எழுத்து எண்ணம்
(Eluthu Ennam)
புதிய எண்ணம்
🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼
*இசைக்கு ஒரு கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼🎻🎼
*இசை*
மன காயங்களுக்கு
ஒரு மருந்து.....!
வாடிய ஆன்மாவின் மீது
தெளிக்கப்படும் தண்ணீர்......!
தனிமையை
இனிமையாக்கும்
காதலன் காதலி......
இதில் தான் ஆன்மா
அவ்வப்போது ஊஞ்சலாடுகிறது.....
தூக்கம் வராமல்
தவிப்போரை
தன் மடியில்
தலை சாய்க்க வைத்து
தாலாட்டி
தூங்க வைக்கும்
ஒர் அன்னை.....
எல்லா பொருள்களும்
அணுக்களால் ஆக்கப்பட்டது என்று
சொன்ன அறிவியல்
ஏனோ....!
இசையினாலும்
ஆக்கப்பட்டுள்ளது என்று
சொல்ல மறுத்துவிட்டது.... !
இசை தீபத்தை
உயிரில்
ஏற்றி வைக்கப்படும் போது
அது மெழுகாய்
உருகியே (...)
#மின்னல்...க்கு ஒரு கவிதை
விண்வெளிக்கு
எந்த நடிகை சென்றாள்
இப்படி
போட்டோ எடுக்கும் ஔி
வருகிறது..?
பூங்கொடியை
பார்த்திருக்கிறேன்
பூசணிக்கொடியை
பார்த்திருக்கிறேன்
அட ....! இது என்ன
ஒளிக்கொடியோ....?
யார் வருகைக்காக
யார் வானவேடிக்கையை
இப்படி
நடத்துகின்றார்கள்.....?
தீப்பெட்டி
இருக்கும் காலத்தில்
வான்மங்கைய
எதற்கு
கார்மேக கற்களைக் கொண்டு
தீ மூட்ட முயற்சிக்கிறாள்...?
நீ கண்களை
பறித்து கொண்டு
போய் விடுவதாக
சொல்கிறார்கள்........
ஊமை விழிகள்
தமிழ் திரைப்படம் பார்த்து
கற்றுக் கொண்டாயா...?
மேகப்புற்றிலிருந்து
எங்குப் போகின்றன
இந்த ஔிப்பாம்புகள்?
கவிதை ரசிகன் குமரேசன்
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
*இரவின் முணு முணுப்பு - 13*
இதில் தான்
ஒரு நெருப்பை
இன்னொரு
நெருப்பினால் அணைக்கும்
அதிசயம் நிகழ்கிறது...!
- *கவிதை ரசிகன்*
குமரேசன்
❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
செழி்ப்பான பூக்கள்
விற்காமல் இருக்கிறது
விதவை வியாபாரி
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
கோவிலில் பூசை
வரிசையாக நிற்கின்றனர்
சுண்டல் வழங்குமிடத்தில்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
மரம் வெட்டியதும்
மரத்தோடு சேர்ந்து விழுந்தது
நிழல்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
நெடுஞ்சாலையில் இறநத நாய்
அடக்கம் செய்கின்றன
காக்கைகள்
🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒🍒
ஏழையின் வயிறு
நிறைந்திருக்கிறது
பசியால்
*கவிதை ரசிகன்*
🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍
*ஒரு பெண்ணின்*
*காதல் மனம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🩷❤️🧡💛💚🩵💙💜🖤🩶🤍
அன்பானவனே !
தூண்டில் போட்டாலும்
சிக்காத மீனாக இருந்தேன்...
அது எப்படி
நானே துள்ளி வந்து
உன் தூண்டியில்
சிக்கினேன்....?
வலை விரித்தாலும்
விழாத மானாக இருந்தேன்...
அது எப்படி
விரிக்காத
உன் வலையில்
நானே வந்து
விழுந்தேன்....?
கண்ணிவைத்தாலும்
சிக்காத
சிட்டு என்று நினைத்தேன்
அது எப்படி
நீ கண்ணி வைக்காமலேயே
நான் சிக்கினேன்...
வண்டுகள்
தட்டிய போதும்
திறக்காத மொட்டாக
இருந்தேன்....
அது எப்படி
நீ தட்டாமலே
நான் திறந்தேன்...?
சூரியன் ஒளிபட்டும்
மலரா (...)
#உன்னை போல்.....*
படைப்பு *கவிதை ரசிகன்*
#குமரேசன்
பத்து பேர் நடுவில்
உன்னை
ஒருவர்
கேலி கிண்டல்
செய்யும்போது.....
உன் மனம்
எவ்வளவு
வேதனைப்பட்டது என்பதை
உணர்ந்த பிறகும்
இன்னொருவரை
கேலிக்கிண்டல்
செய்யலாமா....?
