Rozhan A.jiffry - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  Rozhan A.jiffry
இடம்:  இறக்காமம்,இலங்கை.
பிறந்த தேதி :  04-Jul-1974
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  29-Jul-2012
பார்த்தவர்கள்:  1452
புள்ளி:  652

என்னைப் பற்றி...

கூடை,கூடையாய் எல்லாகனவுகளும் என்னிடம் இருக்கின்றன,இன்றைய வாழ்வின் முகத்தைதவிர!

என் படைப்புகள்
Rozhan A.jiffry செய்திகள்
Rozhan A.jiffry - எண்ணம் (public)
08-May-2020 2:37 am

மனிதனற்ற வெளி...
______________________
களை கொல்லிகள்
கிருமி கொல்லுமென பயந்ததால்
மாடு,ஆடுகளின் மந்தைவெளி
செழித்திருக்கிறது

அள்ளி இறைத்தவன் அடுப்பூதுகிறான்
வட்டைப் பூவல்களில் தண்ணீர்பஞ்சம் தலை தூக்காததால் தவளைகளின்
மாநாடு தடையின்றி நடக்கிறது

கோடாலிகள் கூட்டுக்குள்
காட்டு விலங்குகளின் பேரடவி
மழை பூத்தபடி மலர்ந்து கிடக்கிறது

வேடனற்ற வெளியில் மானும்.முயலும்
மறித்து விளையாடுகின்றன

புகை பிடித்து புகைந்து கொண்டிருந்த
சாலையோர நிழல் மரங்கள்
இலை கொட்டி துளிர்த்து சடைத்து வளர்ந்து நிற்கின்றன

தொறட்டிகள் எலிக்கூண்டுகளில்
அணில்களின் கனிப்பொறியில்
இனித்து பழுத்து விழும்
தேன் சுளைகள்

தூண்டில் போட்டவன் கூண்டில்
இரையாக்க இரை போடுபவர்கள்
இரைதேடித் தவிக்க
மீன்களின் ஆறு,குளம் துள்ளி விளையாடி
கடலுடன் கை குலுக்கியபடி
தெளிந்து கிடக்கிறது

எனதருமைப் பறவைகளே இது உங்களின் வானம்
சிறகுகள் சுமையில்லைதானே?
எத்தூரம் வேண்டுமோ
போய் வாருங்கள்
இது உங்களுக்குமான உலகம்.

-ரோஷான் ஏ.ஜிப்ரி -

மேலும்

Rozhan A.jiffry - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2016 11:26 pm

அடர்வனமற்ற
இருப்பின் பால் தனித்து
ஒற்றை கால் தவத்தில்
ஒரு கடிய வாழ்வை
நகர்த்திய பெண் பட்சி

வற்றிய நதிகளின் எல்லைதாண்டி
குஞ்சுகளின் இரைக்காய்
பாலை வெளியேகி
ஆட்டிடைச்சியாயும்
ஊண் தேடியலைந்ததாய்
கேவி அழுதிருக்கிறது என்னிடம்

நான் குஞ்சாய் இருந்த வேளையது
மனசு தாளாமல்
வலியோடு அழுதிருந்தேன்
வேறெதற்கும் வழியற்று நானும்

பின் வந்த காலங்களில்
பசித்திருந்த பொழுதுகளை சேமித்து
சுய அலகின் இறகுகளால்
கூடும் பின்னியது

தன் குஞ்சுகளின் வாழ்வு துலங்கும்
கனவுகளில் சிலிர்த்த
பொழுதொன்றில்
தன் ஆயுள்குளம் வற்ற
கணக்கு வழக்குகளை முடித்து
கரை ஏறிற்று

மீட்சி பெறு கணம்
எம் விழிகளில்
நதி

மேலும்

ஒரு நிதர்சனமான கவி ஓட்டம் 11-Apr-2016 11:51 pm
Rozhan A.jiffry - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2016 5:20 pm

.
நீண்டதொரு வேட்டைக்குப்பின்
விதி வசமாகிறதென்
கெதி
சொல்வனங்களில் தேடியலைந்து
காய சுள்ளி புறக்கும்
கவிதை பறவை நானின்று
அலகுகளின் மொழி நடையில்
அதனாலேயே கட்டுகிறேன்
குருவிக்குரிய கூட்டு அரணாய்
சிறு கூடு

எம கண்டர்களே
இனியேனும்...,
சின்னச்,சின்ன கனவுகளை
சிதைத்து விடாதீர்கள்
அதுதான் என் மனசு
ஆற அமரும் ஆறுதல்மடியும் அதுவே

இன்றில் வசித்தல்
பெரும் பொதியின்
சுமையாகும் களத்தில்
கண்ணிழந்த உலகம்
காலாற்ற விடுவதில்லை
நிறுத்தி வைத்து
நிறுத்து,நிறுத்து கேள்வி கேட்கின்றன

