எழில் வேந்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  எழில் வேந்தன்
இடம்
பிறந்த தேதி :  13-May-1958
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  20-Aug-2021
பார்த்தவர்கள்:  4
புள்ளி:  0

என்னைப் பற்றி...

டாக்டர் எழில் வேந்தன் நான்கு தசாப்தங்களாக தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதி பெரும்புகழ் குவித்துவரும் இந்தியாவில் வாழ்ந்துவரும் கவிஞர் ஆவார். ஏழு கவிதைத் தொகுப்புகளின் ஆசிரியரான இவரின் கவிதைகள், பன்னாட்டுக் கவிதைத் தொகுப்புகள் பலவற்றில் இடம்பெற்றுவகின்றன. இவர் தமிழில் எழுதிய ‘ஆலமரம்’ கவிதை 1995ஆம் ஆண்டின் இந்திய குடியரசு தின தேசிய பன்மொழிக் கவியரங்கத்திற்கு தமிழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சிறந்த கவிதை ஆகும். இந்தக் கவிதை கிரேக்கம், எபிரேயம், சீனம், அரபு, ரஷ்யம் மற்றும் பிரஞ்சு உள்ளிட்ட முப்பத்தெட்டு வையக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
பல சர்வதேச கவிதை மாநாடுகளில் இந்தியாவின் பிரதிநிதியாக நேரிலும் இணையதளத்தின் காணொளிக் காட்சி வாயிலாகவும் பங்கேற்று வருக்கிறார். 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2 முதல் 6 வரை இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற உலக கலை மற்றும் கலாச்சார அகாடமியின் 39வது உலகக் கவிஞர்கள் மாநாட்டிலும் மற்றும் 2019ஆம் ஆண்டு மார்ச் 8 முதல் 10 வரை புதுதில்லியில் நடைபெற்ற தெற்கு ஆசிய நாடுகள் எழுத்தாளர் திருவிழாவிலும் பங்கேற்றிட அழைக்கப்பட்டிருக்கிறார்.

என் படைப்புகள்
கருத்துகள்

மேலே