முஹம்மது இப்ராஹிம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது இப்ராஹிம்
இடம்:  பெங்களூர்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Nov-2014
பார்த்தவர்கள்:  44
புள்ளி:  0

என்னைப் பற்றி...

கவிதை படைக்க வரவில்லை ,படிக்க வந்தேன் .ஒரு ரசிகன் ,அவ்வளவே !

என் படைப்புகள்
முஹம்மது இப்ராஹிம் செய்திகள்
முஹம்மது இப்ராஹிம் - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Nov-2014 8:56 pm

வெண்பனிக்கு முத்தம் தர
வெண்ணிலவு ஆசை கொண்டது;
விடிய விடிய காத்திருந்து
வெள்ளை முகம் வாடிப் போனது...

மெல்ல மெல்ல முகம் மறைத்து
மேகத்தோடு நட்பு கொண்டது;
மேகம் சொன்ன சேதி கேட்டு
மோகம் இன்னும் கூடிப் போனது..

கிழக்கு வெளுக்கும் நேரம் வரை
கீழ்வானம் சிவக்கும் வரை
காத்திருந்து காத்திருந்து ஏக்கம் கொண்டது
கண்விழித்து கண்விழித்து தூக்கம்
தொலைத்தது....

காதல் கொண்ட சேதி சொல்லி
கதிரவனை தூதனுப்புது
சேதிகேட்ட பனித்துளிகள் வெட்கத்தோடு
சிரித்து சிரித்து ஓடி ஒளியுது.....

மேலும்

சூரியனின் வெப்பத்தில் பனித்துளி மறைவதை வெட்கத்தால் ஓடியதாக சொன்னது அருமை ! 15-Nov-2014 6:20 pm
கவி அழகு அழகு நிஷா! 15-Nov-2014 6:01 pm
அருமை..தோழி வாழ்த்துக்கள் 04-Nov-2014 12:43 am
மெல்ல மெல்ல முகம் மறைத்து மேகத்தோடு நட்பு கொண்டது; மேகம் சொன்ன சேதி கேட்டு மோகம் இன்னும் கூடிப் போனது.. சந்தம் மிக அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 03-Nov-2014 1:33 am
முஹம்மது இப்ராஹிம் - நிஷா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Nov-2014 3:14 pm

வெட்டிப் போட்ட முருங்கைக்கிளை
முட்டி மோதி துளிர்க்குது...
தட்டி விட்ட குட்டி விதைகள்
தடைகள் தாண்டி வளருது...


ஊன்றி வைத்த ஒற்றைசெடியோ
ஊனமின்றி உயருது...
பதியம் வைத்த பன்னீர் ரோஜா
பரந்து விரிந்து தழுக்குது...

சின்ன சின்ன மழைத்துளிகள்
சேர்ந்து வெள்ளம் ஆகுது....
சிதறும் வண்ணப் பூக்கள் சேர்ந்து
சிவப்பு கம்பளம் விரிக்குது...


குட்டி குட்டி மேகக்கூட்டம்
கூடி இங்கே சிரிக்குது
இதை ரசிக்கத் தெரிந்த மனசு மட்டும்
எதிர்ப்பை கண்டு நடுங்குது ஏனோ.?

மேலும்

சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்ந்து வெள்ளம் ஆகுது.... சிதறும் வண்ணப் பூக்கள் சேர்ந்து சிவப்பு கம்பளம் விரிக்குது...// அருமை வாழ்த்துக்கள் தோழி// 16-Nov-2014 11:38 pm
அருமையிலும் அருமை !!! 15-Nov-2014 11:15 pm
கவி மிகவும் அருமை அருமை நிஷா! 15-Nov-2014 5:58 pm
வெட்டிப் போட்ட முருங்கைக்கிளை முட்டி மோதி துளிர்க்குது... ******************** முயற்சியில் முட்டு வெளிவரும் மொட்டு ******************** தட்டி விட்ட குட்டி விதைகள் தடைகள் தாண்டி வளருது... ******************** தடைகளை தாண்டு அறிவினைத் தூண்டு ******************** ஊன்றி வைத்த ஒற்றைசெடியோ ஊனமின்றி உயருது... ******************** நிலவில்லா வானமில்லை ; உறுதி இருந்தால் ஊனமில்லை ******************** சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்ந்து வெள்ளம் ஆகுது.... ******************** சிறு துளிதான் பெரு வெள்ளம்; அன்பிருந்தா நல்ல உள்ளம் ******************** மிக அருமை தோழமையே... எளிய நடையில் மிக அருமையான பொருளை இயல்பாக சொன்ன விதம் மிக அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள் தோழமையே... 15-Nov-2014 5:36 pm
முஹம்மது இப்ராஹிம் - ilmunnisha3 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Feb-2014 4:51 pm

வாழ்வுக்கும் சாவுக்கும்
மத்தியில் தவிக்கும்
ஏற்றி விட்ட மெழுகாக
ஆகி விட்டதடி
என் வாழ்வு
வசந்த பாதையில் நீ
நடை பயில வருவாயா ?

இல்முன்னிஷா நிஷா

மேலும்

ஏற்றி விட்ட மெழுகு , நல்ல கற்பனை! 15-Nov-2014 2:50 pm
நன்றி தோழரே 11-Mar-2014 7:16 pm
அருமையான வித்தியாசம் . 11-Mar-2014 4:07 pm
கருத்துகள்

மேலே