சாத்தியங்களை மீறிட்டு சத்தியங்கள்
எல்லா திசைகளும்
எரிச்சலில் முடிகின்றன
பாதுகாப்புக்குள் தான்
பயப்படவேண்டியா

மேலும்

காயங்கள் சுமைகள் என்ற இரு சிறகுகள் கொண்டு உலகம் எனும் பாதையில் வாழ்க்கை எனும் பயணத்தில் சிறகடித்து பறக்கிறான் மனிதன் 10-Apr-2016 5:35 pm
Rozhan A.jiffry - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Feb-2016 8:08 pm

நீர்சுழி மேலெழுந்து
மீன் கொத்தியின் நிசியில்
சலனத்தை தோற்றுவிப்பது போன்று
குளம் நம் கண்களை
ஏமாற்றி விடுகிறது.

நீராடிப் பறவைகளின் தடாகமாய்
அலாதிகளால் பூசி மெழுகப்பட
குளத்தின் பரப்பு
ஆம்பல் பூத்த கரைவெளியாகி
மாயங்களைத் திணித்து
மீன்கள் துள்ளி விளையாடி குளிக்கும்
நீர்த் தொட்டி என விரிகின்றன..

மூர்ச்சையுற வளிபட்ட துடுப்பினது
வலிமிகு கணங்களை
திரும்பிப் பார்க்காது தோணி
ஒரு கரையை மறு பாகத்திற்கு
இழுத்துச் சென்று பொருத்திவிடும்
தொனியில் ஆடுவது போன்று
நாம் பார்வைகளால்
மேய்ந்து கொண்டிருக்கிறோம்.

இதற்கு மேலும்
ஒரு படகோட்டியின்
வாழ்வு நகரும் பிரயத்தனத்தை
சில நாணயங்களைத் திணித

மேலும்

முன் பனி அளித்த படைப்பில் (public) சஹானா ஜிப்ரி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Jan-2016 3:07 pm

ஊமையின் பாடலாய்
குரல் வளை தாண்டி
வெளிவருவதில்லை
உதடுகளின் சிறைக்குள்ளே
சிக்கிக் கொண்டிருக்கிறேன்
மெளனம் எனும் பேரில்

தாழ்பாள் இல்லா செவியை
ஊனம் அடைத்ததாய்
உயிர்ப்பான எதையும்
இதுவரை கேட்டதாய்
ஞாபகம் இல்லை

கண்களும் குறுடாகிப் போயிற்று
திறந்துள்ள இமை பற்றி
எந்த பார்வையும் இல்லை
உயிர் இருக்கிறது
உணர்வுகள் மழுங்கி
நாளாயிற்று..

இதயம் மட்டும்
இன்னும் துடிக்கிறது
சுவாசம் இருக்கிறது
அதில் சுகம் என்று
ஒன்றில்லை
ஒக்சிஜன் வருவதால்
உள்ளிளுக்கிறேன்


கட்டிக் கழட்டிக்
கசங்கிப் போன புடவையும்
நிமிர்வதற்க்காய் குனிந்த
தலை குனிந்த படியே இன்னும்


விலை பேசி வலை வீசும

மேலும்

தோழா எழுந்து நிற்பாள் சஹானா எழுகதிரின் சுடரொளியுடன். பெருமை அடையலாம் உவன் தந்தை எந்நோற்றான் என.... . 26-Jan-2016 8:56 am
நன்றி நட்பே 26-Jan-2016 7:31 am
நன்றி 26-Jan-2016 7:30 am
மனதை உருக்கும் உண்மையான வரிகள். வாழ்த்துக்கள் 25-Jan-2016 6:52 pm
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) vellurraja மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Jan-2016 2:09 am

காட்சிப் பிழைகள் 24
1).ஒருதலை ராகம்

வார்த்தைகள் எல்லாம் விற்றுத்
தீர்த்து விட்டு வருகிறாய்.
உன் கூடையில் மிச்சமாய் எனக்காக
சில மௌனங்கள.

நீண்ட வாழ்க்கைப் பயணம்
ஒதுக்கப்பட்டஆசனத்தோடு
காத்திருப்பின் தரிப்பில் எனது பேரூந்து.
கால்நடையாய் போய்விடுகிறது காதல்.

அழகின் மழைக்காலத்தில்
வெளியில் வருகிறது பருவத்தவளை.
விரதமிருக்கின்றன விழி அரவங்கள்.

நுழைவு கிடைப்பதே
குதிரைக் கொம்பாக இருக்கும்
ஆரம்ப பள்ளிக்கூடம்.
அதற்குள் உன் இதயத்தின் வாசலில்
புத்தகப் பையுடன் நிற்கிறது காதல்.

