கல்கி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கல்கி |
இடம் | : தமிழ்நாடு |
பிறந்த தேதி | : 05-Dec-1990 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 23-Mar-2014 |
பார்த்தவர்கள் | : 330 |
புள்ளி | : 5 |
சிறகுகளை வளர்த்துக்கொண்டிருக்கும் ஒரு சுதந்திர பறவை.
(சிறிய மனக்கசப்பில் கணவனும் மனைவியும் )
கணவன் : மனைவியை பார்த்து , சாப்பாட்டிற்கு ஆம்பிலைட் எதற்கு , முட்டையை அவித்து வைக்க வேண்டியதுதானே என்றார் !
maniavi : இரண்டாம் நாள் சாப்பாட்டுக்கு முட்டையை அவித்துவைத்திருந்தார் !
கணவன் : சாப்பிடும்போது முட்டையை எதுக்கு அவித்து வைத்திருக்கிறாய் , ஆம்பிலட் செய்திருக்க வேண்டியதுதானே என்று கடிந்து கொண்டார்!
மனைவி : மூன்றாம் நாள் ஒரு முட்டையை அவித்தும் , ஒரு முட்டையை ஆம்பிலைட் செய்தும் , இன்று கணவனிடம் தப்பித்து விடலாம் என்று மகிழ்ந்தார் !
கணவன்: கணவன் சாப்பிடும்போது , ஏன் இப்படி செய்து வைத்தாய் ,
ஆம்பிலைட
அன்பனே..
உன் ஆய்வுத்தேகமாம்
என் உடலாம்...!
இதயக்குடுவையில்
அமுத வினையில் நீ
நிரம்பி ததும்பி
என் முகத்தில்
வெட்கமாய் வழிகிறாய்
சோதனை கூடத்து
அமில குப்பியில்
வேதி வினையால்
நிரப்பி எழும்பும்
நுரையைப்போலவே...
இரத்த அழுத்தத்தை மருந்தால்
சீர்செய்து விடலாம் ..!
ஆனால் என்மன அழுத்தத்தை
உன் முத்தத்தால் மட்டுமே
சரி செய்யமுடியும் !
எப்போதெல்லாம் கருமை
அச்சுறுத்துகிறதோ...
அப்போதெல்லாம்
என்னிரவுகளுக்கு
வெண்மை பூசிக்கொள்கிறேன்.....!
எதையும் மறைக்காத
கணவன் தன் காதலியை
வர்ணிக்கும் போதெல்லாம்
பொய் புன்னகைக்கு
உயிர் கொடுத்து
மெய்க்கண்ணீரை
பொய்யாக மரிக்கச்செய்கிறேன்..........!
இறந்த கால நிழலொன்று
நிகழ்கால நிஜம் வீழ்த்தி
எதிர்காலம் சிதைத்ததை
அறிந்தவளாய் மௌனம் காக்கிறது
என் படுக்கையறை சுவர்கள்.......!
விதியென என்மீது
நீ காட்டும் தங்கமுலாம் பூசிய
கரிசணங்கள் சற்றே ஆறுதலானாலும்
ஒரு ஓரத்தில் வலிக்காமலில்லை......!
யாரோவாகிப்போன நான்
என்னவனின் அவனவளை
யாரோவென நினைக்கவில்லை......!
பொம்மை தொலைத
வடகிழக்கு திசையிலிருந்து
கூச்சப்பட்டு வந்த தென்றல்காரன் -அந்த
கூந்தல்காரியை மிருதுவாய் இடிக்க
பரதநாட்டியமிட்ட அவள் கேசம்
வசீகரமான என் முகமேடையில்
தொட்டு தொட்டு தீண்ட
தூண்டியது என்னுள் மோகமுள் !
குதிரை வால் முடிக்காரியே..!
மல்லிகைப்பூ வாசக்காரியே..!
மயக்குத்தடியே...! உன்
கூந்தல் இரண்டு அடியே..! என்
காதல் கண்டு காதலியே..!
---------------------------------------------
கூந்தல் கண்டு
காதல் கொண்டேன்.
வடகிழக்கு திசையிலிருந்து
கூச்சப்பட்டு வந்த தென்றல்காரன் -அந்த
கூந்தல்காரியை மிருதுவாய் இடிக்க
பரதநாட்டியமிட்ட அவள் கேசம்
வசீகரமான என் முகமேடையில்
தொட்டு தொட்டு தீண்ட
தூண்டியது என்னுள் மோகமுள் !
குதிரை வால் முடிக்காரியே..!
மல்லிகைப்பூ வாசக்காரியே..!
மயக்குத்தடியே...! உன்
கூந்தல் இரண்டு அடியே..! என்
காதல் கண்டு காதலியே..!
---------------------------------------------
கூந்தல் கண்டு
காதல் கொண்டேன்.
நதி ஓடும்
கரையோரம்
கவி எழுத
தவித்திருந்தேன்..!
தாகம் தீர
தண்ணீர் அருந்திய
மான் கண்டேன்.
சோகம் மறைய
கூவும் குயில்
பாடல் கேட்டேன்.
சருகுகளின்
சலசல சத்தத்தில்
நயம் அறிந்தேன்.
மனம் முழுவதும்
ரசிப்புகள் தீண்டியது
என்ன எழுதுவது
என்று சிந்தையின்றி
வெறும் தாளை
நதி நீரில்
கசக்கி எறிந்தேன்.
வெறுமையில்
வெறுங்கையோடு
கண் முழித்தேன்.
கல்லூரி வகுப்பறையில்
கல்கி நான்
கனவிலிருந்து மீண்டேன்.
கவிதை எழுதுவது எப்படி?
இப்படித்தானோ?
பகல் கனவுதானோ?
சொற்களை கூட்டி
வரிகளை மடக்கி
நீட்டி அமுக்கினால்
கவிதை ஆகிவிடுமோ?