iman - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  iman
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  12-Nov-2022
பார்த்தவர்கள்:  13
புள்ளி:  0

என் படைப்புகள்
iman செய்திகள்
iman - எண்ணம் (public)
12-Nov-2022 10:43 pm

யாரோவாக அறிமுகமாகி, 
யாவரையும் பின் தள்ளி, 
யாதுமாகி நிலைத்து விட்டாய் என்னில்...! 
அன்பால் ஆயுள் கைதி ஆக்கிவிட்டாய் உன்னில்..!!!
காலையில் கதிரவனாகவும், மாலையில் தென்றலாகவும்,
 பகலில் நிழலாகவும், 
இரவில் நிலவாகவும், 
கோடையில் மழையாகவும், 
குளிரில் தணலாகவும், 
காற்றில் மொழியாகவும், 
கவிதையில் வரியாகவும்
காத்திருக்கிறேன் 
உன் கண் அசைவிற்காக 😉😉
                   காதலுடன்
            உன்னை விரும்பி💙

மேலும்

iman - எண்ணம் (public)
12-Nov-2022 10:42 pm

எதைப் பார்த்தாலும் உன்னைப் போலவே தெரியும் என் காதல் பிழை நீ...!🤔

எட்டி நின்று நீ பார்க்கும் போதெல்லாம் கிட்டவந்து கொஞ்ச சொல்கிறது உன் அழகு..🥰

விழுந்தால் மீள முடியாது என்று தெரிந்தும், உன் கன்னக்குழியில் விழ காத்திருக்கிறது என் காய்ந்த இதழ்கள்..😘

கொடுக்கத் தவறிய முத்தம் ஒன்று, கூட்டி கொண்டு இருக்கிறது தனது வட்டி கணக்கை..!😜
ஆம் அபி...!

தொல்லையாக இருக்கிறது, தொல்லை செய்யாமல் நீ தொலைவில் இருப்பது..!😌

தேவதைகள் பூமியில் வாழ்வதில்லை என்று சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது! பிரம்மன் உன்னை படைத்த பின்பு..!🧚

உன்னுடன் வாழ்ந்தால், என் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதல்ல என் காதல்! 
உன்னுடன் மட்டும் தான் என் வாழ்க்கை என்பதே என் காதல்!❤️

                         இப்படிக்கு
                  உனக்கானவன்😁

மேலும்

iman - எண்ணம் (public)
12-Nov-2022 10:39 pm

உன் கண்கள் எண்ணும் சிறையில் மாட்டி கொண்டேன்...!
தவறு செய்தால் தண்டித்து விடு,
மன்னித்து விடுதலை மட்டும் செய்து விடாதே 🤗

மேலும்

iman - எண்ணம் (public)
12-Nov-2022 10:39 pm

உன் அன்பிற்கு அடிமையான எனக்கு ஏது,
சுதந்திர தினம்???🤦‍♂️

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே