எழுத்து எண்ணம்

(Eluthu Ennam)

புதிய எண்ணம்


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மனதை மயக்கும் தமிழ் காதல் பாடல்கள் உங்களுக்காக

மேலும்

நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் - டிவி தொகுப்பாளர் நிஷா திருமண ஆல்பம்!http://eluthu.com/images/data/ennam/medium/f2/27151/fbshx27151.jpg

மேலும்

ரொம்ப சின்ன ஆல்பமா இருக்கே...! அதான் ரெண்டு தடவ போடுறீங்களா...? 26-Nov-2015 6:38 pm

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான்

அமீர்கானின் சர்ச்சையான கருத்து பற்றி ஏ.ஆர்.ரகுமான் - Cineulagam

இந்தியாவை
விட்டு வெளியேற மனைவி நினைத்ததாக பாலிவுட் நடிகர் அமீர்கான் நேற்று
கூறியது நாடு முழுவதும் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு ஆதரவாக
சிலரும், எதிராக பலரும் கருத்து தெரிவித்தனர்.

இப்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான், தனக்கும் அப்படி சிலமுறை நேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

"Muhammad
: The Messenger of God" என்ற ஈரானிய படத்திற்கு இசையமைத்த போது, மும்பையை
சேர்ந்த ஒரு இஸ்லாமிய அமைப்பு ஏ.ஆர்.ரகுமானுக்கு பத்வா செய்தது
குறிப்பிடத்தக்கது.

அமீர் கானின் கருத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், வன்முறை தவிர எந்தஒரு விதமான போராட்டமும் சரியே என கூறியுள்ளார்.

மேலும்

பா.ஜ.க. காரர்களுக்கு இவர்களும் சளைத்தவர்கள் இல்லை போலும். சில நாட்களுக்கு முன்னர், ஒரு தமிழ் நடிகரும் இப்படித்தான் நாட்டைவிட்டே ஓடப் போகிறேன் என்றார். தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் அதைத் தீர்க்கத் தெரியாமல், (பிரச்னையே தங்களால்தான் என்பதையும் உணராமல்) ஓடிப் போவதை வீரமாக நினைத்துப் பேசுகின்றனர். இந்துத் தீவிரவாதிகள் கொடுமை இந்தியாவில் மட்டுந்தான். முஸ்லீம் தீவிரவாதிகள் கொடுமை உலகளாவியது. அரேபிய முஸ்லீம்கள் இந்திய முஸ்லீம்களை முஸ்லீம்களாகவே மதிப்பதில்லை. அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ் எங்குச் சென்றாலும் முஸ்லீம்களைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன்தான் பார்ப்பர். அந்தளவிற்கு இசுலாமியத் தீவிரவாதிகள் செய்துவிட்டனர். 26-Nov-2015 8:44 am

வேதாளம் வசூல் 8 நாட்களில் ரூ.100 கோடி

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன்
உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வேதாளம்’. அனிருத்
இசையமைத்திருந்த இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார்.


தீபாவளி தினத்தன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும்
வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மேலும் வசூலிலும் இதுவரை எந்த ஒரு தமிழ்
படமும் எட்டாத சாதனையை நிகழ்த்தியிருப்பதாக விநியோகஸ்தர்கள்
தெரிவித்துள்ளனர்.

முதல் 6 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் ரூ.60 கோடி வசூல் ஈட்டியதாக
கூறப்பட்டது. தற்போதைய நிலவரப்படி 8 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்ததாக
கூறியுள்ளனர். இப்படத்தில் வில்லனாக நடித்த ராகுல் தேவ் இதனை தெரிவித்து
உள்ளார். அவர் வெளியிட்ட வசூல் விவரங்கள் (தோராயமாக) வருமாறு:-


தமிழ்நாடு – ரூ.60 கோடி,

கேரளா – ரூ.5.12 கோடி,

கர்நாடகா -ரூ.6.73 கோடி,

இந்தியாவின் இதர பகுதிகளில் -ரூ. 2.10 கோடி,

வெளிநாடுகளில் – ரூ.27 கோடி,

மொத்தம் – ரூ.100.95 கோடி.

