எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பொங்கல் கும்மி பாடல் 

*********************************

கும்மியடி..பெண்ணே...கும்மியடி 
குனிந்து... குனிந்து.... கும்மியடி
குடியும் . கோ-மகனும்  ஓங்கிடவே 
கும்மியடி..பெண்ணே...கும்மியடி 

விண்ணையும் மண்ணையும் 
இணைத்துயரும் எங்கள் மண்ணின்
மகிமையை  கும்மியடி - மண்ணின் 
மகிந்தர்கள் சிந்திய வியர்வை 
நெல் மணியானதை சொல்லியடி 
கும்மி.... சொல்லியடி ..கும்மியடி..
பெண்ணே...கும்மியடி ..கும்மியடி..
குனிந்து... குனிந்து.... கும்மியடி

சேற்றையே.. சோற்றாக... மாற்றும்
இயற்கை விந்தைக்கு - தலைசாய்ந்து 
ஒருமுறை கும்மியடி பெண்ணே...
வரம்புயர.. குடியுயரும்... குடியுயர 
கோன் உயர்வான் உலக நெறி சொன்ன 
ஒப்பற்ற தாய்க்கு கும்மியடி 
பெண்ணே ...கும்மியடி 
குனிந்து... குனிந்து.... கும்மியடி

உலகமு  ண்ண காரணமாய் நிற்கும்  
உழவன் உழைப்பை சொல்லி கும்மியடி 
பொங்கி வழியும் பொங்கல் பானையிலே 
பொங்கும் எங்கள் இன்பத்தை சொல்லியடி 
கும்மியடி..பெண்ணே...கும்மியடி 
குனிந்து... குனிந்து.... கும்மியடி


மேலும்

Kiramiya manam 16-Jan-2016 6:01 pm
உங்களுக்கும் வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 15-Jan-2016 8:57 am
அனைவருக்கும் தைதிருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இனி வரும் காலங்கள் அனைவருக்கும் இனிமையானதாக அமையட்டும்! 15-Jan-2016 5:51 am

2016 ஆண்டை இனிமையுடன் வரவேற்கிறோம் 

மேலும்

எழுத்து தளத்தில் எனது பயணம்  3 வருடம்  பூர்த்தி 

#######################################################

எனது முதலாவது கவிபயணம் 7 Dec 2012 5:31 pm அன்று எழுத்து தளத்தில் ஆரம்பமாகி இன்றுடன் 3 வருடங்கள் பூர்தியாகியுளேன் 

7 Dec 20125:31 pmகண்ணீரில் 
கே இனியவன்
இதுதான் எனது முதல் கவிதை 
...................................................

எழுத்தில் எனது மொத்த பதிவுகள் 

#### கவிதை 6879 சொந்த கவிதைகளே பதிந்துள்ளேன் 
####### #### கதை 1397 பாட்டி சொன்ன கதை 46 கட்டுரை -1263  நகைச்சுவை 2760 பிறர் பதிவுகளே முழுமையாக மீள் பதிவு செய்துள்ளேன் .ஒரு சில சொந்த பதிவும் இடம்பெற்றுள்ளன ##################### 

எண்ணம் ##### கேள்வி பதில் ########### போன்றவையும் ஒருசில இடம்பெற்றுள்ளன --------------

எழுத்தில் எனது சாதனைகள் 
###############################

மொத்த பார்வை 253271 இதனை ஒரு சாதனையாகவே கருதுகிறேன் .3 வருடத்துக்குள் இந்த இலக்கை அடைவது என்பது சாதாரண விடயம் இல்லை 

மொத்த தேர்வு 25775 இது இன்னுமொரு சாதனை  இது எப்படி நடந்தது என்பது ஒரு புதிராக உள்ளது. கடின உ ழைப்புக்கு  கிடைத்த மகா வெற்றி . -------

இங்கு 3 நபருக்கு நான் நன்றி சொல்லியே ஆக வேண்டும் 

#######################################

1) HARI HARA NARAYANAN.V 
-----------------------------------------

எனது முதலாவதும் இறுதியுமான முன் மாதிரியாளர் 2012 ஆண்டு முதல் பதிவை பதிந்த காலத்தில் அவரின் மொத்த பார்வை 150000 மேல் இவைரை எப்படி அடைவது என்று தினமும் ஜொசிப்பேன் .இன்று 250000 பார்வையை பெற்றாலும் அத்தனை பெருமையும் சகோதரனையே சேரும் 

