எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

 19-04-2018   சங்கப் பலகையில்[FB] எழுதியது 


கட்டுடல் மேனி கொண்டாள், கண்முனே வந்து நிற்க  
மொட்டுடல் தழுவ எண்ணி மோகமே உந்தித் தள்ளக் 
கட்டியே அணைக்கச் சென்றான் கவிழ்ந்தவள் மூச்சுப் பட்டுக்  
கொட்டிய பாலாய் நின்றான் கூசினான் வருந்தி நின்றான்! ==  

பூப்போல் நுழைந்தான் புதுக்கதி ரோனுமென்  
பூப்போல் சிவந்தது வானுமே! – பூப்போல
வாடினேன் கண்டும் வருந்தினேன் தோள்சாயக் 
கூடிடாப் பூப்போல் குவிந்து!  

’உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்’எனத்  
தெள்ளிதின் குறுந்தொகை தெரியப் படுத்தும்; 
வெள்ளமும் குறைத்து விடுமணல் அறுத்தும்  
மக்களுக் கென்றிவர் மறைத்திடு திட்டம் 
இக்கணம் நமது மக்களும் உணர்ந்து 
தக்க பதிலாய் முக்கியத் தேர்தலில் 
உளரெனப் படாஅ தொழிப்பரோ இவரை 
வளமது நாட்டினில் வாய்த்திடப் போமே!     

 15-04-2018 

 கட்டுடல் பற்றிக் கண்கள் தடுமாறும் 
விட்டுடல் ஆவி வேற்றுலகம் எத்திவிடும்  
பட்டுடல் தழுவப் பற்களுக்கும் ஆசைவரத் 
தட்டியவோ அதுவே தடயமாய் நின்றதுவோ  
வெட்கமுடன் பின்னதனை விரல்கள் தொட்டிடுமோ உள்ளமுமே துவண்டிடுமோ சொல்தோழி! 
 ====  === 

கடித்த வாய்ச்சுவடு கன்னியவள் தான்மறைக்க  
எடுத்த முயற்சிகளை இயல்பாய்த் தாய்கடிந்தாள்! 
மடித்த உதட்டோடு மனமும் 
நொடித்தகதை இச்சிறுவன் நுவல்வானோ சிரிப்பினிலே! 

 =====   =======       

மேலும்

 எதிர்கோளின் ஆற்ற இயலாதான் வெற்றுக்  

குதிர்போல் அவனாட்சி கொல்!.  

பொருள்:    பிறருடைய செயல்களை எதிர்நோக்கி மாற்றுச் செயல்களுக்கான ஆற்றலுடன் வினையாற்ற முடியாதவனின் அரசாட்சியானது தானியங்கள் வைப்பதற்காகச் செய்யப்பட்டு, ஒன்றுமில்லாது வெறுமையாக இருக்கும் தானியக் கூட்டிற்கு ஒப்பாகும்; அப்படிப்பட்ட ஆட்சியை அழித்துவிடு.       

மேலும்

பெற்ற மதிப்பால் பிறரஞ்ச வாழாதான் 

கொற்றம் செயலூர்க்குக் கேடு!   
பொருள் : தனக்குள்ள உயர்ந்த பெருமையின் காரணமாக அவனுக்கு                              அஞ்சிப் பிறர் வாழலில்லை என்றாகும் போது, அப்படிப்பட்டவனின் 
               ஆட்சியால் அவன் ஆட்சி செய்யும் நிலத்திற்குக் கேடே விளையும்;    

மேலும்

                     == == 01-04-2018 

 நிலவுடன் பேசி நடந்திட வேண்டும் -நிம்மது நெஞ்சில் குடிவர வேண்டும் குலவியே உறவுகள் குழுமிட வேண்டும்-  குருவிக ளுடனும் கொஞ்சிட வேண்டும் கலவியின் நிறைவில் களித்திட வேண்டும்-  கசப்புக ளில்லா நட்புகள் வேண்டும் இலவம் பஞ்சாய் இதயம் மிதக்க -எதிர்வரும் நாட்கள் சுகப்பட வேண்டும். --ஈஸ்டர் சிறப்பு வாழ்த்துக்கள்      

