Ihsana Imthiyas - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Ihsana Imthiyas
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  26-Sep-2021
பார்த்தவர்கள்:  16
புள்ளி:  7

என் படைப்புகள்
Ihsana Imthiyas செய்திகள்
Ihsana Imthiyas - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Oct-2021 8:26 pm

ஏன் என் கண்கள் கலங்குகின்றன?
அந்த அப்பாவி ஜீவன்களை நினைக்கும் போது
என் வரிகளிற்கு முதற்காரணமான உனக்கு
கவியல்ல காவியம் படைக்க வேண்டும்

நினைவலைகள் நீட்சிப் பெறுகின்றன
என் பொன்னான ஆசான்களை நோக்கி
தனக்கென்று எதுவும் இல்லை
மாடி வீடு இல்லை
மனமார உண்டது இல்லை
கை பிடித்த உறவு எங்கோ!
கை சேர்ந்த குழந்தை எங்கோ!

பாடாய்படுகிறது அவ்வுள்ளம்
பாடசாலை வீடு என்று
போராடி பெற வேண்டுமாயிற்று
தனக்கான சில உரிமைகளைக் கூட
அரச சலுகைகள் ஆசிரியரிற்கில்லை
நன்கொடை பணம் நினைப்பதற்கும் இல்லை

தன்னை விட ஒருவன் உயர வேண்டுமென்று
தெரியாததையும் தெரிந்து உரமாக ஊட்டி
வானளவு வரை வாய் மூடாமல்
இரசிக்க முடிந்த

மேலும்

Ihsana Imthiyas - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Oct-2021 11:04 pm

கவிதை எழுதுகிறேன்..
பேனா மையால் குளிக்க
வேண்டிய காகிதம்
கண்ணீர் துளிகளால் நனைந்து விட்டது..
மனிதா!!
மடமையில் முடங்கிய உன்னை நினைத்து கவி வடிக்கிறேன்
கவி முற்றுப் பெறுமா?
காகிதம் கரைந்து விடுமா?

நிரந்தரமே இல்லாத உலகில்
கோபமும் பகையும் மட்டும்
எப்படி நிரந்தரமானது!!

இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட உலகமே!
ஒருநாள் அழியும் போது..
மானிடர்களால் உருவாக்கப்பட்ட
பகை மட்டும் அழிந்து போகாதா?
மனிதா ஏன் இந்தக் கோரப்பிடி?

கண் முன்னே சொந்த உறவுகள்
உயிர் விட்டுப் போவதை கண்டும்
உன் மனம் மாறவில்லையே..

இதயம் ஒரு சதை பிண்டமா?
இல்லை இரும்பால் உருக்கப்பட்டதா?

தினம் நிற்க நேரமின்றி ஓடும் நாம்,
ஒரு நிமிடம் நின்று
நம் வ

மேலும்

Ihsana Imthiyas - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2021 10:21 am

கூட்டமாய் சுற்றிய சமூகம்
கூண்டுக்கிளிகளாய் முடங்கின
ஏட்டை ஏந்திய பாலகர்கள்
இன்பத் தொலைபேசியை தூக்கினர்
வீட்டை அலங்கரித்த மங்கலங்கள்
வெறுமை கொண்டு வீழ்ந்தது

செல்வத்தின் செருக்கை முடக்க
செகத்தில் கொரோனா தலைநிமிர்ந்தது
உள்ளத்தை கருமை போர்த்த
உண்ண உணவற்ற ஏக்கம்
பொல்லாத பிணியின் சதியால்
பசியையும் ருசிக்க வைத்தது

களைப்பிற்கு கண்டோம் விளையாட்டு
கருணைககான ஏக்கம் இன்று
விளைச்சல் காணா பயிராக
விளைத்தது கொடும் கொரோனா
அலைச்சல் அற்ற பொம்மையாய்
அடங்கினோம் அறையினுள்ளே

உடலில் உயிர் நீங்க
சடலம் எங்கோ செல்ல
படபடத்த சிந்தை கொண்டே
பதறி ஓடும் சமுதாயமாய்
தடயம் பதித்தது பயம்
தனிமையில் இனி

மேலும்

Ihsana Imthiyas - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Oct-2021 6:24 am

தாய்,
என்ற சொல்லிற்கு
கவிதை எழுதுவதற்கு
அது என்ன
வெறும் ஈர் எழுத்து
சொல்லா?
ஆரம்பத்தையும் முடிவையும்
தேடுவதற்குள் ஆயிரம்
இரவுகள் கழிந்து விடும்

தாயே
உனக்கு நான்
கவிதை எழுதினால்
வியாசரையும் மிஞ்சி விடுவேன்
என் கவிதையால் மகாபாரதமும்
தோற்றுவிடும்

நீ அத்தனை அற்புதமானவள்
தாயே!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே