Muniandy Raj - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Muniandy Raj
இடம்:  கிள்ளான், மலேசியா
பிறந்த தேதி :  26-Feb-1963
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2018
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  5

என்னைப் பற்றி...

நான் ஒரு பள்ளி ஆசிரியர். கவிதை எழுதுவதென்பது என் ஆர்வம்.

என் படைப்புகள்
Muniandy Raj செய்திகள்
Muniandy Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2018 8:11 am

அதிகாலை தேவதைகள் அணைக்க
வரும் தருணம்..
அலறம் ஒரு தடவை அலறி
அமைதிக்குள் அடங்கும்....
நுனிக்கால்கள் போர்வைக்குள்
மெல்ல பதுங்கும் கணங்களில்
எழ வைக்க விரும்பாமல்
என்னை உனக்குள்ளே வைத்திருக்க
முயல்கிறாய் ..

இரவின் இம்சை இனிப்புகள்
இன்னும் ஆங்காங்கே விரலோரம்
அமர்ந்திருக்கின்றன..
என்னை இழுத்துச் சேர்த்த படி
இன்னொரு கவிதையைக் கேட்கிறாய்..
கவிதைகள் வார்த்தைகளால் மட்டுமே
கூறமுடியுமென்ற வட்டத்தை எனக்கு
உடைத்துக் காட்டியவள் நீ..

என் கனவுச் சுவர்களில்
உன்னைவிட இவ்வளவு அழகாக யாரும்
வண்ணமிட இயலாது..
இரவு கலந்த மெல்லிய வெளிச்சத்தில்
வண்ண பிம்பத்தில்
நீ அழகாகவே சிரித்துக் கொண்ட

மேலும்

Muniandy Raj - Muniandy Raj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-May-2018 7:12 pm

ஊடுருவிச் செல்ல எத்தனிக்கும்
ஊமை விதிகளிலிருந்து
தப்ப முயலும் பொழுதுகளில்
மனதின் ஆழ வடுக்களைக்
கீற முயலும் இடைவெளிகளில் ..

கடந்துபோகும் ஒவ்வொரு பார்வையிலும்
நெளியும்
எக்காளச் சிரிப்புகள்...
விரச உரசல்கள்...
விகாரப் பார்வைகள்..
அகங்கார நடை அலங்காரங்கள்
அருவருப்பை உடலெங்கும் சீண்டும்!

சீழேறிப்போன பொய்ம்மை புண்ணைக்
கீறிக் கீறி
தனக்குத் தானே நக்கி நுகரும்
நாய்க்குண மிருதங்கள்...
தப்பித் தப்பி நகரும் வேளைகளில்
நாசுக்காய் நலம் விசாரிப்பதாய்
நஞ்சுதனை நாக்கில் வைத்திருக்கும்
கபடங்கள்...

ஜாக்கிரதை நண்பர்களே..
மற்றவர் முகத்தைச் சொரியும் முன்
சோதித்துக் கொள்ளுங்கள்...

மேலும்

கருத்தில் மகிழ்ச்சி. நன்றி நண்பரே 04-May-2018 5:03 am
அருமை நல்ல வரிகள் வாழ்த்துகள் நண்பா 03-May-2018 11:29 pm
தங்கள் வாசிப்பிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றி நண்பரே 03-May-2018 7:31 pm
Arumai unkal varikal valimai vaalththukkal👍 03-May-2018 7:22 pm
Muniandy Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2018 7:12 pm

ஊடுருவிச் செல்ல எத்தனிக்கும்
ஊமை விதிகளிலிருந்து
தப்ப முயலும் பொழுதுகளில்
மனதின் ஆழ வடுக்களைக்
கீற முயலும் இடைவெளிகளில் ..

கடந்துபோகும் ஒவ்வொரு பார்வையிலும்
நெளியும்
எக்காளச் சிரிப்புகள்...
விரச உரசல்கள்...
விகாரப் பார்வைகள்..
அகங்கார நடை அலங்காரங்கள்
அருவருப்பை உடலெங்கும் சீண்டும்!

சீழேறிப்போன பொய்ம்மை புண்ணைக்
கீறிக் கீறி
தனக்குத் தானே நக்கி நுகரும்
நாய்க்குண மிருதங்கள்...
தப்பித் தப்பி நகரும் வேளைகளில்
நாசுக்காய் நலம் விசாரிப்பதாய்
நஞ்சுதனை நாக்கில் வைத்திருக்கும்
கபடங்கள்...

ஜாக்கிரதை நண்பர்களே..
மற்றவர் முகத்தைச் சொரியும் முன்
சோதித்துக் கொள்ளுங்கள்...

மேலும்

கருத்தில் மகிழ்ச்சி. நன்றி நண்பரே 04-May-2018 5:03 am
அருமை நல்ல வரிகள் வாழ்த்துகள் நண்பா 03-May-2018 11:29 pm
தங்கள் வாசிப்பிலும் கருத்திலும் மகிழ்ச்சி. நன்றி நண்பரே 03-May-2018 7:31 pm
Arumai unkal varikal valimai vaalththukkal👍 03-May-2018 7:22 pm
Muniandy Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2018 7:08 pm

என்னருமைத் தோழா..
சில வாக்குறுதிகளில்
வேரில்லாமல் இருக்கலாம்..
வேரில்லாமல் மரம் ஏது என்று
கேள்வி கேட்காதே...
நீரில்லாமலேயே செடி முளைக்கலாம்!

உனக்குக் கைநீட்டும் கைகளில்
அதன்
அழுக்கு ஒட்டாமல் பார்த்துக்கொள்..
தேவதையை விட பேயா
பேயை விட தேவதையா என்று
உன்னை நீயே கேட்டுக் கொள் ..

விமர்சனங்களில் விளம்பரங்களில்
இதயம் தொலைத்து விடாதே ..
செவியில் விழும் வார்த்தைகளைச்
சவரம் செய்து பார்..
கடல்களை ரசிப்பதோடு நிறுத்திக்கொள்
விழுந்து தொலைந்து விடாதே ..
உன் பாதங்களையும் பாதைகளையும்
நீ முடிவு செய்து கொள்..
கேள் .. கேள் .. கேள் ..
பதில்களுக்குள் காணாமல் போகாதே ..
மூளைச் சலவை
உனக்குப

மேலும்

Muniandy Raj - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Feb-2018 10:32 am

கண்ணாடி மணற்பரப்புகளில
கூழாங்கற்களுடன் மீன்களும் கொஞ்சி
விளையாடும்வரை
களங்கப்படாமலேயே இருந்தது
எங்கள் ஊர் ஆறு
உடைந்து தொங்கிய மரக்கிளைகளில்
காலூன்றி நதிக்குள் புதையும்வரை
பாய்ந்தெழுந்த போதெல்லாம
சிற்றலைகள் வீசி புன்னகைத்த்தோடு சரி
கரையோற நாணல்களோடு
விரல்கள் கோர்த்து நீர் அள்ளியதுவரை
ஆறு ஆறுதலாகவே இருந்தது
எங்களுக்கு .........
கரும்புகையும் கழிவுகளும் கொட்டும்
தொழிற்சாலைகள் முளைக்கும்வரை

மேலும்

பசுமைகளை எல்லாம் விலை பேசி விற்று விட்டது நவீனம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Feb-2018 10:00 pm
மேலும்...
கருத்துகள்

மேலே