எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மார்ச் -தாமரை இதழில்.....

மேலும்

வாழ்த்துக்கள் நண்பரே 02-Apr-2016 4:50 pm
மிகவும் அருமை வாழ்த்துக்கள்விஜி....!! 02-Apr-2016 2:16 pm
வாழ்த்துக்கள் ....வாழ்த்துக்கள்...தோழரே...! 02-Apr-2016 2:07 pm
வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள் ஜி...! 02-Apr-2016 1:38 pm

தாஸ்தயெவ்ஸ்கியின் ;குற்றமும் தண்டனையும்'.... படிக்கிறேன்... அது திறந்து கொண்டே போகும் கதவுகளுக்குள்... நான் இருண்மையின் நிழல் தேடி... சிறகடிக்கிறேன்..... ஒரு நேசம் பிடித்த வௌவாளாய்...... 

மேலும்

வாழ்க்கையை எழுத்தாக பார்க்க தொடங்கிய பிறகு... அது ஒரு கவிதையைப் போலவோ அல்லது  ஒரு சிறுகதையை போலவோ..சில மணித் துளிகளில் முடிந்து விடாத... வண்ணக் கனவுகளை  வானமாக்கி பொழியத் தொடங்கியது....காகிதமும்.... எழுதுகோலும்...இங்கே நினைவுகளாகிறது..... கதாபாத்திரங்களும், சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டே இருக்கும் இருத்தலைப் போலதான்... இந்த வாழ்க்கை அடுத்த நொடி விரியும் அற்புத பூந்தோட்டம்...அது நிஜங்களையும் நிழல்களையும் மாற்றி மாற்றியே வெளிப்படுத்துகிறது......அது ஒவ்வொருவருக்கும் ஒரு வெளியை வானமாக்குகிறது...வண்ணதாசனின் மழைக்குள் மாயாவுடன் நனையும் மாயம், இந்த வாழ்வின் ஆதாரம்... தேவைகளின் நுட்பத்தில் இந்த மானுடம் நீண்டு கொண்டே இருக்கும்.... அது.. தாஸ்தாவ்ஸ்கியின்  தீரா நதி.......கிப்ரானின்  பின்னிரவு கதவுகளால் நிறைந்து வழிகிறது வாழ்வின் சூட்சுமம்..புது புது புத்தக போல.. அங்கே குடைகளற்ற மழையை ஜன்னல் செய்யும் அற்புதம்.... எந்தக் கடவுளாலும் செய்ய முடியாதது.. அதை நிகழ்த்த ஒரு எழுதுபவனால் மட்டுமே முடியும்.. ஆம்.. நான் எழுதுபவன் ... ஆச்சரியங்களாலே இந்த பிறப்பு நிகழ்கிறது....கோணங்கியின் கனவைப் போல... அது ஒரு சுழல்... வந்து போகும் வாழ்க்கையில்.. பிறக்க கிடைத்த வாய்ப்பை... அதே ஆச்சரியத்தோடு... கடக்க வேண்டும் என்பதை உங்கள் விதியாக எழுதுங்கள்.... நான் என் விதியை எழுதிக் கொண்டிருக்கிறேன்... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.... தோழர்களே.... வாழ்க்கை வாழ்வதற்கே....வாழ்வது எழுதுவதற்கே....

கவிஜி  

மேலும்

சூப்பர் ஜி.. அருமையான எண்ணம். அழகான வரிகள் . அர்த்தம் நிறைந்த செய்திகள் . ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு ... சாதிப்பது என்ன.. ? மரணம் வரை காழ்ப்புணர்ச்சி ரணம் காரணம் அற்ற கரணம் தப்பும் கடுங்கோபம் . இதுதான் நடக்கிறது. எழுதுவோர் மத்தியிலும் .... . 01-Jan-2016 3:54 pm
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் கவிஜி.. 01-Jan-2016 12:41 pm
வாழ்க்கை வசந்தம் மட்டுமா..?வாழ்வின் சுவாரசியத்தை அற்புதமாக வெளிக்கொணரும் எண்ணமிது ...இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள் ... 01-Jan-2016 12:24 pm

இனியாவது நாம யோசிக்கணும்.... இனி ஓட்டுக்கு காசு வேண்டாம்..தண்ணீ தேங்காம இருக்க வழி பண்ணுங்கனு சொல்வோம்...இலவசமா ஏதும் வேண்டாம்...ஏரிகளை தூர் வாருங்கனு சொல்வோம்.....ஆள பிடிச்சு லஞ்சம் குடுத்து கவர் மெண்டு வேலை வாங்கறது இருக்கட்டும்...ஆத்துல மணல் அல்ல கூடாதுன்னு சொல்லுவோம்...அடுக்குமாடி வீடு கனவா இருக்கலாம்.. அதுக்காக ஏரி இருந்த இடத்துல எவனோ ஒரு வியாபாரி டை கட்டிக்கிட்டு சொல்றாங்கறதுக்காக மிச்சம் இருக்கற 50 வருசத்துக்கு லோன போட்டு வாங்கி சொந்த ஊர்க்காரங்ககிட்ட பீத்திக்காம இருப்போம்....மேல்தட்டும்.. நடுத்தரமும் பண்ற தப்பு... அடிமட்டத்துல இருக்கவறன் வீட்டைத்தான் முதல்ல புடுங்குது.... விதி... இங்கே விதிங்கறது செஞ்ச பிழையோட எதிர்வினை....அட இவ்ளோ நடக்குதே.. இந்த கடவுளர்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருக்கீங்க... வந்து ஏதாவது பண்ணுங்கப்பா.... உடனே... அவுங்க இருக்கவும் தான் இந்தளவுக்காவது இருக்குதுன்னு யாரும் சொல்லிடாதிங்க...லூசு மாதிரி..... 