2)AUDITOR SELVAMANI 
---------------------------------

அண்மை காலத்தில் என்னோடு போட்டி போட்டு பதிந்து கொண்டிருபப்வர் .என்னை தொடுவதே தனது குறிக்கோள் என்று தனிப்பட்ட மடலில் சொல்லி . என்னை அடைவதற்கு என்ன செய்யணும் என்று ஆலோசனையும் கேட்டார் . நான் சொனனது நிறைய பதிவுகள் போடுங்கள் .அதில் கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றேன் . கவிதைகள் சொந்த கவிதையாக இருந்தால் பார்வை கூடும் என்றென் . அதையே அவர் பின்பற்றுகிறார் போலும் 200000 மொத்த பார்வையை மிக மிக குறுகிய காலத்தில் அடைந்து சாதனை படைத்துள்ளார் 

3)Mohamed Sarfan 
-----------------------
அண்மை காலத்தில் எனது கவிதைக்ள் அனைத்துக்கும் பின்னூட்டல் செய்யும் ஆர்வலர் . நல்ல ரசிகன் அவரையும் இவிடத்தில் பாராட்டியே ஆகணும் 


அண்ணன்  ஜின்னா அண்ணன் பழனி குமார் மற்றும் மூத்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன் 

எழுத்தில் உள்ள பலம் அதிகம்  என்றாலும் எழுத்தில் எனக்கு புரியாத விடயங்களும் உண்டு 
###################################################################################################
1) இதை இயக்குபவர்கள் ஒருவரா....? பலரா ....? யாருடன் தொடர்புகொள்வது ...? பல sms போட்டேன் பதில் வரவில்லை ;குறிப்பாக எனது ப்ரோபிலே பெயரை கவிப்புயல் இனியவன் என்று மாற்றி தருமாறு பலமாதங்களுக்கு முன் கேட்டேன் பதில் வரவில்லை . மாற்றப்படவும் இல்லை .


2) பரிசு பெற்ற கவிதைக்குள் எனது கவிதை தெரிவாகவில்லை . இதற்கு நான் பிற பதிவுகள் பதிவதும் காரணமா ..? கட்டுரை கதை நகைசுவை (பிறர் பதிவுகள் ) அல்லது அதிக வாக்கு பெறாமையா ...?வாக்குக்கு பலருடன் வாக்கு கேட்க வேண்டும் .அதை நான் செய்ய முடியாது .எனது பணிசுமை தனிநபருடன் தொடர்பு கொள்ள இடமளிபப்தில்லை . 


3) என்றாலும் இதுவரை எனக்கு ஊக்கம் தந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி .எனது வேலை பழுவும் .வயதும் முன்னர்போல் பதிவுகளை மேற்கொள்ள இடமளிக்குமா ..? என்பது கேள்விக்குறியாக உள்ளது .
வாராந்தம் 500 கிலோ மீற்றர் பயணம் செய்கிறேன் .( போய் திரும்பி வர 1000 கிலோ மீற்றர் ) இதுவரை பேருந்தில் இருந்து கூட கவிதைகள் போட்டிருக்கிறேன் . நள்ளிரவு 1மணி 2 மணி க்கு எல்லாம் கவிதை எழுதி மறுநாள் வீடு வந்து கணனியில் பதிவேன் . இவ்வாறு கடினபட்டே இந்த சாதனையை அடைந்தேன் 

புதிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் ஒரு கருத்து .நிறைய எழுதுங்கள் அப்போதுதான் எண்ணம் தூண்டபப்ட்டு புதிய படைப்புகள் தோன்றும் .

திருக்குறளை கவிதையாக்கி பதிந்தேன் .(இன்பத்துப்பால் ) இன்று அதற்கு பெரிய முக்கிய துவத்தை வாசகர் தரவில்லை என்றாலும் ஒரு காலத்தில் அது திரும்பி பார்க்கப்படும் 

நன்றி 
வாழ்க வளமுடன் 
கவி நாட்டியரசர் 
கவிப்புயல் இனியவன் 

மேலும்

தங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.. 21-May-2021 1:39 am
Nanri nanri 02-Apr-2016 6:48 pm
கவிக்குயில் ....கவிப்புயல் நன்றி நன்றி தங்கள் கருத்துக்கு நன்றி 25-Jan-2016 3:05 pm
மிக்க நன்றி நன்றி 25-Jan-2016 3:04 pm

தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையம்: மத்திய அரசு புதிய திட்டம்----------------
பரிசோதனை பணிக்கு போலீசாருக்கு பதில் போஸ்ட்மாஸ்டர்

