நவீன் இளையா - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  நவீன் இளையா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2015
பார்த்தவர்கள்:  74
புள்ளி:  26

என் படைப்புகள்
நவீன் இளையா செய்திகள்
நவீன் இளையா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2019 11:29 pm

கடவுள் என்பது எல்லாவற்றையும் கடந்து நிற்பதும் எல்லாவற்றுக்குள்ளும் நிறைந்து நிற்பதும் ஆகும்.

அப்படியெனில் கடவுள் என்பது "வெளி".

வெளி தான் எல்லாவற்றையும் கடந்தும் எல்லாவற்றுக்குள்ளும் நிறைந்தும் இருப்பது.

அப்படியெனில் ஆகாயவெளியில் தோன்றிய அனைத்தும் கடவுள். ஆகாயமும் கடவுள்.

பூமி ஆகாயவெளியில் தோன்றியதால் பூமியும் பூமியில் தோன்றிய எல்லாமும் கடவுள்.

அதாவது எதுவும் எங்கும் மிச்சமில்லாமல் அனைத்தும் கடவுளே.

அனைத்தும் கடவுளானபிறகு எதை விடுத்து எதனை வணங்குவது ?

வணங்கினாலும் வணங்காவிட்டாலும் என்ன பயன் ?

எனவே இயல்பாய் இயற்கையாய் இருப்பதே கடவுளாய் இருப்பது.

கடவுளாய் இருப்பது கடி

மேலும்

நவீன் இளையா - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2019 7:24 pm

எது ஆத்திகம் ?
எது நாத்திகம் ?
என்று பல பேருக்குப் புரியவில்லை.

நெற்றியில் குங்குமம் வைத்தால் ஆத்திகவாதி,
வைக்காவிட்டால் நாத்திகவாதி என்று அப்பாவியாகப் பலரும் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது குங்குமத்தில்தான் கடவுள் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

குங்குமம்,விபூதி
வச்சா என்ன ? வைக்காட்டி என்ன ?

ஆன்மிகம் என்பது குங்குமத்திலா இருக்கிறது ?

ஆன்மிகம் வேறு. இதுபோன்ற சடங்குகள் வேறு.

இதைப் புரிந்து கொள்ளாதவர்களே ஆன்மிகத்தையும் குங்குமத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

வள்ளலாரை விடவா ஒரு ஆன்மிகவாதி இருந்துவிட முடியும் ?

வள்ளலார் ஒருபோதும் விபூதியோ குங்குமமோ அணிந்ததில்லை எ

மேலும்

நவீன் இளையா - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jan-2019 2:01 pm

புதுப்பானையில்
பொங்கலோடு சேர்த்து

நதிக் காவிரியில்
நாள்தோறும்
நீர்வெள்ளம் பொங்கட்டும் !

அதைத் தடுக்கின்ற காரணிகள்
அடுப்பில் விழுந்த
துரும்பெனப்
பொசுங்கட்டும் !

சபரிமலையில்
சக மனுஷிகள்
மீதான வன்முறை
மங்கட்டும் !

மாதவிடாய்
தீட்டென்று எண்ணும்
மனநோய்
மறையட்டும் !

மனித
நேயத்தைவிட
மதமே
பெரிதெனக் கருதும்
மாய மனங்களில்
மனிதம்
மா இருள் போக்கும்
ஞாயிறாய் உதிக்கட்டும் !

வேறுவேறு சாதிகள்
தமிழர் இல்லை
வேறுபடாத நாமே
தமிழர் என்னும்
மெய்க்கரும்பின் தித்திப்பு
உங்கள் மேனியெங்கும்
பரவட்டும் !

ஆதிக்கச் சிந்தனையும்
அடிமைப் பெரும்பிழையும்
தைச்சூரியன் தணல்பட்டுப

மேலும்

நவீன் இளையா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Dec-2018 4:29 pm

ஆதிக்கம் சுமந்த
அதிகார எழுத்துகளின்
கழுத்துக்குச் சுளுக்கெடுத்த
எழுத்தாளனே !

நீ புதுவையில் தோன்றினாலும்
மதுவகை அல்ல !

மாறாக மதுக்குடுவை மத்தியில் தோன்றி மயக்கம் தெளிவித்த
மைக்குடுவை நீ !

எதை எதையோ
கருக்கொண்டு
கதை எழுதியவர்கள் மத்தியில்

மனிதநேய
விதை கொண்டு
கதை எழுதிய
கருத்தாளன் நீ !

நீண்டு கிடந்த
இலக்கியத்தில்
நீட்டிக்கொண்டிருந்த
முட்களெல்லாம்

உன் பேனா முள்ளின்
கூர்மை கண்ட வெட்கத்திலேயே

கூனிக்குறுகி
முனை மழுங்கி
முறிந்து போயின !

உன் விமர்சனக் கணைகளுக்கு
விதிவிலக்கு இல்லை

அவற்றில்
வேஷம்

மேலும்

நவீன் இளையா - நவீன் இளையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jan-2018 11:18 am

ஆண்டாண்டு காலமாய்
அரசாண்ட ஆதிக்கம்! - இங்கே
இன்னும் அது இருந்தால்
இந்தியாவைப் பாதிக்கும்! - எனப்

பாதிக்கப் பட்ட குடி -இனிப்
பாராள ஏற்று கொடி -என்று
சாதிக்குச் சவுக்கு அடி -கொடுத்துச்
சாதித்த ஆதி குடி!

