ஜெ தனபால் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜெ தனபால்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  17-Jan-1982
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2019
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  2

என் படைப்புகள்
ஜெ தனபால் செய்திகள்
ஜெ தனபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Nov-2019 9:56 pm

உள்ளத்துள் நிகழும் நடுக்கம் மௌன ரேகைகளாய் பரவிட,
தருணம் கடக்கையில் என் நிலை பற்றிய அச்சம்
விடையற்ற கேள்விகளாய் உடன்செல்லும்...!

பின் தொடர்வாய் நம் முன்னோர்கள் வாக்கும் கூட,
விதைப்பவனே அறுப்பவனாய் தோன்றும் எண்ண அலைகள்.

ஒளி மிகுந்த வாழ்வைஎதிர்நோக்கும் பயணம்...
குருவிடம் வேண்டுதலாய் சமர்ப்பணம்..
ஒளியேற்றும் வாழ்வை வேண்டியும் செய்யபடும் தவமாய்....!

பாதை கடினமாயினும், நேரம் குறைவாயினும்,
கடந்து செல்லவே பயிற்றுவிக்கப்பட்டேன்,
கடப்பதை காரியமாக கொண்ட நான்.

மேலும்

ஜெ தனபால் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Nov-2019 9:43 pm

தன்னிலை அறிய வைத்திடுமாம்,
தயக்கங்கள் போகச் செய்திடுமாம்,
தலைமைப் பண்பை வளர்த்திடுமாம்,
தமக்கான இலட்சியத்தை உணர்த்திடுமாம்,

நிறுவன அறிவை ஊற்றிடுமாம்,
நித்தமும் தேடலை உருவாக்கிடுமாம்,
எதிர்மறை எண்ணத்தைக் களைந்திடுமாம்,
தலைமுறை மாற்றத்தைத் தந்திடுமாம்,

தொழிலாளர் கல்வி அடித்தளமாம்,
தொழிலாளிக்கு அதுவே ஆதாரமாம்,
அஃதே நிறுவனத்திற்கு பிரதானமாம்,
இஃதே முன்னேற்றத்திற்கு மூலதாரமாம்.

தொழிலாளர் கல்வி அதனை கற்போம் விரும்பி,
தொழிலக பணியில் அதனை செயல்படுத்துவோம் அரும்பி.

மேலும்

கருத்துகள்

மேலே