மேலும்

மேலும்

வணக்கம் தங்கள் தமிழ் மரபுப்பா இலக்கணம் - : ---தமிழ் கற்க விரும்பும் உலகத் தமிழர்களுக்கு தங்கள் தமிழ் இலக்கிய இலக்கண படைப்பு போற்றுதற்குரியவை தமிழ் வளர்க்க தமிழ் அன்னை ஆசிகள் 03-Dec-2016 5:51 am

மின்னலினைப் பிடிப்பதற்கு விருப்பம் என்றால்
மேகத்தில் ஏறிடவே முயற்சி வேண்டும்!
இன்னலினைக் களைவதற்கு விருப்ப மென்றால்
இருக்கைவிட் டெழுந்துழைக்க முயற்சி வேண்டும்!

மேலும்

சென்னை மாதனாங்குப்பம் சோகா இகெதா கலை மற்றூம் அறிவியல் மகளிர் கல்லூரியில் 1—3—2016 அன்று தமிழ்த் துறையும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இயங்கி வரும் திருக்குறள் உயர்ஆய்வு மையமும் இணைந்து திருக்குறள் தேசியக் கருத்தரங்கம் ‘சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கள் என்னும் தலைப்பில்’ நடத்தின.
திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் அமர்வு இரண்டிற்குத் தலைமை தாங்கினார். அதில் அவர் திருவள்ளுவரின் நட்பியல் அளவிலான எண்ணம் சார்ந்த அறவியல் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் நுண்ணாய்வுக் கட்டுரை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒளிப்படம்.

பேராசிரியர் வெ.அரங்கராசன்'s photo.

மேலும்

தமிழ் விரும்பிகள் இதனையும் விரும்புவர்: (இதற்கு முன்பு இதுபோல் பதிவுசெய்த ஒரு எண்ணத்தைக் காணவில்லை என்றாலும்!!!)


மேலும்

இசைத்தமிழ் விரும்பிகள் இதை விரும்புவார்கள்:பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப.சுந்தரேசனார்பற்றி அறிந்து கொள்வோமா......

மேலும்

கேட்டார் பிணிக்கும் தகையவாய்ப் பேசும், கூட்டாளர் பேச்சினில் பிடித்த பகுதி எடுத்துச் சொல்லி, கொடுத்துக் கருத்தினைப் பதிவு செய்வீர்களானால் , இன்னும் நாலுபேர் இதைப் பார்க்க, கேட்க மாட்டார்களா..வாருங்களையா..! 17-Mar-2016 6:48 pm

'A sequel to Mr.Joseph Julius's வளரும் தமிழ் ' 