ஒருவர்
உன்னிடம்
சொன்னபடி
நடந்து கொள்ளாத போது
உனக்கு
எவ்வளவு
கோபம் வந்தது என்பதை
உணர்ந்த பிறகும் ....
நீ சொன்னபடி
நடந்து கொள்ளாமல்
இருக்கலாமா ....?
ஒருவர்
உன் மீது
பொறாமைப்படுவது
தெரிய வந்தபோது
உனக்கு
எவ்வளவு
வெறுப்பு வந்தது என்பதை
உணர்ந்த பிறகும்....
நீ அடுத்தவர் மீது
பொறாமை படலாமா ?
ஒருவர் உன் மனம்
புண்படும்படி பேசிய போது
உனக்கு (...)
*விலங்குகள்* பற்றி ஒரு *கவிதை* எழுதி இருக்கிறேன் *நண்பர்களே* இது பற்றி தங்கள் *கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்*...
🐘🐕🐐🐆🐅🦈🐋🦮🐩🐕🐖
*விலங்குகள்*
*நாட்டின் செல்வங்கள்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🐶🐱🐘🦧🦛🦛🐅🐆🦓🐏🐕
இயற்கை அன்னை
தன் செல்வங்களையும்
வளங்களையும்....
விலங்குகள் பறவைகளாக
உருமாற்றி
வைத்திருக்கிறாள்....!!
தாயில்லாதக்
குழந்தைகளுக்கும்....
தாய்ப்பால்
கிடைக்காதக்
குழந்தைகளுக்கும்
மாற்று அன்னை தான்
பசுமாடு...!!
பெரும்பாலான
விலங்குகள்
சிபி மன்னனின்
மறுபிறவிகள் தான்...
ஏனெனில் ?
அவைகள்
நமக்காக
உடல்
தசைகளையே! அல்லவா
அறிந்துக் கொடுக்கிறத (...)
✅✅✅✅✅✅✅✅✅✅✅
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
✅✅✅✅✅✅✅✅✅✅✅
ஏகப்பட்ட தாகம்
தொண்டையில்
இளநீர் விற்பவருக்கு
❎❎❎❎❎❎❎❎❎❎❎
வேகாத வெயிலில்
நடந்து செல்கிறார்
குடையை சரிசெய்பவர்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
மெத்தை உற்பத்தியாளர்
இரவில் உறங்குகிறார்
பாய் படுக்கையில்
✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️✳️
மாடி வீட்டைக் கட்டுபவர்
வாழ்ந்து வருகிறார்
மண் குடிசையில்
❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️❇️
ஓட்டல் சிறுவன்
உணவு பரிமாறுகிறான்
வயிற்றுப்பசியோடு
*கவிதை ரசிகன்*
✅✅✅✅✅✅✅✅✅✅✅
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
*குறுங்கவிதை*
படைப்பு *கவிதை ரசிகன்*
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
மரங்களை வெட்டி
யாகம் நடத்துகின்றனர்
மழைவேண்டி
🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢🟢
காக்கையின் எச்சம்
கௌரவம் பெறுகிறது
காந்தி சிலை மீது
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴
லஞ்சம் ஒழிப்பு அதிகாரியாக
வேலையில் சேர்ந்தார்
லஞ்சம் கொடுத்து
🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡🟡
குழந்தையைப் பற்றி
நன்றாக அறிந்திருந்தாள்
குழந்தை இல்லாதவள்
🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣🟣
சிறகு முளைத்த
இரு மீன்கள்
அவள் கண்கள்
*கவிதை ரசிகன்*
♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️♻️
*கவிதை ரசிகன்* படைப்பு...
பெண்ணே!
கருப்பு என்றாலே
எனக்கு வெறுப்பு...!
ஆனால்
அது
உன் நிறமாக
இருக்கும் போது
நான் ரசிக்கிறேனே...!
என்னை
அவமதித்துச் செல்வோரை
அடுத்த நாளே
பலி வாங்கி விடுவேன்....
ஆனால்
நீயும்
என்னை
அவமதித்துச் செல்கிறாய்....
நான்
அமைதியாக இருக்கின்றேனே!
கிடைக்காது என்று தெரிந்ததும்
அதன் மீது
ஆசை படுவதை
நிறுத்தி விடுவேன் ....
ஆனால்
நீயும்
கிடைக்க மாட்டாய்என்று
தெரிந்தும்
நான்
உன் மீது ஆசைப்படுகிறேனே!
ஒன்றினால்
பல கஷ்டங்கள்
வரும் என்று அறிந்ததும்
உடனே
அதை கைகழுவி விடுவேன்....
ஆனால்
உன்னாலும்
பல கஷ்டங்கள்
வரும் என்று அறிந்திருந்தும்
உன்னை
கைகழுவ முடியவ (...)