மு. மேத்தா குறிப்பு

(M.metha)

 ()
பெயர் : மு. மேத்தா
ஆங்கிலம் : M.Metha
பாலினம் : ஆண்
பிறப்பு : 1945-09-05
இடம் : பெரியகுளம்


உவமை உருவகங்களில் பழமையையும் புதுமையையும் இணைத்த மு.மேத்தா, வளமான கற்பனை, எளிய நடை, எளிய சொல்லாட்சி, மனித உணர்வுகளின் படப்பிடிப்புகளால் மக்கள் உள்ளத்தைக் கவர்ந்தவர். இவரைப் பின்பற்றி இளைஞர்கள் பலர் கவிதை எழுத ஆர்வம் கொண்டனர்.


காதல் சோகமும், தமிழ்த் தாகமும் இழையோடும் அவரது கவிதைகள் அவ்வப்போது கூர்மையான சமூக விமர்சனங்களிலும் இறங்குவதுண்டு. சமூக விமர்சனத் தொனியில் அமைந்த "தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி" என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.


"நான் வெட்ட வெட்டத் தழைப்பேன்

இறப்பினில் கண் விழிப்பேன்

மரங்களில் நான் ஏழை

எனக்கு வைத்த பெயர் வாழை"


போன்ற வரிகள் இவர் போக்கினைக் காட்டும்.
மு. மேத்தா கவிதைகள்
தமிழ் கவிஞர்கள்

பிரபல கவிஞர்கள்

மேலே