விதைத்தது விளையும்.... அது தான் பரிணாமத்தின் சூட்சுமம்....

கவிஜி 

மேலும்

நன்றி.... 03-Dec-2015 10:11 am
நான் லூசு இல்லை. குரங்கு . ஆனா நான் கடவுள் மெயில் ஐ டி கு இத அனுபுறேன் . அவரு பதில் சொல்வாரு 02-Dec-2015 4:43 pm


யார் ரெடியா இருக்கீங்க... வாங்க...காதலின் கிறக்கத்தில் கொஞ்சம் உங்கள் சிறக்கும் தான் அடிக்கட்டுமே...

... தொடரட்டும் இன்னும் காதலின் கிறக்கம்....படரட்டும்.... ஆன்மாவின் சொர்க்கம்....

கவிஜி 

மேலும்

எஸ் ஜி..... அடுத்த பார்ட்டும் போட்டாச்சு.... 23-Nov-2015 4:53 pm
சொதப்பலே..... இப்டினா.. இன்னும் வேற மாதிரி எழுதினா.... நான் காலிடா.....அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீங்க நல்ல எழுதி இருந்த...இனியும் எழுது.... 23-Nov-2015 4:53 pm
நன்றி தோழர்.... ஏன்.... நீங்கள் எழுத வில்லையா.....! 23-Nov-2015 4:52 pm
ஹ ஹ்ஹா...... தேவதைக்கு தூக்கம் வர... எழுத வேண்டும்..... நன்றி..தோழர்.... 23-Nov-2015 4:52 pm

"தமிழன்பன் ஒரு மகாகவி"- புத்தகம் கொடுக்கும் போது....

மேலும்

நல்ல விஷயம்... வாழ்த்துக்கள் இதை முன் நின்று நடத்திய அனைவருக்கும்... 13-Nov-2015 11:28 pm

எழுத்து நிர்வாகி தோழர்... ராஜேஷ்குமார் அவர்களுக்கு பட்டயமும் சான்றிதழும் கொடுக்கும் போது...

மேலும்

திரு ராஜேஷ் குமார் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..!! 14-Nov-2015 7:13 pm
வாழ்த்துகள் ராஜேஸ்குமார்! 14-Nov-2015 2:52 pm
நல்ல விஷயம்... வாழ்த்துக்கள் இதை முன் நின்று நடத்திய அனைவருக்கும்... 13-Nov-2015 11:28 pm

எழுத்து தளம்  நிர்வாகி தோழர் ராஜேஷ்குமார் அவர்களுக்கு புத்தகம்  கொடுக்கும்ம் போது ....

மேலும்

நன்றி ஜின்னா " முன்னின்று நடத்தியோர் சார்பாய் ".!!! 14-Nov-2015 10:14 am
நல்ல விஷயம்... வாழ்த்துக்கள் இதை முன் நின்று நடத்திய அனைவருக்கும்... 13-Nov-2015 11:28 pm
எழுத்து தளத்தை அழகாக வடிவமைத்து திறமையாக நிர்வகித்து நடத்தி வரும் கவிப்பிரிய ராஜேஷ் குமாருக்கு புத்தகப் பரிசு அளிப்பது மிகவும் பாராட்டத் தக்கது . பக்கத்தை விரித்து வைத்து சொர்க்கத்தையும் திறந்துவைத்து இலக்கியத்தை எழுது எழுது என்று என்னையும் உங்களையும் நித்தம் தூண்டி இணையற்ற ஓர் இணைய தளத்தை தமிழில் சிறப்பாக நடுத்தும் ஓர் இளைய இலக்கியவாதிக்கு பரிசு தருங்கால் பாராட்டுதல் எனக்கு தலையாய கடமை அன்றோ ? பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கவிப்பிரிய ராஜேஷ் குமார் . பொருத்தமான புத்தகப் பரசு வழங்கிய இலக்கிய தோழமையினருக்கும் என் வாழ்த்துக்கள் . ----அன்புடன், கவின் சாரலன் 13-Nov-2015 8:09 pm

நேற்று நல் திறனாய்வாளர் தோழர் கோவை ஞானி அவர்களின் வெள்ளக்கிணர் இல்லத்தில் அவருக்கு காணிக்கையாக்கப்பட்ட தொலைந்து போன வானவில் நூல் அளித்து அவர் வாழ்த்து பெற்றோம்( அகன் , பொள்ளாச்சி அபி , கவிஜி, சேகுவாரா கோபி , ராஜ்குமார்)

மேலும்

மேலும்...

மேலே