ப வெ உத்ரா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ப வெ உத்ரா
இடம்:  சென்னை
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  20-Oct-2017
பார்த்தவர்கள்:  204
புள்ளி:  5

என் படைப்புகள்
ப வெ உத்ரா செய்திகள்
ப வெ உத்ரா - ப திலீபன் அளித்த போட்டியில் (public) கருத்து அளித்துள்ளார்

மழலைகளை நேசிக்காதவர்கள் இந்த உலகில் எவரும் இருக்க முடியாது. நம் எல்லோருக்குமே குழந்தைகளாகவே இருந்துவிட்டிருக்கலாம் என்ற எண்ணம் வாழ்வில் ஒருமுறையாவது வந்திருக்கும். குழந்தைகளே நம் எதிர்காலத்திற்கான வித்து. இந்த பிரபஞ்சத்தின் எதிர்காலமும் அவர்கள் கையில்தான் இருக்கிறது.

ஆனால் நம் குழந்தைகளின் வாழ்வியலை, அவர்களின் உளவியலை, மன ஓட்டங்களை நாம் பெரியவர்களாகவே அணுகிக்கொண்டிருக்கிறோம். குழந்தைகள் சந்திக்கும் சிக்கல்களை நாம் காது கொடுத்துக் கேட்பதே இல்லை. அவர்களிடம் உட்கார்ந்து உரையாடுவதில்லை. அவர்களின் அழுகுரல் பெரும்பாலும் பொதுப்படையாகவே புரிந்துகொள்ளப்படுகிறது. இந்த போட்டி குழந்தைகளை பற்றி பேசாத வி

மேலும்

போட்டிக்கான பரிசு பெற்றவர்களின் முடிவுகள் அறிவிக்கப் பட்டு விட்டனவா ? அதை எதில் தெரிந்து கொள்ளலாம் ? 06-Dec-2017 12:12 pm
மன்னிக்கவும் மேடம். கவனக்குறைவால் நிகழ்ந்துவிட்டது. நன்றி. 23-Oct-2017 12:46 pm
நன்றி திலீபன்! விரைவில் படப்பை சமர்ப்பிக்கிறேன்! BTW நான் ஆண் அல்ல! பெண்! Sir என்று விளித்திருக்கிறீர்கள்! அதனால் இந்த விளக்கம்! 23-Oct-2017 9:29 am
There is no pages limit for the contents sir. Yes you can participate. Please send your content to the mail id in the above image. Thanks. 16-Oct-2017 11:30 am
ப வெ உத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Oct-2017 6:16 pm

பெண்ணே...!
எந்நாளும் இழக்காதே உன் சுய மரியாதையை
அன்பிற்காகவும் கூட...
பின்னாளில் வருந்துவாய் உன் தவறுக்காக
இந்நாளே உணருவாய்...
உண்மை அன்பு என்றும் பெண்மையின் சுய மரியாதை மதிப்பதே .

மேலும்

பணத்தை தேடும் உலகில் உள்ளத்தை மதிக்க யாருமில்லை இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 01-Nov-2017 11:13 pm
ப வெ உத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Oct-2017 11:50 am

மேகம் கருத்திற்கும் வேளையில்
வீசுது தென்றல் காற்று
வானம் பொழிய பார்க்கிறது
விழிகள் காத்திருக்கு அதை எதிர்பார்த்து
காதோரம் கேட்கும் மெல்லிய இசைக்கு
ரீங்காரமாய் நடனமாடும் இளஞ்செடிகள்
ஜன்னல் ஓரம் நின்று ரசிக்கிறேன்,
ஆடி அசைந்து மகிழும் மரங்களை
வீசும் நறுமணம் அவள் தூறலில் நனையும் பூமியிலிருந்து
துள்ளுது உள்ளம் தானும் உடன் நனைந்திட தானே
சின்ன நீர்பறவைகள் நீச்சல் அடிக்கிறது உல்லாசமாய் நனைந்தபடி
மனதும் நிறைந்தது இயற்கையை ரசிக்கையில்
நெஞ்சமோ நெகிழ்ந்தது நிஜங்கள் அதிசயத்தில்...

