Rani - சுயவிவரம்

(Profile)வாசகர்
இயற்பெயர்:  Rani
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  05-May-2020
பார்த்தவர்கள்:  111
புள்ளி:  10

என் படைப்புகள்
Rani செய்திகள்
Rani - Rani அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Jun-2021 10:56 am

எப்படி
தொடங்குவது
நான்
எப்படி
தொடங்குவது..

என்னில்
எழும்
எண்ணில்லா
எண்ணங்களை
எப்படி
தொடங்குவது
எழுத்தில்..

உனக்கு
ஆயிரம்
பண்ணிசைத்து
பாடதுடிக்கும்
நெஞ்சம்..
வார்த்தை வாராமல்
வரிகளில்
கண்ணீர் துளிகள்
மட்டுமே
மிச்சம்..

நனைந்த
காகிதம்
உனக்கு
அனுப்புகிறேன்..
உனக்கு
மட்டுமே
புரியும்
அது
வெறுங்காகிதம்
அல்ல
என்று..

விடுபெறவா
அழைத்தாய்
உன்
விழிகளின்
மொழியில்
விடைபெற்றும்
நீங்க
முடியவில்லை
நினைவுகளின்
பிடியில்

கோலம் மாறுதல்கண்டு கவலை ஏனோ
ஞாலம் நாளை உனைபோற்ற
வாவென்றழைப்பைது
கேட்கவில்லையோ
அன்பில் மலர்ந்த புன்னகை
தீபமே..
ஆவலுடன்
காத்திருக்கிறேன்

மேலும்

கருத்திட்டமைக்கும் தங்களின் வாழ்த்துதலுக்கும் நன்றி சுபா அவர்களே🙏 13-Jun-2021 10:22 pm
வணக்கம் ராணி அவர்களே.... எப்படி தொடங்குவது என்று கவிதை எழுத தொடங்கிய உங்களின் தயக்கம் வார்த்தைகளில் இல்லை... மிக தெளிவாகவும், நிறைவாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 13-Jun-2021 9:26 am
Rani - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Jun-2021 10:56 am

எப்படி
தொடங்குவது
நான்
எப்படி
தொடங்குவது..

என்னில்
எழும்
எண்ணில்லா
எண்ணங்களை
எப்படி
தொடங்குவது
எழுத்தில்..

உனக்கு
ஆயிரம்
பண்ணிசைத்து
பாடதுடிக்கும்
நெஞ்சம்..
வார்த்தை வாராமல்
வரிகளில்
கண்ணீர் துளிகள்
மட்டுமே
மிச்சம்..

நனைந்த
காகிதம்
உனக்கு
அனுப்புகிறேன்..
உனக்கு
மட்டுமே
புரியும்
அது
வெறுங்காகிதம்
அல்ல
என்று..

விடுபெறவா
அழைத்தாய்
உன்
விழிகளின்
மொழியில்
விடைபெற்றும்
நீங்க
முடியவில்லை
நினைவுகளின்
பிடியில்

கோலம் மாறுதல்கண்டு கவலை ஏனோ
ஞாலம் நாளை உனைபோற்ற
வாவென்றழைப்பைது
கேட்கவில்லையோ
அன்பில் மலர்ந்த புன்னகை
தீபமே..
ஆவலுடன்
காத்திருக்கிறேன்

மேலும்

கருத்திட்டமைக்கும் தங்களின் வாழ்த்துதலுக்கும் நன்றி சுபா அவர்களே🙏 13-Jun-2021 10:22 pm
வணக்கம் ராணி அவர்களே.... எப்படி தொடங்குவது என்று கவிதை எழுத தொடங்கிய உங்களின் தயக்கம் வார்த்தைகளில் இல்லை... மிக தெளிவாகவும், நிறைவாகவும் இருக்கிறது. வாழ்த்துக்கள்... வாழ்க நலமுடன்...!! 13-Jun-2021 9:26 am
Rani - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2021 9:53 am

மல்லிகை
எனக்கு
பிடித்த
மலர்தான்..
உன்னை
கவர
என்றும்
சூடியதில்லை..
வாசனைக்கு
சூடவில்லை..

மல்லிகையின் வெண்மை-மனத்தூய்மை
என்று
உணர்ந்ததால்
சூடுகிறேன்.
மலர்கள் தெய்வத்தன்மை பொருந்தியவை..
மங்கலதன்மை வாய்ந்தவை..
மனஅமைதியை தரவல்லவை..

உங்கள்
உள்ளத்தின் அழுக்குகள்
உயர் சிந்தனையை
உணரவிடாததிற்கு
நான் பொறுப்பல்ல..

மேலும்

Rani - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2021 9:39 am

ஒப்புக்கொள்ள
மறுக்கிறது
மனம்
நீ
கள்வனென்று.

கனவாகி போகக்கூடாதோ
உன் நிஜம்..
நனவாகி போகக்கூடாதோ
உன் பொய்..
மனதின் ஏக்கங்கள்
இவையன்றி வேறென்ன..

உலகில் யாவும்
யதார்த்தம்...
என்ன
நிகழ்ந்தாலும்
யதார்த்தம் பழகு
என்று
எங்கோ
ஒரு ஆறுதல்
குரல் ஒலித்துகொண்டே
தான்
இருக்கிறது செவிகளில்..
இருந்தும்
கண்ணீர்
ததும்பி
கொண்டுதான்
இருக்கிறது
விழிகளில்..

மேலும்

Rani - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2021 1:00 pm

கொரோனாவிற்கு
இரையான
உடல் தேர
உடலுக்கு
இரையானது
ஊன்.

