் ..."
ஆசைகளையும் வலிகளையும்
சரிவிகிதத்தில் சம்பாதித்து
வ (...)

மேலும்

தனபால் ச மா - எண்ணம் (public)
16-Mar-2015 5:04 pm

நாணயம்...!!!
-----------------------
பேருந்தில் நிறைந்த
கால்களில் உதைபட்டு
அங்குமிங்கும் உருண்டோடியது
யாரோ தவறவிட்ட நாணயமொன்று...

காதுகளில் இசையை
இறக்குமதி செய்து கொண்டிருந்த
இளம்பெண் அதை கவனித்தும்
கண்டுகொள்ளாமல் இருந்தாள்....

உடல்பெருத்த ஒரு பெரியவருக்கு
அதை குனிந்து எடுக்கும்
குறுகுறுப்பு இருந்தாலும்
கூட்ட நெரிசல் அதை அனுமதிக்கவில்லை...

மீதி சில்லரை வேண்டி
நடத்துனரிடம் வரம் கேட்ட
ஒரு பாட்டிக்கு அந்த நாணயம்
கண்ணில் படவில்லை...

காலம்.. அதை யார் எடுப்பார்கள் என்று
(...)

மேலும்

தனபால் ச மா - எண்ணம் (public)
16-Mar-2015 5:01 pm

இன்னும் மிச்சமிருக்கிறது ....!!!
------------------------------------
நினைவுகளின் கிடங்குகளில் மீதமிருக்கும்
இடங்கள் காத்துக்கொண்டிருக்கின்றன
அதில் இட்டு நிரப்பப்போகும் மிச்ச நாட்கள்
யாருடையதென்று ...!

என் நம்பிக்கை கரம்
நீட்டியபடியே இருக்கிறது ...அதில்
எந்த அன்பின் விரல் வந்து கோர்க்குமென்று ...!

தூக்கம் போதாமல் சீக்கிரமாய்
விழிக்கும் இரவுகளில் தான்
தொடர்பு அறுந்துவிடாமல் நீள்கிறது
நிறைய கனவுகள் .....!

சிக்கலான முடிச்சுகளைப் போட்டுக்கொடுத்துவிட்டு
சீக்கிரம் அவிழ்த்துக (...)

மேலும்

தனபால் ச மா - தனபால் ச மா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2015 5:30 pm

வலப்புறம் நண்பர்களும்
இடப்புறம் தோழிகளுமாய் நிறைந்திருக்க
கை கோர்த்தபடி
கடற்கரைமணலில் கால்நனைத்து....

ஒரு பெரிய உணவகத்தில்
மதிய உணவை வித விதமாய்
உண்டு முடித்து....

கூட்டமாய் நுழைந்த திரையரங்கில்
விசிலடித்தபடி படம் பார்த்து....

கோடிகளை விழுங்கி நிற்கும்
வணிக மையங்களில் திரிந்து
போட்டி போட்டு புகைப்படங்கள் எடுத்து...

அழகான நினைவுகளையும்
அளவுக்கதிகமான சந்தோசங்களையும்
சுமந்து வீடு திரும்ப வேண்டுமென
நினைத்தாலும் ....

தாமதமாக எழுந்து
காலை உணவாய் தேநீர் மட்டும் குடித்து
அழுக்குத் துணிகளை துவைத்து
அறையை சுத்தம் செய்து
மதியத்திற்கு கிடைப்பதை தின்று
குட்டி தூக்கத்தில் தொலை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

இவரை பின்தொடர்பவர்கள் (3)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே