எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

  எனது "சிறகுகளின் கனவு" புத்தகம் இப்போது amazon kindle ல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது வேண்டும் நண்பர்கள் சிறகுகளின் கனவு எனும் பெயரை பயன்படுத்தி அமேசானில் தேடினால் படிக்க இயலும் .
நன்றி  

மேலும்

அனைத்து படைப்புள்ளங்களுக்கும் வணக்கம் எனது முதல் கவிதை தொகுப்பான "சிறகுகளின் கனவு" நூல் வரும் நவம்பர் 14 ஆம் தேதி மாலை 5  மணியளவில்  வெளியிட படுகிறது.


இடம் 
k2b மினி ஹால்
செங்கம், 
திருவண்ணாமலை மாவட்டம்.

அனைவரும் பங்கேற்க அன்புடன் அழைக்கிறேன். 
அன்புடன் 
கி. கவியரசன்

மேலும்

மிக்க மகிழ்ச்சி . வாழ்த்துகள் 13-Nov-2019 2:45 pm

  அனைவருக்கும் வணக்கம் ,

இது உழவர் உயிரிப்புக்காக எழுத பட்ட கவிதை , சல்லிக்கட்டு மட்டும் பேசப்படும் நேரத்தில் உழவர்களின் உயிரிழப்பையும் நாம் முன்நிறுத்த வேண்டும் . தங்களால் முடிந்தால் இக்கவிதையை பாருங்கள் உங்கள் நண்பர்களுக்கும் கொண்டு சேருங்கள் . நன்றி 

மேலும்

நிச்சயம், நம் தேசம் விவசாயத்தாயே நம்பி இருக்கிறது, ஆகையால் இத்தொழிலுக்கு தேவையான அனைத்து ஆதரவான வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டியது அவசரமான ஒன்று, முதலில் செய்ய வேண்டியது இதனால் ஏற்படும் உயிர் இழப்பை போர்க்கால அடிப்படையில் தடுத்து நிறுத்த வேண்டும் - மு.ரா. 18-Jan-2017 11:20 pm

  எனது பிறந்த நாளை மிகவும் மகிழ்வானதாக மாற்றிய எனது கல்லூரி நண்பர்களுக்கு எனது நன்றிகள் ........  

மேலும்

யார பாத்தாலும் கழுவி கழுவிதான் ஊத்துறாங்க இந்த அம்மா ஜெயச்சத.!!! அப்புறம் எப்படி இதுலாம் நடந்தது...????????????????????????????


ஒரு வேளை முகபுத்தக பேச்சு மூஞ்சிய பார்த்தா போச்சுன்னு சொல்லுறது உண்மையா இருக்குமோ ...........?

மேலும்

எழுத்து செயலியை பயன்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்

மேலும்

நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள் ................ இந்த எழுத்து குடும்பத்தில் சேர்ந்து ஒரு வருடம் இரண்டு மாதங்களை நெருங்கிவிட்டேன் .......... எனது 500 வது படைப்பையும் நேற்று பதித்து விட்டேன் ........... எனக்கு இதுவரை ஆதரவு தந்த தரப்போகும் அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் .........

இக்குழுவில் நான் வந்த புதிதில் எனக்கு அதிகம் அறிவுரைகள் மற்றும் கருத்துக்களை வழங்கிய எத்தனையோ பேர் இன்று இக்குடும்பத்தில் இல்லை .............. எங்கு சென்றார்கள் என தெரியவில்லை ........ பணிச்சுமை காரணமாக இங்கு என்னால் அதிகம் வர இயலவில்லை ............... இன்று பல புது முகங்கள் ........... காலச்சக்கரம் வேகமாய (...)

மேலும்

500-வது படைப்புக்கு வாழ்த்துக்கள்! 23-Jul-2015 1:05 pm

வெகுநாள் பிறகு வந்து பார்த்தேன் நான் பார்த்த அழகிய கவிதை தளமான இத்தளம் ஏனோ அதன் உண்மை முகமிழந்து காணப்பட்டது ........... இறுதி தேர்வு பட்டியலில் அன்று இடம் பிடித்தால் நிச்சயம் அது ஒரு சிறந்த கவிதையாகவோ அல்லது படிக்க ஏற்ற கவிதையாகவோ இருக்கும் ஆனால் இன்று இதோ கிழே கொடுத்துள்ள கவிதை இணைப்புகள் இறுதி தேர்வில் இருந்தவையே ............ வருத்தமாக உள்ளது.
http://eluthu.com/kavithai/241329.html
http://eluthu.com/kavithai/241329.html
http://eluthu.com/kavithai/241578.html
http://eluthu.com/kavithai/240158.html

நிர்வாகம் இதை கண்டுக்கொள்வதில்லை போல தெரிகிறது ஒரு ரசிகனால் கூட ஏற்க இயலாது ....... (...)

