Arun ray - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Arun ray
இடம்
பிறந்த தேதி :  06-Jun-1998
பாலினம்
சேர்ந்த நாள்:  11-Aug-2020
பார்த்தவர்கள்:  19
புள்ளி:  3

என் படைப்புகள்
Arun ray செய்திகள்
Arun ray - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2021 12:34 pm

வனம்புகுந்து
கற்பழிக்கும்
கட்டிடங்கள்!

நதிகளை
மலடியாக்கும்
சாயக்கழிவுகள்!

ஓயாமல்
புகைபிடித்து
காற்றை
கறைபடுத்தும்
ஆலைகள்!

சிட்டுக்குருவிகளை
சிற்றுண்டியாக்கிய
செல்கோபுரங்கள்!

ஆழிகளெல்லாம்
குப்பை தொட்டிகளாய்!

மரங்களெல்லாம்
மாடிவீடுகளாய்!

வருங்கால சந்ததிகள்
கண்விழிக்க
வேண்டுமென்றால்
இப்போதே
விழித்துக்கொள்
மனிதா!

மேலும்

Arun ray - படைப்பு (public) அளித்துள்ளார்
21-May-2021 2:45 pm

ஆர்ப்பரிப்புடன்
ஆட்டமிடும்
சாலைகள்
அமைதியாய் துயில்கின்றன!

மவுனமே குடியிருக்கும்
வைத்திய சாலைகள்
மரண ஓலங்களால்
அலறுகின்றன!

உயிர்காக்கும்
அவசர ஊர்திகள்
அமரர் ஊர்திகளாய்
மாறிப்போகின்றன!

கடற்கரையில்
காற்று வாங்கிய
உயிர்கள்
மருத்துவமனையில்
காற்றில்லாமல்
கரைகின்றன!

புண்ணியவதியாய்
வளம் தந்த நதிகள்
கணக்கற்ற உடல்களுடன்
கொடும் பாவியாய்
வலம் வருகின்றன!

நிமிடத்துக்கொரு
சடலங்கள்
மயானங்கள்
மூச்சுத்திணறுகின்றன!

பாரதத்தை அழித்துவிட்ட
அழையா விருந்தாளியே...!
உன் எண்ணப்படி
ஊரையும் அடக்கி விட்டாய்
உயிரையும் குடித்து விட்டாய்
உணர்வையும் அசைத்து

மேலும்

Arun ray - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Aug-2020 12:34 am

கல்லூரி முடிந்தது
பேருந்தில் ஊர்நோக்கி
வழக்கமான பயணம்!
எதிர்பார்த்த கூட்டமில்லை
இருக்கையும் காலியில்லை!
கையில் அமர்ந்திருந்த
முந்நூறு கிராம் புத்தகம்
மூணு கிலோவாக கணத்தது!
இருக்கையில் அமர்ந்திருக்கும்
பெரியவரிடம் ஒப்படைத்து விடு
மனது சொன்னது; கரம் செய்தது!
கண்களின் பார்வையோ வேறுபக்கம்!
இதற்கு முன் பார்த்திடாத முகம்
பார்த்தவுடன் மனதில் பதிந்த முகம்!
பேரழகியில்லைதான்; ஆனாலும் பெரிய அழகிதான்!
அடுத்தடுத்த நாட்கள்
அதே பேருந்தை தே(ஓ)டிப்பிடித்து பயணம்!
கண்களோ அழகியிடமிருந்து
திரும்பவில்லை!
அங்கிருந்தோ மறு பார்வையில்லை!
நண்பர்களிடத்து சி.பி.ஐ. போல்
விசாரணை!
பிரபல தனிய

மேலும்

கருத்துகள்

மேலே