தமிழின்பெருமைகளை, இலக்கிய எடுத்துக் காட்டுகளுடன் சொல்லியதோடும் நிறுத்திக் கொள்ளாமல்,தமிழ் வளர்ச்சியில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றங்கள் ஏற்படாத அவல நிலையைஎடுத்திக் காட்டியதோடும் அல்லாமல் அனேக நல்ல ஆக்கபூர்வமான, செயல்பாடுகளுக்கானதீர்வுகளையும்எடுத்துச்சொல்லியுள்ளார் திரு. ஜூலியஸ் அவர்கள். உலகில், இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என மூன்று மிகச் சிறிய நாடுகளில்  மட்டும் பேசப்பட்டு வந்த ஆங்கிலம், உலகப் பொது மொழியாக இன்று திகழ்கிறது. உண்மையில் ஏழு கோடி மக்களால் பேசப்பட்டு வந்த தமிழ் இன்று இரண்டு கோடிக்கும் குறைவானவர்களால் பேசப்பட்டு வருகிறது ...என்ற இவரது கூற்றுக்குகாரணம் எதுவாக இருக்கும்?.தாய் மொழியின் முக்கியத்துவத்தை  தமிழர்கள் அறவே மதிக்காத பாங்கினையே படம் பிடித்துக் காட்டுகிறது. என்று அவர் சொல்வது மட்டுமேகாரணமா? ஆட்சியைப் பிடிக்கத்தமிழைப் பயன்படுத்திக்கொண்ட ஒரு கூட்டம் தமிழை ஆட்சிமொழியாக்கிய பின்னர் அதன்வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள்? ஆட்சியைத் தமிழுக்குக் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பதுதானே உண்மை! தனியார் மயமாகும்  தொடக்கக் கல்விக்கு தடை செய்து, தமிழில் நம் பிள்ளைகள் பயின்ற பின்னரே, இரண்டாம் மொழியாக ஆங்கிலம் முதலிய பிற மொழிகளை பயிலும் வகையில் தொடக்கக் கல்விக் கூடங்கள் அமைத்துத் தரத் தவறியதோ டல்லாமல் இந்தி எதிர்ப்புப்போராட்டம் நடத்தித் திட்டங்கள் திசை மாற்றம் செய்யப்பட்டதுதானே பெரிதாகநடந்துள்ளது.  தமிழரும் இந்தியைத்தன்மயமாக்கிக் கொண்டு, பதவி மோகம் கொண்டு செய்த செயல்களினால், தாய்த்தமிழுக்குமட்டுமா துரோகம் செய்துள்ளனர்? இன்று மாபெரும் ஊழல்களுக்குத் தமிழன்தான் காரணம் அவன்தான்அதில் முதல் இடத்தில் நிற்கிறான் என்ற நிலையை அல்லவா உருவாக்கிக்கொடுத்துள்ளார்கள்!! நம் பிள்ளைகளை, ஆங்கில வழிக் கல்வி பயில்வதை நிறுத்த, பள்ளிக் கல்வியுடன், உயர்கல்வியும், தமிழ்வழி பயின்றிட போதிய கல்விக்கூடங்கள், உயர்கல்வி கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அமைத்துத் தராதது யார்செய்த செய்துகொண்டிருக்கின்ற குற்றம்? கட்சிக்கு ஆட்களைச்சேர்த்தும், கட்சித் தொண்டர்களை வைத்தே அரசுத் திட்டங்களாகட்டும், அல்லது கட்சிசார்பான தொழிற்சங்கங்கள் மூலம் ஊடுருவப்பட்ட அரசு செயலுக்கான இயந்திரங்க -ளாகட்டும்எல்லாவற்றிலும், மானில நிதியையும் மக்களையும் கொள்ளையடிக்கத் திட்டங்கள்தீட்டுவதற்கே இவர்களுக்கு நேரம் போதாமல் போய்விட்ட போது, மற்றைய முன்னேற்றங்கள்எப்படி ஏற்பட முடியும்?  இக்கட்டுரை ஆசிரியர்குறிப்பிட்டுள்ள ‘துரோகம்’ இந்த வகை செயல்பாட்டின் மூலம்தான் வித்திடப்பட்டுவளர்க்கப் பட்டு, தான் மட்டுமல்லாமல் தான் உடன் அழைத்துச் செல்வதாகப் பாசாங்குகாட்டி இழுத்துச் செல்லும் பல நிலைகளில் உள்ள ‘உடன்பிறப்புக்கள்’ ‘இரத்தத்தின்இரத்தங்கள்’ அனைவருள்ளும்  பதவி மோகத்தினை வளர்த்துள்ளது என்பதை எத்தனை பேர் எண்ணிப்பார்க்கின்றனர் இன்று. மற்றப்படி ஆசிரியர் தனதுகட்டுரையில் அழகான நல்ல பல செயல்பாட்டிற்குரிய திட்டங்களைக் கோடி காட்டிச்செல்கிறார் என்பதினை, இதனைப் படிப்பவர் அனைவரும் ஒப்புக்கொள்ளத்தான் செய்வர்.ஆனால், திசைமாறிய அரசியலார் உணர்வுகளால் சீரழிக்கப்பட்ட தமிழனின் பண்பாடு இனியும்இவர்களது செயல்திட்டங்களால் விரும்பத்தக்க மாற்றத்தைக் கொண்டு வருமா?  படிப்பறிவில்லாத கீழ்நிலையிலிருந்தும் மக்களை மேல்வரச் செய்யும் முயற்சிகள், மெதுவாக என்றாலும்,நிச்சயமாக நல்ல பயன்களைப் பெற்றுத்தர இயலும். பண்பிழப்பிற்குக் காரணமானமக்களை இனி எந்தத் திட்டங்கள், எப்படி ஓர் உயர் நிலைக்குக் கொண்டு சேர்க்கமுடியும்? இங்கு திட்டங்கள் ‘திட்டம்போட்டுத் திருடுற கூட்டத்திற்கு’ ஆயுதங்கள். இந்நிலை மாறாமல்  மாற்றம் என்பது எப்படிச் சாத்தியமாகும். ஆனாலும் நல்வழிகளைச்சுட்டிக் காட்டி நல்ல பயன்களை எதிர்பார்ப்பதல்லாமல், நம்மால் வேறு என்ன செய்யமுடியும்? கல்வியில் தமிழுக்கும்,தமிழ்ப் பண்பாட்டிற்கும் கொடுக்க இருக்கும் முக்கியத்துவமே இதற்கு வழிவகுக்கலாம்என்ற நம்பிக்கையில், அப் பண்பாட்டிற்குக் கைகொடுத்துத் தேர்தலை நடத்திச் செல்லும்சனநாயகமே நல்லதொரு மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்ற நம்பிக்கையுடன் இருப்போமாக!
அன்புடன்எசேக்கியல்