ஆதி குடிக்கெல்லாம் ஆதவனாய் -ஒரு
மாதவன் முளைத்தெழுந்தான் -இருட்டில்
நாதியற்றோர் கொடுமைகண்டு -அறிவு
நெருப்பாகிக் கொதித்தெழுந்தான்

பட்டம்சூடி ஆண்ட நாட்டை -இனிச்
சட்டங்களே ஆளவேண்டும் -எனத் திட்டம்புது தீட்டிவைத்தான் -அந்தப்
பட்டம்பெற்ற சட்டமேதை!

மேதைகளால் நிறைந்த தேசம்
மேட்டிமைகள் கொண்ட தேசம்
பேதைமையால் பின்வாங்க -அந்தப்
பேரறிவாளன் முன்வ

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! 28-Jan-2018 12:06 am
ஏழைகள் இல்லாத தேசம் என்று உருவாகின்றதோ அன்று தான் தேசம் உள்நாட்டு ஆதிக்கத்தில் இருந்து முழுமையாக சுதந்திரம் அடைகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 26-Jan-2018 7:39 pm
நன்றி நண்பரே ! 26-Jan-2018 12:51 pm
அருமை நட்பே ................. 26-Jan-2018 12:41 pm
நவீன் இளையா - நவீன் இளையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2018 10:04 pm

திரைப்படத்தில்
கதாநாயகியின் முகத்தை
நீ வந்து ஏன்
மறைக்கிறாய் ?

நான் தீட்டும் ஓவியத்தில்
உன் வாசனையை ஏன்
தூவிவிடுகிறாய் ?

எனது புத்தகத்தில்
உன் பார்வைகளை
ஏன்
அச்சுக் கோர்க்கிறாய் ?

எனது நடனத்தில்
உனது புன்னகையை
ஏன்
நடக்கவிடுகிறாய் ?

என் எண்ணங்களின் மேல்
நீ வந்து எதற்குப்
பாய் விரிக்கிறாய் ?

எனது நிழல் மீது
நீ வந்து
ஏன்
வண்ணமடிக்கிறாய் ?

எனது நாசியில்
நீ எதற்கு
உலா போகிறாய் ?

நில் நில்
பதில் கொடுத்துப் போ
என் கேள்விகளில் ஏன்
ஒளிந்துகொள்கிறாய் ?

*****

மேலும்

மிக்க நன்றி நண்பரே ! 06-Jan-2018 4:44 pm
நெஞ்சில் நீ உள்ளவரை ஓவியம் கூட என்னோடு சண்டை செய்யும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jan-2018 1:22 pm
நவீன் இளையா - நவீன் இளையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Aug-2017 4:42 am

என்ன பார்க்கிறாய் ?

திடீரென்று
கண்ணுக்குள் குதித்துக்
கனவைப் பறிக்கப்
பார்க்கிறாயா ?

குதிக்கும் போது
நீயே கனவாகிவிடுவாயே
என்ன செய்வாய் ?

உயிரைப் பறிப்பாயோ ?

பறிக்கும் போது
விரல்களே
வேர்களாகிப்போனால்
எப்படிப் பறிப்பாய் ?

தோற்றுப் போவாயா ?

எங்கேயும் நான்
ஜெயிக்காத போது
எங்கே நீ
தோற்பாய் ?

விடை தேடப்
பார்க்கிறாயா ?

விடையாகிப்
பார்க்கிறாயா ?

என்ன பார்க்கிறாய் ??

*****

மேலும்

தங்கள் அன்புக்கு நன்றி ! 26-Aug-2017 12:33 am
வினாவும் விடையும் காதலே தருகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 09-Aug-2017 5:49 pm
மிக்க நன்றி நண்பரே ! 09-Aug-2017 12:09 pm
தத்துவக் கேள்விகள் சிந்தனைச் சாவிகள் . புதுமை ! வரவேற்கிறேன் . 09-Aug-2017 8:38 am
நவீன் இளையா - நவீன் இளையா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2015 12:53 am

உன்
மணிக்கழுத்தில்
முத்தமிட

மணியாகிப்
போவேன் !

உன்
சிறு விழிக்குச்
சிறகடிக்க

இமையாகிப்
போவேன் !

உன்
நாசிக்குள்
நடைபயணம்

நான் கொள்ளக்
காற்றாவேன் !

உன்
பேச்சுக்குள்
தேன் சுவைக்க

உன்
இதழ்வரியுள்
ஒளிந்திருப்பேன் !

உன்
பார்வையைப்
படம் பிடிக்க

என்
இதயத்தைத்
துடைத்து வைப்பேன் !

என்
உயிர் கலக்கும்
இடம் தேடி

நான்
உனக்குள்ளே
கரைகின்றேன் !

என்
காதலைக்
கண்டெடுக்க

நான்
காணாமல்
போகின்றேன் !

***

மேலும்

நன்றி ஐயா ! 30-Aug-2015 4:01 pm
நன்றி ஆசை அஜீத் ! 30-Aug-2015 4:00 pm
மிக்க நன்றி முகம்மது ஸர்பான் ! 30-Aug-2015 3:59 pm
அழகிய கவிதை... ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 28-Aug-2015 3:07 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (7)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
யாழ்வேந்தன்

யாழ்வேந்தன்

திருவண்ணாமலை
கங்கைமணி

கங்கைமணி

மதுரை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (7)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (7)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே