பிரபாகரன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : பிரபாகரன் |
இடம் | : தேவூர் |
பிறந்த தேதி | : 25-Nov-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 17-Sep-2017 |
பார்த்தவர்கள் | : 58 |
புள்ளி | : 4 |
ஆசிரியர்
சுட்டெரிக்கும் தேகத்தில்
சுடுகாட்டு சாம்பல்
'மனித உடல்'
இருபத்தோராம் நூற்றாண்டு இது
நாடு முன்னேறுவது எப்போது?
வருடங்களை கழித்து வருகிறோம்
விடியவில்லை வாடி இருக்கிறோம்....
ஊழலுக்கு கொடுத்தோம்
முக்கியத்துவம்
நம் நாட்டிற்கு இன்றில்லை
'உத்திரவாதம்'
கொள்ளு, புண்ணாக்கில் ஊழல்
காணில் இன்றில்லை நல் வாழ்தல்,
கந்து வட்டிக்கு பணம்
மனிதன் புறப்படுகிறான் பயணம்....
உணவுக்கு பஞ்சமில்லை அன்று
தற்கொலைக்கு பஞ்சமில்லை இன்று....
வெடி குண்டு மிரட்டுது
மக்களை....
தீவிரவாதம் ஆள்கிறது
மனிதனை....
மூட மனிதா!
உலகை நினைத்து
வாழ்ந்து பார்,
உலகம்,
உன் கையில் பார்.....
மழைத்தூரலில் நனைந்த உன்னை
என் மனக்குடையில்,
நிறுத்தி வைத்தேன்....
நீ நின்ற மாடியில்
நனைந்த உன் துப்பட்டாவை,
என் மனக்கண்ணில்
நிறுத்தி வைத்தேன்....
தூரல் பட்டு நனைந்ததோ,
என் இதயம்.....
இல்லை சாரல் பட்டு
சரிந்ததோ உன் பிம்பம்...
காரணம் கேட்டேன்
மழையிடம்
மழை என்னை நனை என்றது....
நனைந்து உனை பார்க்க,
ஆசை தான்!
பார்த்தால் வரும்
என் மனதில்
'காதல் தான்'
குடகு மலையில்
குதித்து வரும்
காவிரியாய்....
என் மனதை
மாற்றினாய்,
ஒரு மாதிரியாய்....
முல்லை கூட
தோற்றுவிடுமடி
உன் பற்கள் தரும்
சிரிப்பில்.....
சிந்திக்க மறந்துவிட்டேன்,
சிந்தனையில்,
உன்னை வைத்தேன்....
காலமெல்லாம் மறைகிறது
உன்னை பார்ப்பதில்....
மனதை கொடுத்துவிட்டேன்
தவிக்கிறேன் உன்னில்......
நீ தருவாயா?
மறுமலர்ச்சி என்னில்!!!!!
என்ன தவம் செய்தோம்
மானிடராய் பிறக்க !
அதில் எவர் விடம் வைத்தார்?
மானிடரை கெடுக்க....
ஆள்பவன் அரசன்
வீழ்பவன் ஆண்டி,
ஆண்டி அரசனாகிறான்
தீய வழியில்...
அரசன் நொண்டியாகிறான்
வரும் வழியில்
'என்னடா பாரதம் '
ஏளனம் செய்வோர் பலர்...
இது என் பாரதம்
தோளை நிமிர்த்துவோர் சிலர்......
எறும்பு அமைக்கிறது புற்று
பிற உயிர்களுக்கு,
மனது நினைக்கிறதா?
உன் பாரதம் உனக்கு....
காரணம் சுய வெறி
நீக்கிடு நிற வெறி
வாழ்வோம் நன்னெறி
உயரும் நம் நாடு நல்லரசாகி.....