பொன்செல்வன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பொன்செல்வன்
இடம்:  திருநெல்வேலி
பிறந்த தேதி :  21-May-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  11-Dec-2019
பார்த்தவர்கள்:  15
புள்ளி:  0

என் படைப்புகள்
பொன்செல்வன் செய்திகள்
பொன்செல்வன் - எண்ணம் (public)
11-Dec-2019 8:33 am

"உணர்வு புதையல்"


இது
பெருமழை மேகம்
பிரசவிக்கும் தருணம்...
முதல் துளி முழங்கையில் விழ 
முகம் தூக்கிய சிறுவனாக 
நீங்கள்!
இந்த வலைதளம் வழியாக...
ஓடிச் சென்று 
ஒளிந்து கொள்ளுங்கள்! 
கனமழை ஒன்று 
காத்திருக்கிறது...
விரைவாய் தேர்வு முடித்த சிறுவன்
வெளியே நடப்பவற்றை 
வேடிக்கை பார்ப்பதை போல
என் வாழ்விலும் 
இது வேடிக்கை பார்க்கும் 
தருணம்... 
இல்லை இல்லை 
விதைக்கும் தருணம்...
அப்பனுக்கென 
அரசுப்பணி பெற்றுவிட்டேன்... 
அன்னைக்கென 
திருமணம் செய்ய
ஒப்புக்கொண்டேன்...
பெயருக்கென 
பொறியியல் கற்றுவிட்டேன்...
பெண்ணொருத்திக்கென 
ரகசியங்களை 
மறைத்து கொண்டேன்...
அவனுக்கென 
இவளுக்கென
அவர்களுக்கெக்கென
இவைகளுக்கென
என்று 
சல்லி வேர்களாகிப் போன 
சபதங்கள்
சற்றே தாங்கி கொள்ள,
ஆலாய் எழுந்த என்னில்
ஆணிவேராகிப் போன - என் 
ஆசைகளுக்கென 
இன்று 
எழுதத் தொடங்கி விட்டேன்...
ஆம்,
இது வெற்றுக் காகிதத்தில் 
இடப்பட்ட பிள்ளையார் சுழி...
வேறுபாடு காணாத 
என் கற்பனை துளி...
விளம்பரப் படுத்தும் 
கூத்தாடியின் கூவல்கள்...
"முதல்" 
எதிலும் 
முக்கியத்துவம் பெற்றது தான்...
பெற்றவள் பதித்த முத்தம் முதல்
பெரியவன் ஆகிவிட்டேன் என்று முறுக்கிய மீசை வரை...
சிறந்த தொடக்கத்திற்கு
சிந்தையை செதுக்கிட
கோணலாய் போகாமல்
குலம்போற்றும் என்
முதல் பதிப்பை 
எப்படி தொடங்குவது
என்று எண்ணுகையில்,
தயக்கத்துடன் 
தடக் தடக் என்று தவழ்கிறது...
அன்பாக தொடங்கவா?
இல்லை
அழுதுகொண்டே தொடரவா?
இல்லை 
பிரிந்துச் சென்றவளை 
எண்ணி புலம்பவா?
தெரியவில்லை... 
தேடுகிறேன்,
தொடர்வண்டியில் தொங்கியபடி...
தோழன் ஒருவனிடம் 
ஆலோசனை கேட்டபடி...
நடுத்தர குடும்ப ஆண்மகனின்
நவரச எழுத்துக்கள்
நன்மதிப்பை பெறாது
என்று
நரிகள் சில ஊளையிட 
தோய்ந்து போய், 
தோற்றுவிடுவோமோ என்றெண்ணம் தொற்றிக்கொள்ள,
தொலைகிறேன்
இந்த எழுத்துக்களில்...
இருப்பினும் 
தெரியவில்லை,
எப்படி தொடங்குவது என்று...
வீசியெறியப்பட்டவை சில...
விடை ஏதுமின்றி 
பத்திரப்படுத்தப் பட்டவை சில...
எரிக்கப்பட்டவை சில...
என்னுள் 
எழுதப்படாமல் இருப்பது சில... 
இருப்பினும்,
இரு கையேந்தி 
நீரருந்தும் சிறுமியின்
செங்கரம் நடுவே
சிந்திய துளியில்
சிற்றாடை நனைந்து
செவ்விதழ் துடைத்து
தீர்ந்த தாகத்திற்கு 
தீராப் புன்னகை பூக்கும் - அந்த 
திருமகளைப் போல
சிந்திய கவிதைகளின் நடுவே 
சிறந்தவற்றை பதிவிடுகிறேன்
இங்கே.... 
என் தொடக்கம்
"உணர்வு புதையல்"
உள்ளே,
உதிரம் படிந்த 
கறைகளும் இருக்கலாம்
உன்னதம் நிறைந்த 
உணர்வுகளும் இருக்கலாம்...
வந்துச் செல்லுங்கள் நண்பர்களே!
என் வருங்காலத்தை வரவேற்க....

          - பொன்செல்வன் சேர்மன் பாண்டி

மேலும்

கருத்துகள்

மேலே