எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அன்பு,ஆத்ம உணர்வு இல்லாமலும் மற்றும் பிறர்
உள்ளத்தோடு உறவாடத் தெரியாமலும் மனிதநேயத்தைத்
தொலைத்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
தன் நாடு, தன் மதம், தன் மொழி, தன் இனம்,
தன் மாநிலம் என்று பிரித்து, அவைகள் பெரிதென்றும்,
அதற்கு தங்கள் உயிரையும் கொடுக்க தயங்கமாட்டோம்
என தலைவர்களும், எழுத்தாளர்களும், ஊடகங்களும்
மக்களின் வெறித்தனத்திற்கு உயிரூட்டுவதால்
மனிதாபிமானம் மரணப்படுகிறது.
துன்புறுத்துவது, கொலைசெய்வது,கேடுவிளைவிப்பது,
ஆயுதங்களால் அழிப்பது மட்டுமல்ல,கொடுஞ்சொற்களால்
பிறரை துன்புறுத்த மாட்டோமென்று உறுதிகொண்டால்
வீடும்,நாடும்,இந்த பரந்த உலகமும் சிறப்புடன்
மேன்மையடையும்.

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 12-Mar-2016 9:07 am
நன்று, அருமையான எண்ணப்பதிவு - மு.ரா. 11-Mar-2016 6:02 pm

மேலே