03:05:47Sunday2015-12-27நாகர்கோவில்: தபால் நிலையங்களில் பாஸ்போர்ட் சேவை மையங்கள் ஏற்படுத்தவும், பரிசோதனை பணி போலீசாருக்கு பதில் போஸ்ட்மாஸ்டருக்கு வழங்கவும் மத்திய அரசு புதிய திட்டம் தீட்டி வருகிறது. நாடு முழுவதும் உள்ள தபால்நிலையங்களை பாஸ்போர்ட் சேவை மையங்களாக மாற்ற மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பங்களை நிரப்புவுதற்கு சிரமப்படுகின்றவர்கள் தபால் நிலையங்களுக்கு சென்றால் அவர்களுக்கு அதற்கான வசதியை ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் தபால் நிலையங்களை மாற்ற ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தபால் துறையுடன் வெளியுறவுத்துறை அமைச்சகம் பேச்சு நடத்தி வருகிறது. போஸ்ட்மாஸ்டர்களை ‘பாஸ்போர்ட் வெரிபிகேஷன் ஆபீசர்’ ஆகவும் நியமிக்க ஆலோசிக்கப்படுகிறது.பாஸ்போர்ட் பெறுவதற்காக விண்ணப்பித்தல் முழுவதும் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க விண்ணப்பதாரர்கள் பலரும் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பாஸ்போர்ட் விண்ணப்பம் பூர்த்தி செய்து வழங்குகின்ற மையங்கள் இதற்காக பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்கவும் செய்கின்றன என்ற புகார்கள் எழுந்துள்ள நிலையில் இதுபோன்ற ஒரு முடிவு மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  பாஸ்போர்ட் பெறுவதில் இடைத்தரகர்களை ஒழிக்க ஆன்லைன் முறை கொண்டுவரப்பட்ட போதிலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்குகின்ற பெயரில் ஏஜென்டுகளும், பாஸ்போர்ட் சேவா கேந்திராவை மையப்படுத்தி இடைத்தரகர்களாக செயல்படுகின்றனர் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.தற்போது பாஸ்போர்ட்களை விநியோகம் செய்ய மட்டுமே தபால்துறையின் உதவி நாடப்படுகிறது. இந்தநிலையில்தான் சேவை மையமாக செயல்பட செய்ய இயலுமா என்ற கோணத்தில் தற்போது ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் தட்கல் முறையில் விரைவாக பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்கின்றவர்களிடம் போலீசாருக்கு பதிலாக போஸ்ட்மாஸ்டரை கொண்டு விசாரணை நடத்திடவும், திட்டமிடப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வசிக்கின்ற மக்களை போஸ்ட்மாஸ்டர்களுக்கு நன்கு தெரியும் என்பதால் அவர்களை விசாரணை அதிகாரியாக கொண்டு திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.


தினகரன் 

மேலும்

உறவுகளேமசமகிழ்சியையும்என்சிறுவன் தன உயிரையும் ப்ப்ருட்படுதாமலல் முடிந்தது உங்களுக்காக 
பிராதிப்ப்பதே . எம் மண்ணிலும் 
கடும் மழை மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் .....

சமூக தளங்களில் வரும் செய்திகள் 
ஆறுதலையும்  தருகிறது 
தன்னால் முடிந்த உதவியை 
செய்து வருகின்றனர் . ஒரு சிறுவன் 
தன உயிரையும் பொருட் படுத்தாமல்  மான் குட்டியை காப்பாரியுல்லான் . இந்த நேரத்தில் 
அரசியல் காபுனர்ச்சியோ விளம்பரமோ குற்ற சாட்டுகளோ 
வேண்டாம் .ஒவ்வொருவரும் முடிந்தவரை உதவுவோம் 

மேலும்

இயற்கை அன்னையே கொஞ்சம் கருணை காட்டம்மா 
-----------------
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!
-----------------
போதுமம்மா நீ கோராத்தாண்டவம் ஆடியது . 
தண்ணீரின் அளவு கூடி கண்ணீரின் கூடிவிட்டதம்மா ....!!!

குழந்தைகள் ....
முதியவர்கள் ....
கர்ப்பிணி தாய்மார்கள் ....
நோயாளிகள் .....
விசேட திறனாளிகள்....
படும் வேதனையை வரிகளால் ...
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

வீட்டோடிருந்த வளர்ப்பு பிராணிகள் .....
ஊர்வன ,பறப்பன . நடப்பன ....
படும் வேதனைகள் வரிகலாளால்....
வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை ....!!!

அன்புள்ள வர்த்தகர்களே .....
நீங்கள்படும் வேதனைகள் உலகம் ....
அறியும் உங்களுடம் இருக்கும் இருப்பை ....
உள்ளவிலைக்கே வழங்கி தவிக்கும் ...
மக்களுக்கு உதவிசெய்வீர்களாக .....!!!