மேலும்

"காதோரம் கேட்கும் மெல்லிய இசைக்கு ரீங்காரமாய் நடனமாடும் இளஞ்செடிகள்" ..ஆஹா அருமை ... இயற்கையை ரசித்து உங்கள் எண்ணத்தில் மிதந்து எழுத்தில் இட்ட இவ் வரிக்கோலம் மிக நன்று .. வாழ்த்துக்கள் 25-Oct-2017 11:45 am
இயற்கை எனும் விந்தைக்குள் கைதான சிந்தனைப்பறவைகள் மனிதர்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 25-Oct-2017 12:19 am
மழையில் காதலியுடன் நனைவது இனிமை காலங்கள்... 24-Oct-2017 9:00 pm
உயில்களிலேயே மனிதன் மட்டும் தான் மலையை அதிகம் எதிர் பார்க்கிறான் . மழை வந்தவுன் வீட்டினுள் ஒளிந்தபடி நின்று பார்க்கிறான் . அழகிய உங்கள் கவிதைக்கு வாழ்த்துக்கள் 24-Oct-2017 12:13 pm
ப வெ உத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Oct-2017 3:42 pm

அன்று என்னை சுற்றி நால்வர் இருக்கையில்
மணிப்பொழுதும் உடன் இருக்கத் துடித்தாய்...
இன்று நான்கு சுவர் மத்தியில் நான் மட்டும் நிற்கையில்
ஒரு மணித் துளி கூட உடன் இருக்க மறுக்கிறாய்...

மேலும்

உலகின் எல்லையில் தான் பிரிவுகள் உண்டு மனதின் எல்லையில் கிடையாது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 24-Oct-2017 6:54 am
ப வெ உத்ரா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Oct-2017 11:58 am

கொஞ்சிப் பேசிடும் உன் மழலையின் அழகை ரசித்து முடித்திடும் முன்னமே
நெஞ்சில் துடிக்குதடி உன் எதிர் காலத்தின் பயமே...
அறிவியல் தொழில் நுட்பங்கள் பல உண்டு உன் அறிவின் வளர்ச்சிக்கு
இங்கே சில காமக் கொடூர்களும் உண்டு உன் பெண்மையின் பங்கத்திற்கு
பெற்றவர்கள் இருக்கையில் கவலை ஏனடி உனக்கு
காலம் இதுவே சிறந்த காலம் மகிழுந்து சிறகடித்து பழகடி

பெற்றவர்களை நம்பி இந்த உலகில் புதிதாகப் பூக்கும் பூக்கள் தான் குழந்தைகள். அவர்களை நாமே பேணிப் பாதுகாத்திட வேண்டும். குழந்தைகள் வெளியுலகம் காணும் முன்பே நம்மை கண்டு தான் வளருகிறார்கள். நாம் நடந்து காட்டும் வழி தான் அவர்கள் வாழ்க்கையில் தேர்ந்தெடுக்கும் முதல் பா

மேலும்

ப வெ உத்ரா - ப வெ உத்ரா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2017 11:34 am

ஆசை முகம் கண்டேனடி
அதில் பேசும் கண்கள் கண்டேனடி ...
மௌனமே பாஷையாய் கொண்டோமடி
அதில் உலகமே மறந்து கிடந்தோமாடி...

ஆசை முகம் கண்டேனடி
அதில் காதல் கனவுகள் கண்டேனடி...
உள்ளம் உரசிட கண்டேனடி
அதில் காதல் நிறைந்திட கண்டோமடி...

ஆசை முகம் கண்டேனடி
அதில் தவிப்புகள் பல கண்டேனடி...
இரு கரம் சேர்ந்திட கண்டேனடி
ஊர் நின்று வாழ்த்திட கண்டோமடி...

மேலும்

காணும் போதெல்லாம் அவள் முகம் காதலின் விளம்பரம் கண்களின் வழியே உள்ளத்திற்கு செய்து கொண்ட இருக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள்! 23-Oct-2017 12:36 am
மேலும்...
கருத்துகள்

மேலே