எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நம் பிள்ளைகள் 
நம் தொருவில் விளையாட 
எவனோ இங்குவந்து தடைபோட்டன்! 
உறுதியாக ஒன்றினைந்து 
இறுதிவரை போராடி 
வென்றார்கள் அவர்கள் 
இளம் பட்டாளம்! 
அவர்களின் வாழ்வுக்கு 
அவர்களே மாற்றம் போட்டார்கள்! 
நாடாண்ட கும்பல் 
பன்னிய அட்டுழியம் 
நெருப்பாக நெஞ்சில் 
இன்னும் இருக்கிறது! 
என் தமிழா! இளைஞா! 
பித்தலாட்டம் செய்தேனும் 
நாடால துடிக்கும் 
பதவிக்கு பாய்ந்துவரும் 
நயவஞ்சக நரிக்கூட்டம்! 
தான் செழிக்க 
தமிழகம் அழிக்க 
வேலை பார்க்கும் வெறியர்களிடாமா 
நாளையும் உன் நாடும்? வீடும்? 
விட்டுவிட்டதனால்.. 
வளர்ந்துநிற்கும் விசச்செடிகள்! 
நம் அனைவரின் உழைப்பை 
தின்று கொழுக்கும் களைகள்! 
தூக்கியெறி துரோகிகளை 
விரட்டியடி வெறியர்களை 
புதியவர்கள் இளையவர்கள் 
நல்லவர்கள் நன்மைசெய்ய 
மாற்றம் அமைப்போம்! 
மாற்றம் வரவைப்போம்! 
நல்ல தமிழினம் அமைப்போம்! 
நம்மை புதிதாக வளர்ப்போம்!  

மேலும்

விழிப்புஉணர்வுப் படைப்பு பாராட்டுக்கள் 17-Mar-2017 4:39 am

இனிய மகளிர்தின நல்வாழ்த்துகள்..!!

மேலும்

தோழமைகளுக்கு, இனிய உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்..!!

அரிசிபோன்ற வெண்மனது
வெல்லமெனும் மகிழ்வோடு கலந்து
காலமெனும் வெப்பத்தால் பதமாகி
இன்பமெனும் பாலோடுசேர்ந்து பொங்கட்டும்!
இல்லங்களில் இனிமை பெருகட்டும்!
பொங்குக பொங்கல்..!!

பொங்கலோ பொங்கல்!..
பொங்கலோ பொங்கல்!..

மேலும்

வாழ்த்துக்கள் தோழரே ! 15-Jan-2015 9:21 am

புத்தம்புது பூவாக இனிய புத்தாண்டு மலர்ந்தது!
நன்மைகள் சேர்க்கவும், நல்வாழ்வு வளர்க்கவும்
அழகாய் பூத்தது! ஆனந்தம் மலர்ந்தது!
இனிய எழுத்து தோழமைகளுக்கு,
அன்பான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!!

மேலும்

இனிய நட்பின் வாழ்த்தில் மகிழ்ந்தேன்.. தங்கள் எண்ணங்கள் சிறந்து, புதிய வருடம் இன்னும் அற்புதமாகட்டும்... 01-Jan-2015 11:57 am
நன்றி தோழமையே! இனிய நல்அற்புதங்கள் தங்கள் வாழ்வில் மலரட்டும்... 01-Jan-2015 11:56 am
தங்கள் பார்வையில் மகிழ்வு தோழமையே.. 01-Jan-2015 11:55 am
வரவில் மகிழ்வு தோழமையே!.. 01-Jan-2015 11:54 am

உலக அளவில், தடை செய்யப்பட்ட மருந்துகள்...

1 . அனால்ஜின் - Paralgan-M,Novalgin,
2 . நிமிசுலைட் -Monogesic,N lid,Nam,Nelsid,Nimbus,Nimulid,Nise,Nugesic,Sumo,Zydol
3 . பினைல் ப்ரோபநோலமைன் - D-cold,Coldact,
4 . சிசாபிரைடு -Alipride,Cisapro,Santiza,Unipride
5 . பியுரசொளிடன் - Furoxone
6 . பைப்பரசின் -Piperazine citrate
7 . குயிநோடக்ளர் - Entero quinol

சில மருத்துவர்கள் எழுதிக்கொடுத்தாலும், மாற்று மருந்து எழுதசொல்லி,
நாமும், தவிர்த்து நலமாக வாழ்வோம்.

மேலும்

பயனுள்ள தகவல் நன்றி தோழமையே! 15-Dec-2014 10:33 am
உபயோகமான தகவல்...மிக்க நன்றி... 14-Dec-2014 7:13 pm
நல்ல பகிர்வு அண்ணா தங்களுக்கு நன்றிகள் . 14-Dec-2014 4:33 pm
நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி . 14-Dec-2014 4:29 pm

இனிய காலை வணக்கம் நண்பர்களே!..

வாழ்க்கை புதுப்புது செய்திகளை
சொல்லிக்கொண்டேதானிருக்கிறது!
பலநேரம், பழகிய மனிதர்களிடமிருந்தும்!
சிலநேரம், புதியவர்களிடமிருந்தும்!
பழகியவர்களிடமிருந்து, பக்குவமாக கிடைக்கிறது!
புதியவர்களிடமிருந்து, அதிரடியாய் வருகிறது!..

மேலும்

நான் நலமே .. உங்களைத்தான் என் பக்கமே காணோம் ...ஏன் 15-Dec-2014 7:21 am
உண்மைதான் ... 14-Dec-2014 8:40 pm
சரியாச் சொன்னீங்க தோழமையே! 14-Dec-2014 2:31 pm
நலமே... 14-Dec-2014 10:23 am

வெற்றி வினாயகா!
வேதங்களின் நாயகா!
விண்புகழ் வித்தகா!
வழிகாட்டும் காவலா!
வாழ்த்துகளின் ஏவலா!
வரமருள்வாய் நல்வாழ்விற்கு!..

மேலும்

மேலும்...

மேலே