விரதம்
கலைந்தது..
விசனம்
கலையவில்லை..
ஏழுமலையான்
புரிந்துகொள்வான்..
காக்கும்
தெய்வமன்றோ.
ஏற்ற செல்வத்தை
ஏற்ற நேரத்தில்
அவன்
மனதிற்கேற்றவர்களுக்கு
அருள்புரிவான்.

செய்யவேண்டிய
கடமைகள்
பற்பல இருப்பின்
உடல்நலம் முக்கியம்.
உயிர்வாழ்தல்
அவசியம்.
உடலை திடப்படுத்துங்கள்.
நோயினை எதிர்கொள்வோம்
தன்னம்பிக்கையுடன்.

மேலும்

Rani - நன்னாடன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Mar-2021 9:53 am

அரசர்கள் போலேவே அரசியல் கட்சிகள் ஆக காரணம்
அரசியல் சாசனத்தின் ஆற்றல் மிகு சட்டங்களே
குற்றங்களைத் தூண்டுவது குதுகலிக்கும் மனித மனம்
குற்றத்தை ஒழுங்குப்படுத்துவது அரசியல் சாசனமே
பாதிக்கப்பட்டோர் நாடுவது பக்க பலமாய் சட்டத்தை
சட்டம் ஆளுவோரோ பாதிப்பு கொடுத்தோருக்கு பாலமாய்
வழவழப்புக்கு வாழையென்போம் வளையாததற்கு இரும்பென்போம்
இவ்விரு நிலைக் கொண்டதற்கு கம்பீர சட்டமென்போம்
பயந்தவனிடம் சட்டங்கள் அதிகமாய் பயமுறுத்தும்
துணிந்தவர்களிடம் அவைகளே குனிந்து அடிபணியும்
குருடனும் செவிடனும் கூத்து பார்ப்பதைப்போல் உள்ளது சட்டங்கள்
கூரிய வாள் குத்துவதைப் போன்றே இருக்க வேண்டும் இனி சட்டங்கள்.
----- நன்னாட

மேலும்

திட மனங்கொண்டோனாகவும் சொகுசுக்கு ஆசைப்படாத ஆட்சியாளன் வந்தால் நடக்கலாம் அய்யா ஆழமாய் படித்து அற்புதமாய் கருத்திடும் கவி. சக்கரை வாசன் அய்யா அவர்களுக்கு நன்றிகள் பற்பல . 05-Mar-2021 6:48 pm
யதார்த்த நடப்பு களை நன்கு கூறியுள்ளீர் இறுதி இரண்டு வரிகட்கு எத்தனை யுகங்கள் கடக்க வேண்டுமோ 05-Mar-2021 4:22 pm
எழுச்சிமிகு கருத்தால் உற்சாகந்தந்த கவி. உமாராணி அவர்களுக்கு கருத்திட்டமைக்கு நன்றிகள் பற்பலவே. 04-Mar-2021 10:46 am
உண்மை அய்யா.. ஜனநாயகத்தை பணநாயகம் விழுங்கி விட்டது. உண்மையில் நன்கு எழுதப்பட்ட சட்டம் நம்முடையது.. நடைமுறை படுத்துவதில் தான் தாமதம் ஆகிறது. அமெரிக்காவில் சட்டம் தன்னிச்சையாக செயல்படுகிறது.. நம் நாட்டில் பெயரளவில் மட்டுமே.. நல்ல ஆட்சியாளர்கள் வந்தால் மட்டுமே நல்ல அதிகாரிகள் பணிபுரிய முடியும். நல்ல அரசு அதிகாரிகள் மக்கள் பணி செய்ய முடியாமல் பதவியிலிருந்து இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கடந்த ஆண்டில் பணி விலகல் செய்துள்ளனர்... குடிமையியல் தேர்வுகள் எழுத ஆர்வம் குன்றி போகிறது இளைய சமுதாயத்தினரிடையே. சட்டம் இயற்றும் ஆட்சியாளர்கள் சட்டத்தை பாதுகாக்க வேண்டும்.. பாதுகாவலனே கொன்றால் என் செய்வது.. மக்கள் சிந்திக்க வேண்டும்.. நல்ல கவிதை அய்யா.. 04-Mar-2021 10:19 am
Rani - கவிஞன் வளர்பிறைதாசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2021 3:43 pm

என் கேள்விக்கு என்ன பதில் கண்ணம்மா ?

காணும் கண்கள் எல்லாம் உன் கண்கள் ஆகாதோ?
உன் கண்ணை காணாமல் என் தாகம் தீராதோ?
உன் கண்கள் என்னைத்தான் காணாமல் போகுமோ?
உன் கண்கள் என்னை கண்டவுடன் என் துக்கம் தீருமோ?

தேனின் இதழை பெற்றவளோ ?
இல்லை -
தேனாடையுற்றவளோ ?

என் மனதில் தோன்றிய காதல் என்ற களவோ ?
இல்லை
கருமை கலக்காத வெண்ணிலவோ ?

உன்னை காண என் கண்கள் காத்திருக்குமோ?
இல்லை
உன்னை எண்ணி என் கவிதைகள் பூக்களாக பூத்திருக்குமா ?

என் கேள்விக்கு பதில் நீ தருவாயா ?
இல்லை என் கேள்விக்கு பதிலாக நீ வருவாயா ?

உன் பதிலுக்காக காலம் வரை காத்திருக்கும் என் வரிகள் ...........

மேலும்

நன்றி நட்பே 21-Feb-2021 12:09 pm
இனிமை வரிகள் 20-Feb-2021 3:55 pm
மேலும்...
கருத்துகள்

மேலே