எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

துயரங்களைத்
துடைத்தெறிய
மெல்லிய காற்று
போதும் நட.

‪#‎சர்‬ நா

மேலும்

மெல்லிய காற்றென்பது உயிருக்குச் சமமானது எல்லாவற்றையும் கடக்கும் வல்லமையை அது தொடர்ந்து தந்து கொண்டே இருக்கிறது... எதையும் உணர்ந்து கொள்வதிலேயே தற்கால மனிதன் குழம்பிப் போயிருக்கிறான்...... மிக்க நன்றி நண்பா...... 12-Jun-2015 12:23 pm
மிக அருமை சர்நா தளத்துக்கு அடிக்கடி வராத இடைவளிகளை நிரப்பி விட்டீர்கள் இந்த மூன்றே வரிகளால் .... 11-Jun-2015 6:24 pm
மிக்க நன்றி அய்யா..... 11-Jun-2015 12:51 pm
நன்றி நட்பே.... 11-Jun-2015 12:51 pm

ஒரு மெல்லிய துகளாகிப்பின்
பெரு வெடிப்பின் மொழியானவன்
கவிஞன்....

‪#‎சர்‬ நா

மேலும்

தேடலின் பொழுதுகளை
முடக்கிப் பறந்து
மன்னிக்காத வேகமெடுக்கும்
சுகப்படாத சொற்களுக்கிடையில்
கொத்தித் தின்று ஆசுவாசப்படும்
ஊமைப் பார்வைகளிலிருந்து
அணையாதிருக்க
யதார்த்தமாய்த் தவறுகளையோ
தடுமாறல்களையோ
பாரபட்சமின்றி சேமிக்கின்ற
கேமராக் கண்கள்
இனி எதையும் விட்டு
வைப்பதாயில்லை.

‪#‎சர்‬ நா

மேலும்

மிக்க நன்றி தோழரே............. இணைத்து விட்டேன் கவிதைப் பகுதியில்.......... 21-May-2015 7:51 pm
என்ன தோழரே இப்படி அசத்துறீங்களே... இதை கவிதை பகுதியிலேயே சேர்க்கலாமே... அருமை... வழ்த்துக்கள் தொடருங்கள்... 21-May-2015 6:03 pm

தோல்விகளில் அழிவுகளாகவும்
வெற்றிகளில் கழிவுகளாகவும்
போட்டிகளில் விதிகளாகவும்
பொறாமைகளில் சதிகளாகவும்
அலங்கரிப்புகளில் வித்தைகளாகவும்
ஆற்றாமைகளில் சொத்தைகளாகவும்
விழிபிதுங்க வழியடைக்கின்றன
ஒப்பீடுகள்....
மொத்தத்திலும் மெருகேறிப்
பறக்கின்றன உருமாறும்
மதிப்பீடுகள்...

-சர் நா

மேலும்

"வெறுமையைப் பொறு"

"வள்ளுவம் புழங்கு"

"எதையும் கட"

"இடைவெளி அளி"

"எப்போதாவது அழு"

"அவ்வப்போது பற"

"அமையும் உழை"

"போகட்டும் எழு"


--சர் நா.......

இணைய உலகிலும் இயல்பு உலகிலும் தடையின்றி பயணிக்க உதவும் தத்துவங்கள்............
வாழ்த்துகள்........

மேலும்

உங்கள் உந்துதலில் மகிழ்ச்சி....... முயல்கிறேன் சார்......... 05-May-2015 11:04 am
நன்றி தோழரே..... 05-May-2015 11:03 am
நன்றி தோழரே..... 05-May-2015 11:03 am
இன்றைய கால கட்டத்திற்கு ஏற்ற " நவீன ஆத்திச் சூடி" இயற்ற உங்களால் முடியும்..முயற்சி செய்யுங்கள் சர்நா..உங்களால் முடியும் ..பொறுமையாக செதுக்குங்கள்! 05-May-2015 8:38 am

http://talkandcomment.com/p/1430746989-100004207398224

இதை கேட்க முடிகிறதா என்று சொல்லுங்கள் தோழமைகளே.........
http://eluthu.com/kavithai/243774.html -முயற்சி......

மேலும்

மகிழ்ச்சி..........மிக்க நன்றிங்க............ 06-May-2015 7:44 am
கேட்டேன் .........கவிதையும் கணீர் என்ற குரலும் மிகவும் அழகு தோழரே ............ 05-May-2015 12:28 pm
thank you sir ..... 05-May-2015 11:16 am
கேட்டேன். Short and sweet! 05-May-2015 8:40 am

எல்லாப் படங்களும் மகத்தான
வெற்றி பெறுகின்றன
ட்ரைலர்களில்

எல்லாப் பொருட்களும் தரத்தோடு
கிடைக்கின்றன
விளம்பரங்களில்

எல்லாப் பாசங்களும் வாழ்வாகி
நனைக்கின்றன
டிவி நிகழ்ச்சிகளில்

எல்லாப் படைப்புகளும் தர்மத்தை
இறுதியாய் காக்கின்றன
எழுத்துகளில்

-சர் நா

மேலும்

என்ன சொல்றது சார் இவர்களை...... அதான் இப்படியாச்சும் சொல்லுவோம்னு.......... 05-May-2015 7:39 am
இவை யாவும் நம்மை ஒரு வல்லரசாகக் காண்பிக்குமோ என்னவோ ..வெளிநாட்டினர் பார்வையில்..வித்தியாசமான சிந்தனை சர்நாவின் பார்வையில்..! 04-May-2015 10:39 pm
ஹஹஹா....அது செம காமடிங்க அய்யா............. 04-May-2015 6:54 pm
நன்றிங்க........ 04-May-2015 6:51 pm

நம்ம சூழ்நிலைகள்ல ஆயிரம் விசயங்களிருந்தாக்கூட,
நாம என்ன சிந்திக்கறமோ அதை நோக்கியே புரிஞ்சுக்க வைத்திடுது காலம்.....

-சர் நா ....

மேலும்

இன்றைய குடும்பச் சூழ்நிலைகளில் பெரியவர்களின் பிரச்சனைக்குள் சிறியவர்கள் நுழையாதவரை உறவுகளைத் தொடர்வதில் பெரிய சிக்கல்கள் ஏதும் இருப்பதில்லை.

-சர் நா

மேலும்

யாவருக்கும் காலை வணக்கம் ..................

மேலும்

மேலும்...

மேலே