மேலும்

அடடா தமிழ் நாட்டில் மட்டும் 60 கோடி - வறுமையில் வாடும் , ஒவ்வொரு விசயத்திற்கும் இலவசங்களையும் / நிவாரண உதவிகளை எதிர்பார்க்கும் ( அதுவும் விடாது பெய்த மழையிலும்) - மு.ரா. 20-Nov-2015 5:11 pm
இந்த நூறு கோடிக்கும் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள், நடிக நடிகையர் அனைவரும் வரி கட்டிவிட்டார்களாமா? 20-Nov-2015 12:09 am

கமல் ஹாசன் - அமலா மீண்டும் ஜோடியாக நடிக்கவிருக்கிறார்கள்


'சத்யா', 'பேசும் படம்' ஜோடியான கமல் - அமலா இருவரும் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

 "நீண்ட நாட்கள் கழித்து மீண்டும் அமலாவுடன் இணைந்து ஒரு படம்
நடிக்கவிருக்கிறேன். அப்படத்தை இயக்குநர் ராஜீவ் குமார் இயக்கவிருக்கிறார்.
ஷரினா வகாப் முக்கிய பாத்திரத்திலும், மேலும் ஒரு நாயகியும்
நடிக்கவிருக்கிறார்கள். அந்த நாயகி யார் என்பது குறித்து விரைவில் அறிவிக்க
இருக்கிறோம்.


இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாக இருக்கிறது"
என்று ஹைதராபாத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்
கமல். 

மேலும்

தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் கொண்டவலசா லட்சுமண ராவ் மரணம் 


தெலுங்கு திரைப்பட நகைச்சுவை நடிகர் கொண்டவலசா லட்சுமண ராவ் (69) மோசமான உடல்நிலை காரணமாக நேற்று முன்தினம் இரவு காலமானார். ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் ஆகியவற்றால் இவரின் உடல்
நலம் பாதிப்படைந்தது. நேற்று முன் தினம் இரவு மேலும் உடல் நிலை பாதிக்கப்
பட்டதால், இவரை அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் சிகிச் சைக்காக
கொண்டுபோய் சேர்த்தனர். அங்கு லட்சுமண ராவ் மரண மடைந்தார்.


அவரின் மறைவை அறிந்த தெலுங்கு திரையுலக பிரமுகர்கள் நேரில் சென்று அஞ்சலி
செலுத்தினர். அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறும் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்

சிவகார்த்திகேயன் தனுஷ் இருவருக்கும் நடுவில் நடக்கும் மவுனப் போர் நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டேயிருக்கிறது.சிவாவுக்கு நேரடி போட்டியாளரான விஜய் சேதுபதியை வளர்த்துவிடும்
முயற்சியில் இறங்கிய தனுஷுக்கு பெரு வெற்றி. யெஸ்... நானும் ரவுடிதான்
சூப்பர் டூப்பர் வெற்றி. இதையடுத்து மீண்டும் விஜய் சேதுபதியை தனது
தயாரிப்பில் நடிக்க வைக்க முடிவு செய்து, உடனே கால்ஷீட்டும் வாங்கிவிட்டார்
தனுஷ். “எப்ப சிவகார்த்திகேயன் படம் தியேட்டருக்கு வருதோ, அன்னைக்கு இந்த
படத்தை இறக்குறோம்...” என்று தனுஷ் ஆபிசில் வைத்து ‘சம்பவம்’ பண்ணிக்
கொண்டிருக்கிறார்களாம். இந்த படத்தை பற்றி விதிக்கு ஒரு மதிப்பு
இருக்குமில்லையா? அப்போது தெரியும்... அது நரி பல்லா? வெறும் பொறி நெல்லா?
என்று!

மேலும்

லேடி சூப்பர் ஸ்டாராக மாறிய நயன்தாரா

அடுத்தடுத்து தொடர் வெற்றிகளின் மூலம் பாக்ஸ் ஆபிசை முழுவதுமாக தனது வசப்படுத்தியிருக்கிறார் தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவரானார் நடிகை நயன்தாரா

இவரது  நடிப்பில் வெளியான தனி ஒருவன், மாயா மற்றும் நானும் ரவுடிதான் ஆகிய 3 படங்களும் அடுத்தடுத்து
வெற்றி பெற்று ஹாட்ரிக் நாயகி என்ற அந்தஸ்தை நயனுக்கு பரிசளித்திருக்கிறது. 

மேலும்

நடிகர் சங்க டிரஸ்ட்களில் ஒருவராகும் கமல் ஹாசன்

சென்னையில் நேற்று நடிகர் சங்க செயற்குழுக் கூட்டம் நடந்தது. அப்பொழுது நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற வாக்குறுதிகள் அனைத்தும்
நிறைவேற்றப்படும் என்று உறுதி அளித்தார். மேலும் நடிகர் சங்கத்தின் டிரஸ்டிகளில் ஒருவராக இருக்க
கமல் சம்மதம் தெரிவித்ததாகவும் விஷால் தெரிவித்தார். 

மேலும்

இன்று ஆயுத பூஜை முன்னிட்டு திரையில் களம் இறங்கும் நானும் ரவுடிதான் மற்றும் 10 என்றதுக்குள்ள படத்தின் டிரைலெர்கள்


மேலும்

மேலும்...

மேலே