sathya suresh - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  sathya suresh
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  30-May-2016
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  7

என் படைப்புகள்
sathya suresh செய்திகள்
sathya suresh - ரசீன் இக்பால் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
16-Dec-2016 10:08 pm

படித்ததில் பிடித்தது...

*சிந்தனைக்காக சில குறிப்புகள்.*

->பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள்,
செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.

->சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.

-> நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை.அதற்கு என் நிழலே போதும்!

-> நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!

->நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.

-> நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்

குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!

-> வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.

->சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.

->முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.

->ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.

-> எல்லோரையும் நேசிப்பது சிரமம்.ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.

-> நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்

-> காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.

->இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்.

->யார் சொல்வது சரி என்பதல்ல,எது சரி என்பதே முக்கியம்.

->ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.

-> பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.

->நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.

->உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.

-> உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

->வாழ்வதும் வாழவிடுவதும்
நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.

->தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்

->உலகம் ஒரு நாடக மேடை அதில் நான் ஒரு நடிகன் நீ ஒரு நடிகன்.

-> செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் .
அப்போது தான் முன்னேற முடியும்.

->அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.

->வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்...
-> தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.

-> பிறர் நம்மைச் சமாதானப் படுத்த வேண்டும்என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

-> கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.

->ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.

-> சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.

-> ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.

*சிந்தியுங்கள்... செயல்படுங்கள்...*

*படியுங்கள்... பகிருங்கள்...*

மேலும்

நன்றி தோழரே! 28-Dec-2016 2:28 pm
புரிந்து கொண்டு புரிய வைக்க முயற்சித்தமைக்கு வாழ்த்துக்கள். 28-Dec-2016 1:12 pm
மிக்க நன்றி 24-Dec-2016 10:48 am
மிகச்சிறப்பு - மு.ரா. 24-Dec-2016 3:29 am
sathya suresh - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2016 10:52 pm

இரத்த பந்தம் ஏதும்
இல்லாமல் வரும் உறவு
நட்பு என்றால்
இரத்த பந்தம்
அனைத்தையும் விட்டு வந்த
உறவு மனைவி.

மேலும்

யதார்த்தம்..நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 15-Dec-2016 11:02 am
sathya suresh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2016 11:00 pm

மனதுக்கு வெளியில் இருப்பவர்கள்
கொடுக்கும் வலியை விட
மனதுக்கு உள்ளே இருந்து
கொண்டே கொடுப்பவர்கள்
வலி தாங்கமுடியவில்லை

மேலும்

உண்மைதான் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 7:34 am
மனசுக்குள்ளே நீங்களும் உண்டு - அதை மறவாதீர்கள் அதுதான் நன்று - எந்த வலிக்கும் நிவாரணம் என்பது உண்டு - அது வளர்கின்ற அனுபவம் என கற்பதே நன்று....!!! ஆசைப் படுகிறோம் அதனால் வலி - நமை அது அடைய வைக்குதே ஐயோ கிலி ஆக வேண்டாம் அதற்குப் பலி - நட்பே ஆனந்தம் அடையுங்கள் அது ஒன்றே வழி.....!! ( என்னால் முடிந்த வலிக்கு மருந்து - இந்த வரி ) 05-Jun-2016 11:39 pm
sathya suresh - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2016 10:57 pm

உடைந்த கண்ணாடியை(மனது )
ஒட்டவைக்க முயற்சி செய்தேன்..
மீண்டும் கல் பட்டு
நொறுங்கிவிட்டது..
நொறுங்கிய கண்ணாடியை
என்ன செய்வது..

மேலும்

மீண்டும் நினைவுகளின் காலத்தால் ஒட்டிக் கொள்ளும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 7:48 am
sathya suresh - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Jun-2016 1:18 pm

பெண் பார்க்க வந்தவர்கள்
முன்பெல்லாம் என்னை
பொம்மையாய் நிற்க செய்தால்
எனக்கு உயிர் கொடுத்த
என் அன்னையே..
நகை பேசி சம்மதிதவுடன் சொல்
வந்து நகைத்து விட்டு போகிறேன்.
மீண்டும் ஒருவர்முன்
புடவை கட்டி புன்னகை
செய்ய சொல்லிடாதே
புழுவாய் துடிக்கிறது மனம்.

மேலும்

பல பெண்களின் மனநிலையை வெளிப்படுத்தும் வலிகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 04-Jun-2016 6:21 am
நல்ல முயற்சி !! தொடர்ந்து எழுதவும் !! 03-Jun-2016 3:20 pm
sathya suresh - sathya suresh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2016 7:23 pm

என்னவனே
தினமும்
ஒரு முறையாவது
உன் கெஞ்சலும், கொஞ்சலும்
இருந்தால் போதும்
என் காதல் நீண்டு வாழும்.

மேலும்

அப்படி தானே காதல் நடக்கிறது. வாழ்த்துக்கள் .... 03-Jun-2016 8:07 am
மேலும்...
கருத்துகள்

மேலே