Naan ba mano - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Naan ba mano
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  16-Jan-2018
பார்த்தவர்கள்:  46
புள்ளி:  0

என் படைப்புகள்
Naan ba mano செய்திகள்
Naan ba mano - எண்ணம் (public)
15-Apr-2018 10:54 pm

              சிறுவயதில் அனைவருக்கும் இருந்த ஒரு பழக்கம் தான் பொம்மை செய்வது  எது கண்ணில் படுகிறதோ அதை கொண்டு விளையாடுவோம் அதை உடைத்துவிட்டால் அவ்வளவு தான் நம்மை வைத்து விளையாடுவார்கள் நமது உடன்பிறப்புகள்  ...  
ஓரிகாமி என்று காகித கொக்கு
 ஓரி +காமி  = ஓரிகாமி   ஓரி என்றால் மடி என்றும் காமி என்றால் காகிதம் என்று பொருள்   இந்த சொல் தோன்றியது ஜப்பானில் இந்த கலை தோன்றியதும் ஜப்பானில் 


நான் சிறுவயதில் படித்த  ஒரு கதையில் காகிதத்தால் செய்த  கொக்கு படத்தை கண்டதும் எப்போதும் இல்லாத உட்சாகம் அன்று அளவுக்கு அதிகமாக இருந்தது.   நமது சிறு வயதில்  கடவுள் பதவியில் சிறிது காலம் வரை இருந்தோம் நமக்கான ஒரு உலகம் நமக்கான கற்பனை  உயிர்கள் என  அனைத்தையும் உருவாக்கி கொள்ளும் கடவுளாக இருந்தோம் .
         அப்படிப்பட்ட என் உலகத்தில்  ஒரு புது உயிர் நுழைந்தது தான் உட்சாகத்திற்கு காரணம்  .ஆனால் அந்த கொக்கு என் உலகத்தில் இப்போது தான்  பறக்க தொடங்கியது சரியாக 8வருடம் அதற்குக்காக காத்திருக்க வேண்டிதாகவிட்டது. இருந்தாலும் எனது உலகத்தில் ஓயாமல் பறந்து கொண்டிருக்கிறது இந்நொடியிலும். 
         ‎  
 ‎         ஒரு சாதாரண காகித பொம்மை  என்ன செய்துவிடும்  என்ற மனநிலை இருப்பவர்களுக்கு தெரியாது   அது செய்யும் அற்புதங்களை ....
 ‎ ஒரு குழந்தை  செய்யும் முதல் புரட்சியாக அது உள்ளது தனது புனித விரல்களால் தனது உள்ளத்தில் தோன்றும் உருவத்தை விருப்ப படி உருவாக்குவதே  புரட்சியின் விதையாகும் . ஆனால் இன்று அப்படிப்பட்ட புரட்சி  குறைந்து கொண்டே வருகிறது சில இடத்தை தவிர . வீட்டுக்கு வெளியே இருக்கும் மணல்களில் தனது  பிஞ்சு விரல்களை கொண்டு களிமண்ணில் விளையாடும் சுகந்திரம் எவ்வளவு வீட்டில் தரப்படுகிறது  . பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக இருக்கவும் வெளியில் இருந்து எந்த வியாதியும் பரவாமல் இருக்கவும் வீட்டில் வைத்து வளர்க்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு தெரியாது அது குழந்தையின் இயல்பை கேடுக்கிறது என .. வீட்டில் தான்  அந்த நிலைமை என்றால் பள்ளியிலும் அதே கதிதான்  .. மைதானம் என்பது பேருந்துகள் நிருத்தும் இடமாக தான் மாற்றபட்டுள்ளது விளையாடும் நேரம் என்பது ஆசிரியர்களுக்கு மேலும் பாடம் நடத்தும் நேரமாக மாறியுள்ளது . ஒவ்வொரு குழந்தையும் தன் எதற்கு பள்ளிக்கு செல்கிறோம் என தெரியாமலேயே போய்விட்டது தான் கவலைக்குரிய ஒன்று ....
 ‎அவர்களுக்கு இந்த மாதிரியான கலைகளை கட்டாயம் கற்று தரவேண்டும் ... அது தான் அவர்களுக்கு  இயல்பாக இருக்க உதவும் என நம்புகிறேன்  @ஒரு காகிதம் ஒட்டு மொத்த உலகத்தையும் மாற்ற வலிமை கொண்டது என உணர்கிறேன் ... 
 ‎
 ‎இத்தனை எண்ணங்களையும் எனது மனதில் தோன்ற வைத்தது இந்த புத்தகம் தான்  ரொம்பவும் விளையாட்டு தனமிக்க குழந்தையையும் கற்பனை திறனை கொண்டுவருவதற்கு இந்த புத்தம் கண்டிப்பாக உதவும் ஒவ்வொரு பயணத்தின் போதும் இதில் இருக்கும் பொம்மைகளை செய்து அதில் வரும் பயணிகளுக்கும் குழந்தைகளுக்கும் கொக்குகளை கொடுக்க கற்றுதந்தது இந்த புத்தகம் ..... 
 ‎# கொக்குகளுக்காகவே வானம் 

மேலும்

கருத்துகள்

மேலே