கோரா தணிகைமணி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கோரா தணிகைமணி |
இடம் | : சேர்க்காடு,வேலூர் |
பிறந்த தேதி | : 15-Apr-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Nov-2016 |
பார்த்தவர்கள் | : 836 |
புள்ளி | : 13 |
நான் ஒரு கன்னிக்கவியாளர் 😊
நகரும் நகர நகரத்தின் நடுவே
நான் ஒரு விசித்திரன் போல
பெருநகரத்தின் நடுவே
நாற்கர சாலை அருகே
எனது குடியிருப்பு
சுவரில்லா
கிலையிலை சுழ்ந்த
கூரை அது
பார்த்துக்கொண்டே சிலர்
பார்த்தும் பார்க்காமல் பலர்
பாவக்கணக்கை கழிக்க பரிசலிப்போர் சிலர்
பாவி என விரட்டுவோர் பலர்
மூக்கை பொத்திக்கொண்டு சிலர்
வாயை பொத்திக்கொண்டு பலர்
குழந்தைகளுக்கு பயம்காட்ட சில
குழந்தைகளுக்கு உணவுட்ட என
வித விதமான மக்கள்
விசித்திரம் பார்க்கும் மக்கள்
இருந்தாலும்
சுதந்திரம் உண்மையில் பெற்றவன் நான்
சூழ் குப்பைகளின் தலைவன் நான்
எனக்கென்று அடையாளம் இல்லை
ஏனென்றால் நான் ஆண்டவன் பிள்ளை
உணவிற
மனித வாழ்க்கை பொய்யடா
பொய் உடல் அவனது மெய்யடா
பிறப்பும் இறப்பும் சதியடா
கேட்டால் பதில் "அது விதியடா"
இறைவன் நம்மை சோதிக்க
இயற்றப்பட்ட வழியடா
எனச் சொல்லிச் சொல்லி
விடுவார் நம்மிடம் கதையடா
சோதிக்க இது என்ன
சோதனைக் கூடமா
அப்படியெனில் நாங்கெல்லாம்
அடிமைக் கூட்டமா
நல்லதையே படைத்துவிடு
தீயதையெல்லாம் அழித்து விடு
முழு உயிர்களையும் அறிவாக்கு
இல்லையேல் அடி மூடராக்கு
குறைகுடம் கூத்தாடியே
குழப்பங்களை தெளிவாச்
சொல்லும் கேள்விகளைத்
தொடுக்கிறேன் விடைகான
ஏன் உதித்தோம் ?
ஏன் களித்தோம்?
ஏன் துடித்தோம்?
ஏன் சபித்தோம்?
ஏன் தோற்றோம்?
ஏன்
வேர்வை துளைகளே
வேர்த்துப் போயின
இரத்தம் அனைத்தும்
நீர்த்துப் போயின- அவன்
கையின் சூட்டிலே
கனலாகின்றது கடப்பாரை
நிலத்தடி மின்சார குழிகளைத் தோண்டி நிம்மதியை புதைக்கிறான்
நகரங்களின் சாலையோரம்
நரகமாக நகர்கிறது அவன் வாழ்கை
ஆட்டமும் பாட்டமும் கிடையாது -அனுகனமும்
அவன் கூட்டம் நினைப்பின்றி கிடையாது
அவர்கள் வந்த வழியும் நொந்த கதைகளுமே
வரலாற்றின் வாசற்படியைச் சென்றிருக்கும்
இதோ இறந்த உண்மைகளும்
இறக்காத நினைவுகளும்
.
.
.
.
அது
செழுமையின் செவ்விடம்
பன்னிரண்டு மாதமும்
பாலோடும் தேனாறு
ஆற்றினை அனைத்ததோர் ஊர்
எங்கள் ஊர்
வண்டலும் கரிசலும் கலந்ததோர் மண்
எங்கள் மண
நிலையாக ஏதும் இருப்பதில்லை
நிலைப்பது ஏதும் பிழைப்பதில்லை
நிலை மாற்றமே வாழ்வின்
புது வழி மாற்றம்
நில மாற்றமே புவியின்
புல நிலை மாற்றம்
அது மாற்றம்
அஃதில்லை
இது மாற்றம்
என்றெல்லாம் மாற்றம்
மாறுவதில்லை மாறாமல்
மாற்றுவதில்லை
-கோராத
மெதுவாய் சுழன்றது பூமி
சட்டென சுழல் காற்று
விழுந்தன மரங்கள்
பீய்ந்தது ஓலை
கூவத்தில்
கூரை
தூரத்தில்
குழந்தையின் குரல்
நஞ்சுண்ட பயம்-தன்
நெஞ்சுண்டது
கோரமாக்கும் புயலுக்குத் தெரியுமா
வருமையின் கோரம்
"வறுமைக்குக் காரணம் நீ
வாழ உனக்கு தெரியல"-என்ற
வசை ஓசைகள் காதில்
இசை பாடியது
வசைக்கும் இசைக்கும்
வித்தியாசம் தெரியாது-ஆம்
எருமையின் வண்ணம் மட்டும்
எங்களுது அல்ல
எருமையின் குணமும்
எங்களது தான்
ஆம் மீண்டும்
கூவத்தில் தான் கூரையிடுவோம்
ஏஜமானுக்கு அடிமையின்னு
அடிமனசுல பதியவச்சு
தலைமுறை கடந்து எங்க
வாயிலே சொல்ல வெச்சு
சந்திப்பின்போது வணக்கம் கூறுவதா?
வாழ்த்துக்கள் கூறுவதா?
எது தமிழர் பண்பாடு?
நடு இரவில் உன்னை நடக்கச் சொல்வார் சிலர்
நகரும் உன்னை சிதைத்துச் செல்வார் சிலர்
நாடு மிக மோசமடி-அது
நியாயப்படுத்தி தினம் பேசுமடி
சில காதலும் பல காமமும்-தினம்
கடந்து நீ நடந்தாலும்
"பாத்து நீ நடக்கனும்மா
மானம் உனக்கு பெருசும்மா"-என
வக்கனை வழக்குகள் பல
வழிமறிக்கும்.
வாழ்க்கை பாதையில் -தினம்
உனக்கு சறுக்கம்
கலங்காதே கண்ணே -உனக்கான
காலம் வரும் பின்னே
அதுவர
ஓய்ந்திடாமல் நடக்க வேணும்
தளர்ந்திடாத திடம் வேணும்
வெடித்த அடுப்பும்
எரித்த நெருப்பும்
பதில் சொல்லும் காத்திரு...
- கோராத
வா தங்கை வா
இதோ வானம்
இதுவே பூமி
அதோ நிலவு
அதுவே நட்சத்திரம்
இவையெல்லாம் அண்டமாம்
இரவும் பகலும் இதில் அடக்கமாம்
வாழ்க்கைக்கு இவைசொல்லும் பாடம்
இருண்டால் விடியும் விடிந்தால் இருளும்
பயம் வேண்டாம்
என்னுடன் நடந்துவா
வாழ்க்கையை கடந்து வா
வா தங்கையே வா...
கோராத...