யாசிகன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : யாசிகன் |
இடம் | : madurai |
பிறந்த தேதி | : 15-Aug-1990 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Mar-2011 |
பார்த்தவர்கள் | : 199 |
புள்ளி | : 39 |
காதலை காதலிக்கும் காதலன்....
அந்தி வெயிலின் அனேக கோரங்கள் திங்களின் ஆளுமையில் அடங்கிப்போக, ஏகாந்த மாலையின் குளிர்வேகக் காற்றோடு கையில் ஏந்திய தேனீரின் சூடேரிய சுவையுடன் நிலவொளியில் மொட்டை மாடிக் குளியல் இசையானவளின் நெருக்கத்தில்...!

விடியாத இரவுகளில் மடிதந்த மயக்கம்,
காதல் சண்டையின் வலியில்லா ஆயுதம்,
வலிவிழி கண்ணீரின் ஆறுதல் தாய்மடி,
காதல் மயக்கத்தில் கற்பனை காதலி,
இளமைத் தனிமையின் அரவணைப்பு,
எந்தன் வேகங்கள் தலையணை உன்னோடு...!
விடியாத இரவுகளில் மடிதந்த மயக்கம்,
காதல் சண்டையின் வலியில்லா ஆயுதம்,
வலிவிழி கண்ணீரின் ஆறுதல் தாய்மடி,
காதல் மயக்கத்தில் கற்பனை காதலி,
இளமைத் தனிமையின் அரவணைப்பு,
எந்தன் வேகங்கள் தலையணை உன்னோடு...!
பிறைநிலா நெற்றி வகிட்டின் குடிகொண்ட துளிவட்டம் அரசியல் சித்தாந்தத்தின் ஒய்யார அளவியாகி செந்நிறப் பொட்டில் பெண்மையின் ரௌத்திரம் பழக்கி கருமை நிறப்பொட்டில் ஆணின் முதல் காதலாய் பெண்ணழகின் ராட்சசப் பேரழகி...!

பிஞ்சுக் கைகளில் ஓசையின்றி வண்ணமெருகேற்றி வருடங்கள் உருண்டோட பிரதிபலிக்கா கண்ணாடி சினுங்களாய் வளரந்தெளுந்து எளிய வலை காப்புகளில் நவநாகரீகம் பெண்ணியம் பேசிட பொன்னிறத் தங்கச் சிதறல்கள் வசீகரப்பெண்மை படைத்தது இங்கே....!
நொடிநொடியாய் நடுநிசியை கடத்திட
தனிமையின் மூர்க்கத்திற்கு இரையாகி
இளமை தள்ளாட்டத்தை தாரைவார்த்து
நினைவில் கலந்த கனவை நிகழாக்கிட
உறக்கம் கண்கொள்ளா இன்னொரு இரவு
வெறித்த வெய்யிலை நொடிமாறி சில்லிட்ட மேகத்துளி ஊடல்கொள்ள தரைதட்டி கிளர்ந்தெழுந்த வாசம் ஈர்த்தது எந்தன் ஜன்னல் நோக்கிய காதலை...
அனல் கக்கும் சூடேரிய அடர்காற்றின் வேகம் உடலின் வெப்பத்தை விழி வழி சிந்தும் மயக்கத்தில் எனக்கானவளை மெல்லிசையின் ஓட்டத்தில் மனத்திறை ஓவியக் குவியலாய் இமைக்கிறேன்...