எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

1.படித்ததில் பிடித்தது..!
-----------------------------------
செஞ்சாந்தின் பின்னணி-யாழ்மொழி
----------------------------------------------------------
மூர்க்கத்தன ஆண்மையால்
முடக்கப்பட்ட பெண் சுதந்தரம் ..
ஆடை அலங்காரப் பேச்சால்
அலங்கரிகப்படுவது ஏனோ ?

துகிலுரியப்பட்ட பாஞ்சாலிகள்
சேலை கட்டியச் செய்திகளை
திரைக்குப் பின்னே மறைத்து
வைத்தது ஏனோ ?

கைம்மையான கன்ணகிகளின்
சேலையை விலக்கத் துடிக்கும்
செஞ்சாந்தின் பின்னணி விமர்சிக்கப்
படுவதில்லை ஏனோ ?

மழலையையும் மாய்த்துவிட்டு
மன்னன் வேடம் போடுகின்ற
கயவர்களின் மத்தியில் -நவீன
ஆடையில் மட்டும் கலாச்சாரத்தை
தேடுவது ஏனோ (...)

மேலும்

நன்றிகள் சகோதரி ஆனத ஸ்ரீ .... 27-Mar-2015 3:35 pm

2.படித்ததில் பிடித்தது..
----------------------------------
தேர்வுக்கு வேண்டும் ஒரு தேர்வு
-------------- -------------- ------------------

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள விஜய் வித்யாலயா பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர்கள் வாட்ஸ் அப் மூலம் வினாத்தாளை தாங்கள் பணி யாற்றும் பள்ளிக்கு அனுப்பியது தமிழகத்தில் பெரும் சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.வாட்ஸ் அப் மூலம் வினாத்தாள் அனுப்பப் பட்ட பிளஸ் 2 கணிதத் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மாணவி ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் இந்த தேர்வை ஏன் மீண்டும் (...)

மேலும்

தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி..! 31-Mar-2015 12:15 pm
நல்ல கருத்து மிக்க நன்றி..! 31-Mar-2015 12:15 pm
இதனை பற்றிய விழிப்புணர்வுகள், முதலில் அனைத்து பெற்றோர்களிடமும் ஏற்படவேண்டும்... 27-Mar-2015 5:47 pm
அடிப்படையிலே கல்வி கற்கும் முறையிலும் தேர்வு முறையிலும் மாற்றம் வரவேண்டும். மனப்பாடம் செய்து வாந்தி எடுத்து . அதில் கிடைக்கும் மதிப்பெண்களால் திறமைகள் நிருபீக்கப்படுவது கேலிகூத்தே. அதிலும் மதிப்பெண் பெற மாணவர்களை எந்திரமாக பயன்படுத்தும் தனியார் கல்வி நிறுவனங்கள், சமூகத்தின் பார்வைக்காக முரட்டுத்தனமாக எப்படியும் வெல்லலாம் மனோபாவத்தில் காபி அடிக்கும் மாணவர்கள்.. இவர்களால் எதிர்கால உலகத்திற்கு என்ன பயன்.....? வினாக்கள் மட்டுமே எப்போதும் ஆக்ரோஷம் பாடும். விடைகள் மயானத்தில் உறங்கிக்கொண்டிருக்கும். 27-Mar-2015 4:08 pm

மேலே