நீ நினைக்கக் கூடாது என்பதைக்கூட
நினைத்துக் கொண்டுதானிருக்கிறாய்
நினைக்க வேண்டிய என்னை

மேலும்

கஸல் பற்றிய விளக்கங்களுக்கு மிக மிக நன்றி தோழரே.. . இன்னும் நிறைய தெரிந்து கொள்ளவேண்டியிருக்கிறது. இப்போதைக்கு உங்கள் ஆலோசனை அதற்கான பாதையைக் காட்டியுள்ளது. கஸல் விதிகளுக்கொப்ப. இனிவரும் காலங்களில் படைப்புகள் முன்னெடுக்கப்படும் நன்றி 23-Jan-2016 1:41 am
மிக்க நன்றி 23-Jan-2016 1:36 am
மிக்க நன்றி 23-Jan-2016 1:36 am
மிக்க நன்றி 23-Jan-2016 1:35 am
மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Dec-2015 1:56 am

வந்தாரை வாழவைத்து வாழ்த்தும் பெருங்குணத்தால்
மந்தாரப் பூப்போல் மனம்மலர்ந்து – சிந்துகின்ற
பேரன்பு மாரி பெருமேகச் சூல்கொண்டு
பாரெங் குமுலவும் பண்பு

சொந்தபந்த சொத்து சுகமிழந்து சோர்வடைந்து
வந்தேறு மண்ணின் வசப்பட்டு – சிந்தை
நிலைகுழைந்தே நின்றிடினும் நில்லார் தமிழர்
கலைவளர்த்துக் காப்பர் மரபு.

கடல்தாண்டி வாழ்வின் கரைசேர தத்தம்
உடலுழைப்பைக் கொட்டி உதிர்ந்தும் – திடமாய்
அயல்நாட்டு மண்ணில் அயராத் தமிழர்
இயல்தமிழ் செய்வர் இசைந்து

விண்தாண்டிச் சென்றும் விலைமதிப் பில்லாநம்
பண்பாட்டைக் கட்டிப் பலமாகப் – பண்பாடி
கண்போலக் காக்கும் கரிசனமே காட்டுதன்றோ
மண்ணில் தமிழரின் மாண

மேலும்

நன்றி 27-Dec-2015 2:26 am
நன்றி 27-Dec-2015 2:26 am
நன்றி 27-Dec-2015 2:26 am
நன்றி 27-Dec-2015 2:26 am
Rozhan A.jiffry அளித்த படைப்பில் (public) athinada மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Nov-2015 6:13 pm

அருங் கோடை இடி,இடிக்கு
அடி வானம் மழையடிக்கும்
தரிசெல்லாம் மண் கனியும்
தளிர் விட்டு பூ அணியும்
வாய்க்காலில் நீர் சுழிக்கும்
வக்கடையில் மீன் சினைக்கும்
ஆள் விரட்டி கொக்கரிக்கும்-உன்
அழகில் அது சொக்கி நிக்கும்


வரப்பால் நடந்து புள்ள
வந்தாய் என்றால் மெல்ல
‘புரை’க்காலும் எழுந்து நின்று
புதினமாய் பார்க்கும் ஒன்ன
பரண் திடலும் வாய்மூடி-உன்
பவனிதனை ரசித்து சொக்கும்
பதக்கடையும் நெல் மணியாய்
பயிராகி முளைத்து நிக்கும்


மனப்பால் அழ நிறஞ்சி
மண்ணெல்லாம் வழிந்தோடும்
நினைப்பால் நெல் விளஞ்சி
நெஞ்செல்லாம் கதிராடும்
அறுகம் புல் அடி துளிர்க்கும்
அயல் காணி நீர் சுரக்கும்
வயலெல்லாம் கலர்

மேலும்

நன்றி தோழா 23-Nov-2015 2:15 pm
நன்றி உறவே 23-Nov-2015 2:13 pm
ஊக்கப் படுத்தினால் ஊக்கு விற்பவனும் தேக்கு விற்பவன் ஆவானாம் வாலி சொன்ன வரிகள் நன்றி நாடா . 23-Nov-2015 2:12 pm
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர் ஜின்னாஹ். 23-Nov-2015 2:10 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (186)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
முன் பனி

முன் பனி

வாங்காமம் (இறக்காமம் -02),இல
பட்டினத்தார்

பட்டினத்தார்

தென் துருவம்

இவர் பின்தொடர்பவர்கள் (186)

Jegan

Jegan

திருநெல்வேலி
Ramani

Ramani

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (186)

Nagaraj Ganesh

Nagaraj Ganesh

தமிழ்தேசம்
myimamdeen

myimamdeen

இலங்கை
agan

agan

Puthucherry

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே