Srikanth lawrence - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Srikanth lawrence
இடம்
பிறந்த தேதி :  07-Nov-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Aug-2018
பார்த்தவர்கள்:  10
புள்ளி:  0

என் படைப்புகள்
Srikanth lawrence செய்திகள்
Srikanth lawrence - எண்ணம் (public)
06-Apr-2020 10:09 am

QUARANTINE POEM

          தனிமையின் வெளிச்சம்:

தனிமையே உன்னிடம் என்னை அறிமுகம் செய்தேன்
உன் முகவரி என்னவென்று தெரியாமல்

நாட்கள் நகரும் போது உணர்ந்தேன்
என்னை சக மனிதனாய்
தனிமை சுதந்திரம் பெற்ற போது உணர்ந்தேன்
என்னை தனி மனிதனாய்

சிறகடித்து பறக்காமல் இல்லை
பறந்து கொண்டுதான் இருக்கிறேன்
நீ கொடுத்த சுதந்திர எல்லைக்குள்

பணத்தை அச்சிடும் இயந்திரமாய் பிறந்தாலும் சற்று ஓய்ந்திருப்பேன்
பணத்தை தேடி அலையும் மனிதனாய் பிறந்துவிட்டேன்
இந்த ஓய்வு உன் தயவானது
தனிமை இனிமை ஆனது

தனிமையில் அல்லவா என் கிறுக்கல்கள் 
எனக்கு கவிதையாய் தோன்றியது
தனிமையில் அல்லவா என் வெகுளித்தனம் 
எனக்கு வியப்பாய் இருந்தது
தனிமையில் அல்லவா என் மொழி  
எனக்கு மௌனமாய் மாறியது
தனிமையில் அல்லவா என் செயல்
எனக்கு  தனித்துவம் பெற்றது

தனிமையே  உன்னை நம்பியல்லவா கனா பல கண்டேன்
என் கனா களவு போகாமல் பார்த்துக்கொள்

நான் தனிமை பாராட்டினேன்
நீ என்னை பாராட்டி பரிசளித்தாய்
"மலரும் நினைவுகளை"

தனிமையே என்னை தேடி வந்து நீ கவிதையானாய்
உன்னை தேடி வரும் போது நான் காவியமாய் இருந்திடுவேன்

                               - Written By Srikanth Lawrence

மேலும்

Srikanth lawrence - எண்ணம் (public)
12-Jan-2020 9:53 pm

மகாத்மா காந்தி கவிதை:

அகதியாய் கொந்தளித்தோம்
"அ" அகிம்சை என
கைபிடித்து சொல்லி தந்தாய்
ஆயுதம் இல்லாது உன் போதனை
புது கீதையை போன்றது
சத்தியம் உயிர் பெற்ற போது
காந்தி உருவை கண்டேன்
உனக்கே ஏற்பட்ட சோதனை
அதனால் இயற்றப்பட்ட சாதனை
"சத்திய சோதனை "
விடுதலை கேட்டபோது
விடுகதையாய் அமைந்தாய்
வெள்ளையனுக்கும் 
ஒரு கன்னத்தில் அரைந்தால்
மறு கன்னத்தை காண்பி
என புதிர் போட்டாய்
விடை தெரியாமல் தடுமாறினான்
வெள்ளையன்
தேசப்பிதாவாய்
உன் மகன்களுக்கும் மகள்களுக்கும்
சுதந்திரம் என்னும் சொத்தை
தாரை வார்த்தாய்
இந்த செயல் உன் ஆத்மாவை
"மகாத்மா" வாக்கியது
சாதாரண ஆத்மாவான எனக்கு
என் சுதந்திர மூச்சை சுவாப்பதே
உன் புகழை பாடும் தேசிய கீதம்   

                   ஜெய்ஹிந்த்!

               - Written By Srikanth Lawrence

மேலும்

கருத்துகள்

மேலே