எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அங்கும் இங்குமாய் அலைந்து திரிந்து ஒருவழியாய் ஏற்பாடு  தேவதைகளின் திருவிழா உன் பிறந்தநாளென...🎉

நீ திண்டாட..  
நான் கொண்டாட..
என்ன வழியுண்டு,👣

ஆவாரம் பூவெடுத்து,
அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து,
உன்னழகில் பாதியாய் 
ஒரு பூங்கொத்து...💐

அன்பை அள்ளித்தர ஆயிரம் முறையுண்டு, 
முறைகளில் முதலென்பதால் முரணின்றி முத்தமொன்று... ஆழமாய்,💋
 
கொல்லமுடியா தூரமென தொலைவாய், 
தூரமாய்... நீ

குமுறலுடன் குறுந்தகவலே முடிவென்றாதானதால் 
பிறந்தநாள் பரிசென ஓர் கவிதை உனக்காய்...🎁🎁

மேலும்

நன்றி தோழமையே 12-Dec-2015 1:50 pm
ஆழமான புரிதலோடு அழகாய் கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா 12-Dec-2015 1:49 pm
காதல் சொல்லோடை இனிமை . ஆவாரம் பூவெடுத்து, அல்லி பூ தொடுத்து, பச்சையம் தொலைந்த பதினாறு பூ பறித்து, உன்னழகில் பாதியாய் ஒரு பூங்கொத்து...💐 ----இத்தனையும் செய்து" உன்னழகில் பாதியாய்.ஒரு பூங்கொத்து ..."என்கிற ஒப்பிடல் அழகு. பாதி மலர் விழிகள் மீதி மலர் புன்னகை முழு மலர் அவள் ! வாழ்த்துக்கள். அமுதன் பரிமளன் செல்வன் அன்புடன்,கவின் சாரலன் 12-Dec-2015 10:21 am
துள்ளல் இனிமை 12-Dec-2015 6:50 am

பணம்
வெறும் காகிதம் தான்
கையில் கிடைத்தால்
கசக்கி கிழித்தெறியும்
குழந்தைக்கு மட்டும்.

மேலும்

மிக்க நன்றி .. 10-May-2014 10:27 pm
கருத்திற்கு நன்றி தோழமையே .. 10-May-2014 10:27 pm
கருத்திற்கு நன்றி நண்பா 10-May-2014 10:26 pm
ஆஹா ..அருமை 10-May-2014 1:32 pm

மேலே