அரசியல் வாதிகளே ....
எல்லாவற்ரையும் அரசியலாக்காதீர்கள் .....
மக்களின் துன்பத்தை இலாபமாக ....
பயன்படுத்தாதீர் ......!!!

என் உறவு மக்களே ....
இப்போது யாரையும் எதிர்பார்காதீர் .....
முடிந்தவரை அருகில் உள்ளவர்கள் ....
அருகில் உள்ளவர்களுக்கு உதவுவதே ....
இப்போதைய கடமை .....
உயிரை காப்போம் .....!!! 
அருகில் உள்ள உறவை காப்போம் ....!!!

இது கவிதையல்ல என் தவிப்பு ....
வரிகள் கூட வரமறுக்கிறது ....
உறவுகள் தவிக்கும்போது ....
கவிதைகள் எப்படி வரும் ....?

+
உயிரை காப்போம் ,உறவுகளை காப்போம் ....!!!

மேலும்

என் அருமை கவிதை பிரியர்களே 
--------------------
அன்பு உள்ளங்களே

உருண்டோடியது 50 ஆண்டுகள் (பொன்விழா ) .16.11.2015  ஆம் இன்று அகவையில் 50 வருடத்தை கொண்டாடுகிறேன் ...
வாழ்கை துணையை பெற்று 25 ஆண்டுகள் (வெள்ளிவிழா ) 25.10.2015 கொண்டாடுகிறேன் .
ஆசிரிய பணியில் 30 ஆண்டுகளை கடந்து ( முத்துவிழா) பணியாற்றுகிறேன் .
உங்கள் அனைவரின் அன்புக்கு என்னால் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது  எல்லோரும் எல்லாம் பெற்று இன்பமாய் வாழ்வோம் 

மேலும்

உள்ளத்தால் வாழ்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி வாழ்க வளமுடன் 17-Nov-2015 2:57 pm
வாழ்த்திய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி இறைவன் துணையால் தொடர்வேன் நன்றி நன்றி 17-Nov-2015 2:56 pm
எல்லா நலன்களும் பெற்று நீடூழி வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள் .. 17-Nov-2015 2:31 pm
அருமை கவிஞரே... தங்களின் பங்களிப்பு இந்த தளத்திற்கு பெரும் பாக்கியமாகவே கருதுகிறேன்... தங்களை போன்ற ஒரு சிலரின் படைப்பில் இந்த தளம் இன்னும் உயிரோட்டமாகவே இருந்திருக்கிறது... எல்லாவற்றிகும் வாழ்த்துக்கள்... தங்கள் கலை பணிக்கும் நன்றிகள்... தொடர்ந்து எழுதுங்கள... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 17-Nov-2015 12:14 am

தீபாவளி 
கொண்டாடும் அன்பர்கள் 
அனைவருக்கும் 
என் இனிய தீபாவளி 
வாழ்த்துக்கள் 
+
கே இனியவன்

மேலும்

நன்றி நன்றி சகோதரி நீங்களும் உங்கள் குடும்பமும் வாழ்க வளமுடன் 10-Nov-2015 10:51 am
நனறி ! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் ! 10-Nov-2015 10:43 am

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார்.


பிள்ளையாருடன் ஒரு ‘செல்ஃபி’: விநாயகர் சதுர்த்தியை குடும்பத்துடன் கொண்டாடிய சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடியுள்ளார்.

இன்று இந்தியா முழுவதும் அனைவரும் விநாயகர் சதுர்த்தியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் மும்பையில் நடந்த வழிபாடுகளில் சச்சின் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூன் ஆகியோருடன் கலந்து கொண்டார்.

விநாயகருடன் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட செல்ஃபியை தனது பேஸ்ஃபுக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார் சச்சின்.

மேலும்

மீனவரின் வலையில் சிக்கிய வினோத மீன்: அணுக்கசிவின் எதிரொலியா?


ஜப்பானில் புக்குஷிமா அணுக் கசிவு இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் மீன் பிடித்துக் கொண்டிந்த மீனவர் ஒருவரின் வலையில் இராட்சத உருவம் உடைய மீன் ஒன்று அகப்பட்டுள்ளது.

இரண்டு மீற்றர்கள் வரை நீளமான இந்த பயங்கர தோற்றம் கொண்ட மீன் ஓநாய் மீன் என அழைக்கப்படுகின்றது.

-

மேலும்

மேலும்...

மேலே