Rohini - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Rohini
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Oct-2018
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
Rohini செய்திகள்
Rohini - எண்ணம் (public)
30-Oct-2018 6:45 pm

உயிர் முதல் மெய் வரை தொடரும் நட்பு:

அகம் மகிழ வாழ்ந்திடலாம் 
அன்பான நட்பிருந்தால்!
ஆகாயத்தையும் அசைத்திடலாம் 
ஆழமான நட்பிருந்தால்!
இலக்கியமும் படைத்திடலாம் 
இனிமையான நட்பிருந்தால்!
ஈசனுக்கும் வழி காட்டலாம் 
ஈகை கொண்ட நட்பிருந்தால்!
உலகத்தையே உறவாக்கலாம் 
உண்மையான நட்பிருந்தால்!
ஊர் போற்ற உயர்ந்திடலாம் 
ஊக்கம் தரும் நட்பிருந்தால்!
எட்டுதிக்கும் பெயர் பதிக்கலாம் 
எழுச்சி மிக்க நட்பிருந்தால்!
ஏற்றம் பல கண்டிடலாம் 
ஏக்கம் போக்கும் நட்பிருந்தால்!
ஐயமின்றி சரித்திரம் படைக்கலாம் 
ஐயன் போன்ற நட்பிருந்தால்!
ஒளிரும் நட்சத்திரமாகலாம் 
ஒற்றுமையான நட்பிருந்தால்!
ஓயாத அலையையும் நிறுத்திடலாம் 
ஓவியம் போல நட்பிருந்தால்!
ஒளவைக்கும் ஆத்திசூடி சொல்லலாம் 
ஒளவியமற்ற நட்பிருந்தால்!
இஃதெல்லாம் சாத்தியமாகும் 
நம்மைப் போன்றதொரு நட்பிருந்தால்!

மேலும்

கருத்துகள்

மேலே