SUBITHA V - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  SUBITHA V
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-Jul-2018
பார்த்தவர்கள்:  55
புள்ளி:  2

என் படைப்புகள்
SUBITHA V செய்திகள்
SUBITHA V - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 12:10 pm

அமுதூட்ட அருகிலில்லை
தாலாட்ட நானில்லை
உணவூட்ட உடனில்லை!

வேலைக்குச் செல்லும்போது
விடமாட்டேன் என்றபோதும்
விடைபெறுகிறேன்
உன் கண்ணீரோடு
காலையில்!

வழிமேல் விழி வைத்து
ஏக்கத்துடன் எதிர்நோக்கும்
உனை வாரியணைக்க
விரைந்து வருகிறேன்
மாலையில்!

உன் மழலை மொழியில்
அம்மா என்று
நீ அழைக்கும் போது
காற்றில் பறந்துவிடுகிறது
என் களைப்பெல்லாம்!

மேலும்

நல்லாருக்கு............. 09-Aug-2018 12:44 pm
உணர்வின் ஓவியம் . 30-Jul-2018 1:23 pm
SUBITHA V - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2018 12:01 pm

உன்னைக் கருவில்
சுமந்த போது
வலியாய் நீ
தோன்றவில்லை!
கவிதை வரியாய்
தோன்றினாய்!

உன் இரு விழியின்
ஒரு துளி கண்ணீரால்
என் உலகமே
நின்றுவிடும்!
உன் ஒற்றைப் புன்னகை
என் இதயத்தை எளிதாய்
வென்றுவிடும்!

உன் கனவுகளை கலைக்காமல்
ஒவ்வொன்றாய் நனவாக்கவே
இறைவன் உனை
எனக்களித்தான்!

உன் ஆசைகளை
நான் அலட்சியப்படுத்துகையில்
ஆண்டவன் எனைப்
புறக்கணிப்பான்!

மேலும்

சிறப்பு மிகச்சிறப்பு..... நல்ல கவிதை..... 09-Aug-2018 12:28 pm
நன்று தோழி 30-Jul-2018 1:23 pm
கருத்துகள்

மேலே