மேலும்

முற்றிலும் சரியாகப் படும் கருத்து. நன்றி! 17-Mar-2016 6:44 pm
ஏட்டு சுரைக்காய் ஆன நம்தமிழ் தாங்கள் கூற்றை படித்தேனும் ஏற்றம் காணட்டும் அருமையான பகுப்பாய்வு அதை பொருமையாக பதிவேற்றி அனைவர்க்கும் தந்ததற்கு மிக்க நன்றி! 17-Mar-2016 1:36 am
தங்கள் கருத்து சிந்தனைக் களம் பாராட்டுக்கள் தொடரட்டும் உமது பயணம் நன்றி 16-Mar-2016 11:32 pm
அய்யா அன்று தமிழ் வழிக் கல்வியில் பயினறவர்களுக்கு இருக்கும் ஆங்கில மொழி அறிவு அளவை நெருங்கும் நிலையில் கூட இன்று ஆங்கிலவழிக் கல்வி பயின்றோருக்குக் கிடையாது. இன்று பெரும்பாலான முதுகலைப் பட்டம் பெற்றவர்களில் பெரும்பாலோரால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பிழைகள் இன்றி ஒரு பத்தி கூட எழுத முடியாத நிலை. கல்வியில் அரசியல் குறுக்கீடு இதில் பெரும்பங்கு வகிக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்பு மொழிப் பாட ஆசிரியர்கள் மட்டுமின்றி பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களும் மாணவர்களின் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள், வாக்கிய அமைப்புப் பிழைகளைச் சுட்டிக் காட்டி மாணவர்களைத் திருத்துவார்கள். இன்று அத்தகைய ஆசிரியர்கள் பள்ளிகளிலும் இல்லை,கல்லூரிகளிலும் இல்லை. மனப்பாடக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து மதிப்பெண்களை வாரிக் கொட்டுவதால் பாடப் புத்தகங்களை மனப்பாடம் செய்வதைத் தவிர பிற நூல்கள் மற்றும் நல்ல செய்தித் தாள்களைப் படித்து மொழி அறிவையும் பொது அறிவையும் வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு பெற்றோரும் ஆசிரியரும் ஊக்கம் தருவதில்லை. காணொலி ஊடகங்களும் எட்டாம் வகுப்பு வரை தேர்விலலாத் தேர்ச்சி பின் மதிப்பெண்களை வாரி வழங்கும் வள்ளல் தன்மை போன்றவை நூல்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொன்றுவிட்டன. இயந்திர மனிதராய்க் குழந்தைகள் மாற்றப்படுகிறார்கள். கல்வித் தரத்தைவிட தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதே ஆண்டுதோறும் நடக்கும் செயல். 16-Mar-2016 10:47 pm
மேலும்...

மேலே