அப்துல் Rahman - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : அப்துல் Rahman |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 25-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 36 |
புள்ளி | : 4 |
விழியென்ற கரங்களிலே இதயத்தை வருடுகிறாள்
அழியாத நினைவுகளாய் எனக்குள்ளே நெருடுகிறாள்
கழிக்கின்ற பொழுதுகளோ கன்னியவள் வடிவாகி
எழிலான கவிதைகளை எனக்குள்ளே தந்துசெல்லும்
இமை மூடித்துயிலத்தான் மனம் நினைக்கும்
சுமை விழியின் நினைவினிலே எல்லாமே மறந்துவிடும்
இமை மூடா அற்புதங்கள் அவளிடமே பிறந்துவரும்
சுமை கூட அவள் நினைவில் சுமையான சுகமாகும்
கனவினிலே பொன்மலராய் பவனி வரும் நேரத்திலே
மனதினிலே எண்ணங்கள் மலராகி மணம் பரப்பும்.
நனவினிலே நகைப்புடனே நடந்துவரும் வேளையிலே
புனலெழுந்த பூவொன்று புதுப்பெண்ணாய் நடந்துவரும்.
தனிமையிலே பிரிந்திருந்தால் தவிப்புகளே பரிசாகும்
தனிமயிலாள் வந்துவிட்டால் தவ
சாலையில் நடந்து சென்றேன்
நடைபாதை இல்லை என்பதால் ....
எதிரே வந்தார் அன்பர்ஒருவர்
எங்கோ பார்த்ததாக நினைவு ....
சிரித்து வைத்தேன் சிறிதாய்
நலமா என்றேன் நாசுக்காய் ....
பதிலும் கூறிட்டு வினவினார்
பார்த்து நாளாயிற்றே என்றார் .....
ஆமாம் என்றேன் குழப்பமுடன்
நினைவே இல்லை யாரென்று ...
கடந்து சென்றேன் சிந்தனையுடன்
நாசா விஞ்ஞானியின் நிலைபோல ...
திரும்பிப் பார்த்தேன் அவரையும்
அதையே செய்தார் அவருமங்கே ...
புரிந்து கொண்டேன் தெளிவாக
அவருக்கும் குழப்பம் யாரென்று ...
வீட்டில் நுழைந்தேன் வியப்புடன்
நோக்கினேன் எதிர்வீட்டுக் கதவை ...
குசலம் விசாரித்தவர் குறுகிநாணி
நின்று
எத்தனையோ வேதனைகள்
எனக்குள் இருக்க- என்னை
உருட்டிப்போட்டு உயிர்த்தெழவைக்கும்
உன் நினைவுகள்.
ஒரு ஓரமாய் நின்றிருந்த என் இதயம்
உன்னை பார்த்த நாள் முதலாய்
ஏனோ பாரமாகிப்போனது.
காயம் இல்லாமலே வலி கொடுக்கிறாய்.
நினைவுகளாலேயே சுகம் கொடுக்கிறாய்.
என்ன ஆனது எனக்கு?
என்னுயிர் ஏன் வற்றிப்போனது?
எங்கெனும் எங்கெனும் உன் உருவம்..
உன் அழகு...
பணியிடையில் கணினிக்குள் நீ..
படுக்கையிலும் பக்கத்தில் நீ..
உணவு இடைவேளையிலும்
ஒரு வாய் ஊட்டச்சொல்லி
எதிர்ப்புறத்தில் நீ...
உறக்கத்தின் கனவுகளாய் நீ...
உறங்காத விழிகளின் இரவுகளாய் நீ...
என்ன செய்தாயடி கண்னே..
என்னை என்ன செய்தாயடி.
ஏய் வானமே...
இத்தனை
ஈர எழுத்தானிகளைக் கொண்டு
என்ன எழுதுகிறாய்
பூமி காகிதத்தில்?
"சேமித்துவை"
என்ற தலைப்பில்
சிறு கதையோ!
“அனுமதியின்றி உள்ளே வராதே”
அறிவிப்பு செய்தும்
அடங்காமல் நுழைகிறாய்.
தடுக்கமுடியவில்லை.
“சுவாசம்”
விரகதாபம் கொண்ட
மேகக்கூட்ட மீசைகள்
தேடி அலைகின்றன-
நிலாப்பெண்னை.
"அமாவாசை"