மேலும்

உமது எண்ணம் மிகவும் சரியானது நண்பரே!! 21-May-2015 11:22 pm
தாங்கள் கொடுத்துள்ள அந்த இணைப்புகளைத் திறந்து பார்த்தேன் ......புல்லரித்தது ....! எத்தனை சொறிந்தாலும் போகமாட்டேன் என்கிறது அந்தப் புல்லரிப்பு ........! நாளை நல்ல தோல் மருத்துவரிடம் செல்லலாம் என்றிருக்கிறேன் .......! மேலும் இம்மாதத் தேர்வுப்பட்டியலில் தாகு .....ராம்வசந்த் .......சரவணா ......சேயோன் யாழ்வேந்தன் ....மணிமேகலை மணி .......போன்ற பெயர்கள் இருப்பது சற்று ஆறுதல் ....... 21-May-2015 11:06 pm

என்னவளே என ஒரு கவிதை எழுதி பதிவிட்டேன் 92 பார்வைகள் இதுவரை. ...... தமிழா தமிழா என்றும் நான் தமிழன் என்றும் இரு கவிதைகளை பதிவிட்டேன் அதற்கு வெறும் 19 மற்றும் 17 பார்வைகள் தான். ஆக தேடுவோரின் எண்ணமும் நாடுவோரின் எண்ணமும் காதலுக்கு தரும் ஈடுபாட்டை தமிழுக்கு தருவதில்லை தமிழனுக்கு தருவதில்லை என்னே தங்களின் தமிழ் பற்று........ கருத்திடுங்கள் என கூறவில்லை மதிப்பிடுங்கள் என கூறவில்லை பார்க்க கூட வரத்தூண்டுவதில்லை போல தமிழும் தமிழன் என்ற தலைப்பும்........

வாழ்க தமிழ் வளர்க தமிழ் மக்கள்

மேலும்

உங்கள் எண்ணம் புரிகிறது கவியரசன் .....நமக்கு இதெல்லாம் பழகிவிட்டது . நாம் தொடர்வோம் நம் பயணத்தை ....என்றும் போல . வாழ்த்துக்கள் 10-Apr-2015 9:19 am
உங்கள் கருத்தை முழுமையாக ஏற்கிறேன் ராம் . நன்றி 10-Apr-2015 9:18 am
ஆனந்த விகடன் எடுத்தவுடன் நாம் படிப்பது சொல்வனம் கவிதைகள் , குமுதம் எடுத்தால் அரசு பதில்கள் .அதுபோல் எழுத்தில் மட்டுமல்ல ... மொத்த இணையத்திலும் காதல் கவிதைகளுக்கே இன்று முதலிடம் ...அதையும் மீறி நல்ல சமூக கவிதைகள் கவனம் பெறத்தான் செய்கிறது அவ்வப்போது . இரண்டையும் எழுதுங்கள் . சமீபத்தில் இரண்டு புத்தகங்கள் இந்திய சந்தையில் வந்தன . ஒன்று PLAYING IT MY WAY - டெண்டுல்கர் வாழ்க்கை வரலாறு .இன்னொன்று - I AM MALALA - மலாலா வாழ்க்கை வரலாறு . முந்தியதுதான் அதிகம் விற்றது . ..ஆனால் பின்னவருக்கு தான் நோபல் பரிசும் கிடைத்தது . என்ன எழுதுகிறோம் , எங்கு எழுதுகிறோம் , யாருக்கு எழுதுகிறோம் எல்லாமே முக்கியம்தானே தோழரே ... எண்ணிக்கை முடிவு செய்வதில்லை சிறந்த படைப்பை . 10-Apr-2015 7:36 am
உண்மை அய்யா .... 10-Apr-2015 5:55 am

மண் பயனுற்றதா இல்லையா.......? போட்டி முடிவை காணவே இயலவில்லை யாரேனும் விபரம் அறிந்தால் கூறுங்கள் தோழர்களே

மேலும்

அநேகமா 6 மணிக்கு வெளியிடலாம் என்று நினைக்கிறேன். உங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழரே 16-Feb-2015 4:35 pm
ம்ம்ம் தோழரே வாழ்த்துக்கள் 16-Feb-2015 4:28 pm
நானும் அதைதான் எதிர்பாத்து கொண்டிருக்கிறேன் தோழரே 16-Feb-2015 4:19 pm
மேலும்...

மேலே